சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மே | ஓர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஏ) ; மேம்பாடு ; அன்பு . |
| மேக்கடித்தல் | வஞ்சித்தல் ; ஆப்பறைதல் . |
| மேக்கு | மேலிடம் ; மேலான தன்மை ; மேற்கு ; ஆப்பு ; மர ஆணி . |
| மேகக்கல் | ஆட்டுரோசனை . |
| மேககர்ச்சனை | மேகங்களினூடே உண்டாகும் ஒலி . |
| மேககர்ச்சிதம் | மேகங்களினூடே உண்டாகும் ஒலி . |
| மேககாலம் | கார்காலம் . |
| மேகச்சிரங்கு | கெட்டநீரால் தோன்றும் சிரங்கு வகை . |
| மேகச்சிலை | மாக்கல் ; சுக்கான்கல் . |
| மேகசஞ்சாரம் | மேகநோய் படருகை ; மழை முகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு . |
| மேகசம் | முத்து . |
| மேகசாரம் | கருப்பூரம் . |
| மேகசாலம் | முகிற்கூட்டம் ; ஒரு மணிவகை . |
| மேகதனு | இந்திரவில் . |
| மேகதாரி | மயிலிறகு . |
| மேகதீபம் | மின்னல் . |
| மேகநாதம் | மேகமுழக்கம் ; சிறுகீரை ; பலாசமரம் ; பச்சிலை . |
| மேகநாதன் | இராவணனின் மகனான இந்திரசித்து ; வருணன் ; நவச்சாரம் . |
| மேகநீர் | வெட்டைநோய் ; கெட்டநீர் . |
| மேகப்படை | தோலின்மேல் உண்டாகும் சொறிவகை . |
| மேகப்புள் | வானம்பாடி . |
| மேகபடலம் | ஒரு கண்ணோய்வகை ; மேகத்தொகுதி ; மேகநோயாற் படரும் புண்வகை . |
| மேகபந்தி | மேகக்கூட்டம் . |
| மேகம் | முகில் ; எழுவகை மேகம் ; நீர் ; குயில் ; காண்க : முத்தக்காசு ; தீநீர் ; தீநடத்தை , மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய் ; வெள்ளைநோய் . |
| மேகமண்டலம் | மேகம் திரியும் வானவெளி . |
| மேகமூட்டம் | மேகம் பரந்துநிற்கை . |
| மேகமூர்ந்தோன் | இந்திரன் . |
| மேகயோனி | புகை . |
| மேகரணம் | பறங்கிப்புண் ; குட்டம் . |
| மேகராகக்குறிஞ்சி | குறிஞ்சித்திறத்தின் ஒன்று . |
| மேகராகம் | பாலையாழ்த்திறவகை . |
| மேகராடி | மயிலடிக் குருந்துமரம் . |
| மேகலாபதம் | இடை . |
| மேகலை | அரைஞாண் ; பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய நாணலாலியன்ற முப்புரிக்கயிறு ; மகளிர் இடையிலணியும் ஏழு கோவையுள்ள அணிவகை ; ஆடை ; புடைவை ; கோயில்விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை ; தூணைச் சுற்றியுள்ள வளையம் ; ஓமகுண்டத்தைச் சுற்றி இடுங்கோலம் ; மலைச்சரிவு ; மேருமலையின் சிகரத்தொடர் ; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி . |
| மேகவண்ணக்குறிஞ்சி | மேகவண்ணப் பூவுள்ள செடிவகை . |
| மேகவண்ணன் | மேகம்போன்ற கருநிறமுள்ள திருமால் . |
| மேகவர்ணம் | கருநீலம் ; பலபடியாக மாறித்தோன்றும் நிறம் . |
| மேகவருணை | அவுரி . |
| மேகவாகனன் | இந்திரன் ; சிவன் ; கருங்கல . |
| மேகவாய் | தயிர் . |
| மேகவாயு | மேகநோய் வெப்பத்தாலுண்டாகும் வாயு ; வாதநோய்வகை . |
| மேகவிடுதூது | காதலரிடம் மேகத்தைத் தூது விடுவதாகக் கூறும் நூல்வகை . |
| மேகவிநாசம் | மழைமேகம் கலைகை . |
| மேகவியாதி | கெட்டநீரால் உண்டாகும் நோய்வகை . |
| மேகவூறல் | கெட்டநீர் பரவுகை ; காண்க : மேகப்படை . |
| மேகவெட்டை | வெட்டைநோய்வகை . |
| மேகனம் | ஆண்குறி . |
| மேகாந்தகாரம் | மழைக்காலிருட்டு . |
| மேகாநந்தி | மயில் . |
| மேகாரம் | மயில் . |
| மேகாரி | காண்க : அறுகு ; அவரை . |
| மேகை | இறைச்சி . |
| மேங்காவற்காரன் | நாட்டில் களவு முதலியன நேராமல் காப்பவன் . |
| மேசகம் | இருள் ; கருமை ; புகை ; முகில் ; விரிந்த மயில்தோகை ; குதிரையின் பிடரிமயிர் . |
| மேசை | காலுள்ள பலகை ; சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம் . |
| மேட்டி | அகந்தை ; மேன்மை ; தலைவன் ; உதவி வேலைக்காரன் ; ஊர்த்தலைவனுக்கு விடப்பட்ட மானியம் . |
| மேட்டிமை | அகந்தை ; மேன்மை ; தலைமை . |
| மேட்டுநிலம் | உயர்வான பூமி . |
| மேட்டுப்பாய்ச்சல் | நீர் ஏறிப் பாயவேண்டியதான மேட்டுநிலம் ; மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை ; அரும்பணி . |
| மேடகம் | ஆடு ; இராசிமண்டலத்தின் முதற்பகுதி . |
| மேடம் | காண்க : மேடகம் சித்திரைமாதம் ; காப்புச்சட்டை . |
| மேடமதி | சித்திரைமாதம் . |
| மேடமாதம் | சித்திரைமாதம் . |
| மேடவீதி | இடபம் , மிதுனம் ; கடகம் ; சிம்மம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி . |
| மேடன் | மேடராசிக்கு உடையவனான செவ்வாய் . |
| மேடாயனம் | மேடராசியில் சூரியன் புகுங்காலம் ; காண்க : மேடவீதி . |
| மேடு | உயரம் ; சிறுதிடர் ; பெருமை ; வயிறு ; மேலிடம் . |
| மேடூகம் | சுவர . |
| மேடை | செய்குன்று ; மாடி ; தளமுயர்ந்த இடப்பகுதி . |
| மேண்டம் | ஆடு . |
| மேத்தியம் | தூய்மை ; சீரகம் . |
| மேத்தியாசம் | வசம்பு . |
| மேத்திரம் | ஆட்டுக்கட . |
| மேதகம் | கோமேதகம் ; மதிப்பு ; மேன்மை ; பாடாணவகை . |
| மேதகவு | மேன்மை , மதிப்பு . |
|
|