சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மேல்விழுதல் | முன்சென்று பாய்தல் ; வலியப்புகுதல் ; ஊக்கத்துடன் வினையில் முந்துதல் . |
மேல்விளைவு | பிற்பயன் ; மேற் செய்யவேண்டுஞ் செயல் ; ஓராண்டில் அதிகப்படி பயிரிட்டுப் பெறும் விளைச்சல் . |
மேல்வினை | பிற்பயன் ; காண்க : ஆகாமியம் . |
மேல்வீடு | மெத்தைவீடு ; மாடி ; வீடுபேறு . |
மேல்வெள்ளம் | முதல் வெள்ளத்திற்குப்பின் வரும் வெள்ளம் . |
மேலகம் | மாடி . |
மேலங்கம் | வெளிப்பகட்டு . |
மேலங்கி | மேற்சட்டை . |
மேலவரிறைவன் | இந்திரன் ; முருகன் . |
மேலவன் | பெரியோன் ; அறிஞன் ; தேவன் ; மேலிடத்துள்ளவன் . |
மேலனம் | கலக்கை ; கூட்டம் ; பழக்கம் . |
மேலாக்கு | மகளிர் மார்பின் குறுக்கே அணியும் சீலை . |
மேலாடை | தோள்மேல் அணியும் ஆடை . |
மேலாத்தம் | மேற்புறமாக்குதல் . |
மேலாதல் | சிறத்தல் . |
மேலாப்பு | மேற்கட்டி . |
மேலாயினார் | உயர்ந்தோர் . |
மேலார் | காண்க ; மேலாயினார் ; வீரர் . |
மேலாலம் | மழை . |
மேலாழியார் | வித்தியாதர மன்னர் . |
மேலிடுதல் | அதிகரித்தல் ; முன்சென்று பாய்தல் ; மேலே எழுதல் ; வாந்தியாதல் ; மேற்கொள்ளுதல் . |
மேல¦டு | மேலிடுவது ; குதிரைச்சேணம் முதலியன ; மேற்பார்வை ; மிகுதியாக இருத்தல் ; கூட்டுக்கறி ; மகளிர் காதணிவகை ; அடுத்த தடவை ; வெளிப்பகட்டு ; வரிசை அல்லது அடுக்கில் மேலிருப்பது . |
மேலுக்கு | அந்தரங்கமாக அல்லாமல் ; மேற்புறமாக . |
மேலுக்கெடுத்தல் | வாயாலெடுத்தல் . |
மேலும் | பின்னும் . |
மேலுலகம் | தேவருலகம் ; பூலோகம் முதல் ஏழு உலகங்கள் . |
மேலுறுதி | துணைச்சாட்சி . |
மேலெழுச்சி | மேற்கிளம்புகை ; செருக்கு ; ஊன்றிநோக்காத் தன்மை . |
மேலெழுத்திடுதல் | ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல் . |
மேலெழுத்து | சாட்சிக் கையெழுத்து ; காண்க : முகவரி ; அரசியற் கணக்கதிகாரி ; மேலதிகாரி அனுப்புங் கடிதம் ; தலைமை எழுத்தாளன் . |
மேலெழுந்தவாரி | உழைப்பின்மை ; ஊன்றிக் கவனியாமை . |
மேலேழுலகம் | பூலோகம் , புவலோகம் , சுவர்க்கலோகம் , சனலோகம் , தவலோகம் , சத்தியலோகம் , மகலோகம் என்று ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த ஏழுவகைப்பட்ட மேல் உலகங்கள் . |
மேலை | மேலிடமான ; வருங்காலம் ; மேற்கு ; முந்தின ; அடுத்த ; முன்பு ; அஞ்சனக்கல் ; மை . |
மேலைக்கரை | மேற்குக்கரை ; காண்க : மேல்பால் . |
மேலையுலகு | துறக்கம் . |
மேலைவீடு | காண்க : மேல்வீடு . |
மேலைவெளி | பரமன் உறையும் ஞானாகாசம் . |
