மேதகு முதல் - மேல்விலாசம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மேதகு மேன்மைபொருந்திய , மேன்மையான .
மேதகுதல் மேன்மையாதல் .
மேதகை மேன்மை .
மேதசு கொழுப்பு .
மேதம் கொலை ; கொழுப்பு ; வேள்வி .
மேதரம் ம¬ .
மேதரவர் மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார .
மேதவர் மூங்கில் வேலை செய்து வாழும் சாதியார .
மேதன் புத்தியுள்ளவன .
மேதாவி புத்தியுள்ளவன .
மேதாவினி காண்க :நாகணவாய்ப்புள் .
மேதி எருமை ; ஓர் அரசன் ; வெந்தயம் ; பொலி காளைகளைக் கட்டும் கட்டை ; நெற்களம் .
மேதித்தலைமிசைநின்றாள் கொற்றவை ; துர்க்கை .
மேதியான் எருமையை யூர்பவனாகிய யமன .
மேதினி உலகம .
மேதினிபடைத்தோன் பூமியைப் படைத்தவனாகிய பிரமன் ; பூமிநாயகனாகிய திருமால் .
மேதை பேரறிஞர் ; பேரறிவு ; மேன்மை ; புதன் ; கள் ; கொழுப்பு ; இறைச்சி ; தோல் ; நரம்பு ; உடலிலுள்ள யோகத்தானங்களாகிய பதினாறு கலையுள் ஒன்று ; பொற்றலைக் கையாந்தகரை .
மேதைமை பேரறிவு .
மேதையர் புலவர் .
மேந்தலை மேன்மை ; கப்பலின் காற்றுத்தாக்கும் பக்கம் ; தலைவன் .
மேந்தி வெந்தயம் .
மேந்திகை வெந்தயம் .
மேந்தோல் காண்க : மீத்தோல் .
மேந்தோன்றுதல் மேம்பட்டு விளங்குதல் .
மேம்படுதல் சிறத்தல் .
மேம்படுநன் மேம்பாடுற்றவன் .
மேம்பாடு சிறப் .
மேம்பார்வை வேலைகளைக் கண்காணிக்கை ; அழுத்தமில்லாத நோக்கு .
மேம்பாலம் இருப்புப்பாதை , ஆறு முதலியவற்றின் மேலே கட்டப்பட்ட பாலம் ; கீழுள்ள ஆறு அல்லது வாய்க்காலுக்கு மேலே குறுக்காக நீராடும்படி கட்டிய பாலம .
மேய்க்கி ஆடுமாடு முதலியன மேய்ப்பவன் .
மேய்கானிலம் காண்க : மேய்ச்சற்றரை .
மேய்ச்சல் மேய்கை ; மேய்ச்சற்றரை ; தீனி ; கேடுற்றது ; காமுகனாய்த் திரிகை .
மேய்ச்சற்றரை ஆடுமாடுகள் மேயுமிடம் .
மேய்த்தல் புல் முதலியவற்றை விலங்குகள் தின்னச்செய்தல் ; மருந்து முதலியன செலுத்துதல் ; அடக்கியாளுதல் .
மேய்தல் விலங்கு முதலியன உணவுகொள்ளுதல் ; பருகுதல் ; கெடுத்தல் ; மேற்போதல் ; திரிதல் ; காமுகனாய்த் திரிதல் ; கவர்ந்து நுகர்தல் ; கூரை முதலியன போடுதல் .
மேய்ப்பன் ஆடுமாடுகளை மேய்ப்பவன் ; இடையன் ; அடக்கியாளுபவன் .
மேய்ப்பு மேய்க்கை ; மேய்க்கைக்குரிய நிலம் .
மேய்மணி நாகமணி .
மேயம் அளவிடற்குரியது ; அறியத்தகுந்தது ; உவமேயம் .
மேயல் மேய்கை ; மேயும் புல் முதலியன ; கவர்ந்து நுகர்கை .
மேயவன் உறைபவன் .
மேயான் உறைபவன் .
மேரு கோள்கள் சுற்றிவரும் பொன்மலை ; மலை ; பன்னீர்ச்சாடிவகை ; உயரமான கோயில் ; பெண்குறி ; இருக்கைப்பலகை ; காண்க : மேருமணி .
மேருத்தீபம் கடவுளர்முன் எடுக்கும் அடுக்குவிளக்கு .
மேருமணி செபமாலை முதலியவற்றின் நாயகமணி .
மேருவில்லாளன் மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபிரான் .
மேருவில்லி மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபிரான் .
மேருவின்வாரி பொன்மணல் .
மேரை வகை ; மரியாதை : குடிமக்களுக்குக் களத்தில் கொடுக்கும் தானியம் ; எல்லை ; அடக்கம் .
மேல் மேலிடம் ; அதிகப்படி ; வானம் ; மேற்கு ; தலை ; தலைமை ; மேன்மை ; உயர்ந்தோர் ; உடம்பு ; இடம் ; மேலெழுந்தவாரியானது ; முன்புள்ளது ; பின்புள்ளது ; அதிகமாக ; முன் ; பற்றி ; அப்பால் ; இனி ; ஒரு முன்னொட்டு ; ஏழனுருபு .
மேல்கடல் மேல்திசையிலுள்ள சமுத்திரம் .
மேல்கால் கோடைக்காற்று .
மேல்காற்று கோடைக்காற்று .
மேல்கை மேடு ; மேற்கு ; அப்பாலானது ; உயர்தரம் .
மேல்சாந்தி கோயிலின் தலைமைப் பூசாரி .
மேல்பாதி மேல்வாரம் ; மேற்குப்பகுதி .
மேல்பால் மேற்குப்பக்கம் .
மேல்மட்டம் மேல்புறத்தின் மட்டம் ; மட்டப்பலகை .
மேல்மடை நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம் ; மேட்டிலுள்ள வாய்க்கால் .
மேல்மாடி வீட்டின் மேனிலைக்கட்டு .
மேல்முகம் மேற்குப்பகுதி .
மேல்மூச்சு முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு ; காண்க : மேற்சுவாசம் .
மேல்வக்கணை காண்க : முகவரி ; வீண்பேச்சு .
மேல்வட்டம் நகரம் முதலியவற்றின் வெளிச்சுற்று ; முதன்மை ; மதிப்பு .
மேல்வரிச்சட்டம் முன்மாதிரியாய் அமைந்தது .
மேல்வரிசை மேலிடமாக அமைந்துள்ள வரிசை ; செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர் .
மேல்வருதல் எழுதல் ; ஒருவர்மீது எதிர்த்து வருதல் ; நெருங்கிவருதல் .
மேல்வரும்படி சம்பளத்திற்குமேல் அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம் .
மேல்வாசி அறம் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம் ; மதிப்பிற்குமேல் விளைச்சல் காணும்போது மேல்வாரதாருக்கு அதிகப்படியாகக் கிடைக்குந் தானியம் ; அயல்நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம் .
மேல்வாய் ஒன்று முதலாய் மேற்பட்ட கணக்கு ; வாயின் மேற்பகுதி .
மேல்வாரதார் நிலத்தின் சொந்தக்காரர் .
மேல்வாரம் விளைவிலிருந்து நிலச்சொந்தக்காரருக்குக் கொடுத்தற்குரிய தானியப்பகுதி .
மேல்விசாரணை கண்காணிப்பு ; மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை .
மேல்விரி படுக்கையின் மேல்விரிப்புச் சீலை .
மேல்விலாசம் கடிதத்தின்புறத்தே கடிதத்தைப் பெறுவோரின் ஊர் , பெயர் முதலியன குறிக்கும் வாசகம் , முகவரி .