வத்துபரிச்சேதம் முதல் - வம்புத்தனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வத்துபரிச்சேதம் ஒன்று இன்ன பொருளாகத் தான் இருக்கும் இன்ன பொருளாக இராது என்று பொருளினால் அளவிடுகை .
வத்துளம் வட்டமானது ; சக்கரம் .
வத்தூரம் கீரைவகை .
வத்தை மரத்தோணி ; உள்வயிரமற்றது ; உயிர் வாழ்க்கை ; கூலி .
வதக்கம் வாடுதல் ; இளைப்பு .
வதக்குதல் வாட்டுதல் ; வருத்துதல் .
வதகம் இறப்பு .
வதகன் கொலைகாரன் .
வதங்கல் வாடியது ; ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம் ; உடல்வலியற்றவர் ; உடல்வலியற்றது .
வதங்குதல் வாடுதல் ; சோர்தல் .
வதந்தி புரளி ; உறுதிபடுத்தப்படாத பேச்சு ; பிரஸ்தாபம் .
வதம் கொலை ; நோன்பு .
வதரி இலந்தைமரம் ; காண்க : பதரிகாசிரமம் .
வதவல் வாடியது ; அரைக்காய்ச்சலானது ; உடல் வலியற்றவர் ; உடல் வலியற்றது .
வதறுதல் வாயாடுதல் ; திட்டுதல் ; மழலை மொழிதல் .
வதன் காண்க : வதகன் .
வதனம் முகம் ; முக்கோணத்தின் மேற்கோணம் .
வதாங்கம் நஞ்சு .
வதானியன் வரையாது கொடுப்போன் ; குபேரன் .
வதி விலங்கு முதலியன தங்குமிடம் ; சேறு ; வழி ; கால்வாய் .
வதிட்டன் வசிட்டன் ; பருத்தவன் ; பருத்தது .
வதிதல் தங்குதல் ; துயிலுதல் .
வதிர் செவிடு .
வதிரன் செவிடன் .
வதில் பிரதி ; விடை .
வதிள் பிரதி ; விடை .
வது மணமகள் ; மகனின் மனைவி ; மனைவி .
வதுக்கு நன்னிலை .
வதுகி வைக்கோல் .
வதுகை மனைவி .
வதுவர் குதிரைப்பாகர் ; யானைப்பாகர் .
வதுவை மணமகள் ; திருமணம் ; மணமாலை ; புணர்ச்சி ; வலாற்காரம் ; மணம் .
வதுவைச்சூட்டணி மணமாலை .
வதுவைநாற்றம் புதுமணம் .
வதுவைமுளை திருமணத்தில் ஒன்பதுவகைக் கூலம் விதைக்கும் பாலிகை .
வதூ காண்க : வது .
வதூவரர் மணமக்கள் .
வதை கொலை ; தொல்லை ; தேன்கூடு .
வதைத்தல் கொல்லுதல் ; வருத்துதல் ; மிகவருந்துதல் .
வந்தனம் வணக்கம் ; பணிவு ; நன்றிகூறும் மரியாதைச்சொல் ; முகம் .
வந்தனி கோரோசனை ; காண்க : வந்தனை .
வந்தனித்தல் பணிதல் .
வந்தனை வணக்கம் .
வந்தி வணக்கம் ; மங்கலப்பாடகன் ; புகழ்வோன் ; அரசர் புகழ் கூறுஞ் சூதன் ; பாணன் ; காண்க : வந்தியை ; கைவந்தி ; வலாற்காரம் ; கட்டாயம் ; முரண்டு ; சண்டை ; ஏணி .
வந்திகட்டுதல் வலாற்காரம் பண்ணுதல் .
வந்திகை கையில் தோளின்கீழ் அணியப்படும் அணிகலன் ; நுதலணிவகை ; அணிகலன் ; அழகு தேமல் ; மலடி ; காண்க : கைவந்தி .
வந்தித்தல் வணங்குதல் ; புகழ்தல் ; கட்டுதல் .
வந்தித்துநிற்போர் பாணர் .
வந்திபற்றுதல் வலிந்து கவர்தல் .
வந்திபாடம் புகழ்ந்து பாடிய பாட்டு .
வந்தியை மலடி .
வந்து காற்று ; ஓர் அசைச்சொல் .
வந்தேறி புதியதாகக் குடியேறியவன் ; இடையில் வந்தது .
வந்தேறுங்குடி ஓரூரில் புதிதாகக் குடியேறுங்குடி .
வந்தேறுதல் புதிதாக வந்து குடியேறுதல் .
வந்தை மலடி ; பெருமை ; புல்லுருவி .
வபனம் மயிர்களைதல் ; விதைத்தல் ; விதைத்தானியம் ; சுக்கிலம் .
வபு உடல் .
வபை வயிற்றுக் கொப்பூழினருகில் இருக்கும் நிணம் ; முதன்மையானது .
வம்சம் காண்க : வமிசம் .
வம்பக்கோட்டி பயனில்சொற்களைச் சொல்லுவோரின் கூட்டம் .
வம்படித்தல் காண்க : வம்பளத்தல் .
வம்பப்பரத்தர் புதிய நுகர்ச்சியை விரும்புங்காமுகர் .
வம்பப்பரத்தை மிகுந்த காமத்தை உடைய கணிகை .
வம்பமாக்கள் அயல்நாட்டு மாந்தர் .
வம்பமாந்தர் புதியோர் ; ஒரு கூட்டத்திலுஞ் சேராத மாந்தர் .
வம்பமாரி காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை .
வம்பல் திசை .
வம்பலன் புதியோன் ; அயலான் ; வழிப்போக்கன் .
வம்பலாட்டம் குழப்பம் .
வம்பளத்தல் பயனில்லாத சொற் பேசுதல் ; அவதூறு பேசுதல் ; சரசம் பேசுதல் ; தீது பேசுதல் ; நிந்தைபேசுதல் .
வம்பன் பயனற்றவன் ; வம்பளப்போன் ; தீயோன் ; சோரபுத்திரன் .
வம்பி வம்பளப்பவள் ; பயனற்றவள் ; தீயமாது ; கருவண்டு .
வம்பு வஞ்சனை ; புதுமை ; நிலையின்மை ; பயனிலாமை ; வீண்பேச்சு ; பழிமொழி ; தீம்புச்சொல் ; படிறு ; சிற்றொழுக்கம் ; அவையல்கிளவி ; சரசச்செயல் ; சண்டை ; காண்க : வம்பமாரி ; சோரத்தில் பெற்றபிள்ளை ; உவமை ; மணம் ; அரைக்கச்சு ; முலைக்கச்சு ; யானைக்கச்சு ; கையுறை ; மேற்போர்வை ; பெரிய பானை ; மரவகை ; சிவிகையின் வளைகொம்பு .
வம்புத்தனம் வீண்பேச்சு ; குறும்பு ; வஞ்சகம் .