மேலொப்பம் | கையெழுத்து ; எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக்கொள்ளுகை . |
மேலோர் | மேலிடத்தோர் ; உயர்ந்தோர் ; புலவர் ; முன்னோர் ; வானோர் . |
மேவருதல் | பொருத்தமாதல் . |
மேவல் | சார்தல் ; ஆசை ; கலக்கை . |
மேவலர் | பகைவர் . |
மேவார் | பகைவர் . |
மேவித்தல் | தங்கச்செய்தல் . |
மேவினர் | உறவோர் ; நண்பர் . |
மேவு | விருப்பம் ; மேம்பாடு . |
மேவுதல் | அடைதல் ; விரும்புதல் ; நேசித்தல் ; உண்ணுதல் ; ஓதுதல் ; நிரவிச் சமனாக்குதல் ; மேலிட்டுக்கொள்ளுதல் ; வேய்தல் ; அமர்தல் ; பொருந்துதல் . |
மேழகம் | கவசம் ; ஆடு . |
மேழம் | கவசம் ; ஆடு . |
மேழி | கலப்பை ; கலப்பையின் கைப்பிடி . |
மேழிச்செல்வம் | உழவுச்செல்வம் . |
மேழிப்படை | கலப்பை . |
மேழிப்படையோன் | பலதேவன் . |
மேழியர் | உழவர் ; மருதநில மக்கள் ; வேளாளர் . |
மேழிவாரம் | வேளாண்மைச் செலவு . |
மேழை | கஞ்சி ; கரடி ; கொம்பில்லாத விலங்கு . |
மேளக்கச்சேரி | கச்சேரியாக மேளவாத்தியம் வாசிக்கை . |
மேளகர்த்தா | பண்களுக்கு மூலமாகிய பண்கள் . |
மேளகாரன் | மேளம் அடிப்போன் ; வாத்தியத்தொழில் செய்யும் சாதியான் . |
மேளதாளம் | நாகசுரம் , ஒத்து , தவில் , தாளம் என்பவற்றின் தொகுதி ; பகட்டு . |
மேளம் | வாத்தியப்பொது ; பண் உறுப்பு ; நாகசுரம் , ஒத்து , தவில் , தாளம் என்பவற்றின் தொகுதி , காண்க : மேளகர்த்தா ; தவில் வாத்தியம் ; நல்ல சாப்பாடு ; கவலையற்ற இன்பவாழ்வு ; கலவைமருந்து . |
மேளமடித்தல் | தவிலடித்தல் ; வெளிப்படுத்தல் ; பக்கவாத்தியங்களோடு நாகசுரம் வாசித்தல் ; ஒத்துப்போதல் ; வருந்தி முயலுதல் . |
மேளனம் | கூட்டம் ; கலக்கை ; இசைக்கருவிகளின் சுருதியியைபு . |
மேளித்தல் | கூட்டுதல் . |
மேற்கட்டி | மேல்விதானம் . |
மேற்கட்டு | மேல்வீடு ; துணையாதாரம் ; மாடி ; மேலாடை ; அலங்காரம் . |
மேற்கத்தியான் | மேற்குநாட்டவன் . |
மேற்கதி | வீடுபேறு ; மேனோக்கிச் செல்லும் தன்மை . |
மேற்கதுவாய் | அளவடியுள் முதல் அயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
மேற்கதுவாய்த்தொடை | அளவடியுள் முதல் அயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
மேற்காது | காதின் மேற்புறம் . |
மேற்காவல் | மேல்விசாரணை ; மேல்விசாரணை செய்பவன் . |
மேற்கு | மேலைத்திசை . |
மேற்குடி | காணியாளர் . |
மேற்கூரை | வீட்டின்மேல் வேய்ந்த கூரை ; வீட்டின் கூரைப்பகுதி ; அடிநிலம் நீங்கலான கட்டடம் . |
![]() |
![]() |
![]() |