சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வம்புதும்பு | வீண்பழிச்சொல் ; குறும்புத்தனம் . |
| வம்புப்பேச்சு | வீண்பேச்சு . |
| வம்புவளர்த்தல் | காண்க : வம்பளத்தல் . |
| வம்மை | பெற்றோர் மணமகட்டுக் கொடுக்குஞ் சீர் . |
| வமனம் | வாயாலெடுத்தல் ; வாந்திசெய்மருந்து . |
| வமிசபரம்பரை | குலமுறை ; குலமுறையாய் வருவது . |
| வமிசம் | குலம் ; மூங்கில் ; வேய்ங்குழல் . |
| வமிசவிருத்தி | மரபிற்குரிய இயல்பு ; குலத்தைப் பெருக்குகை . |
| வமிசாவளி | மரபுவழி ; வமிசபரம்பரையைத் தெரிவிக்கும் அட்டவணை . |
| வய | வலி ; மிகுதி . |
| வயக்கம் | ஒளி ; விளக்கம் . |
| வயக்கு | ஒளி . |
| வயக்குதல் | விளங்கச்செய்தல் ; திருத்துதல் ; பழக்குதல் . |
| வயகுண்டம் | கவிழ்தும்பை . |
| வயங்கல் | கண்ணாடி . |
| வயங்குதல் | ஒளிசெய்தல் ; விளங்குதல் ; தெளிதல் ; தோன்றுதல் ; மிகுதல் ; நடத்தல் . |
| வயசானவன் | முதியவன் . |
| வயசு | காண்க : வயது . |
| வயசுகாலம் | இளமைப்பருவம் ; முதுமைப்பருவம் . |
| வயசுப்பிள்ளை | இளைஞன் ; பகுத்தறியும் பருவமடைந்தவன் . |
| வயஞானம் | உண்மையுணர்வு . |
| வயணம் | விதம் ; நிலைமை ; விவரம் ; உணவு முதலியவற்றின் வளம் ; நல்லமைப்பு ; நேர்த்தி ; காரணம் ; ஏற்றது . |
| வயத்தம்பம் | இளமைநிலை மாறாமல் நிறுத்தும் வித்தை . |
| வயத்தன் | வசப்பட்டவன் . |
| வயதரம் | கடுக்காய் . |
| வயது | அகவை ; ஆண்டு ; இளமை . |
| வயதுசென்றவன் | முதியவன் ; பகுத்தறியும் பருவமடைந்தவன் . |
| வயதுவருதல் | பகுத்தறியும் பருவமடைதல் . |
| வயதெற்றி | திப்பிலி . |
| வயந்தக்கிழவன் | காண்க : வயந்தமன்னவன் . |
| வயந்தகம் | மகளிர் தலைக்கோலத் தொங்கல் உறுப்பு . |
| வயந்தமன்னவன் | மன்மதன் . |
| வயப்படுதல் | வசமாதல் ; தலைப்படுதல் . |
| வயப்புலி | அரிமா . |
| வயப்போத்து | அரிமா . |
| வயம் | வலிமை ; வெற்றி ; பூமி ; வேட்கை ; பறவை ; வசம் ; மூலம் ; சம்பந்தம் ; ஏற்றது ; நீர் ; இரும்பு ; குதிரை ; ஆடு ; முயல் ; கிராம்பு . |
| வயமம் | அத்தி . |
| வயமா | அரிமா ; ஆவணிமாதம் ; புலி ; யானை ; குதிரை . |
| வயமான் | அரிமா ; புலி . |
| வயமீன் | உரோகிணிநாள் . |
| வயல் | கழனி ; மருதநிலம் ; வெளி . |
| வயலை | பசலைக்கொடி ; வெளி . |
| வயவரி | புலி . |
| வயவன் | வீரன் ; திண்ணியன் ; படைத்தலைவன் ; காதலன் ; கணவன் ; காரிப்பிள்ளை . |
| வயவு | வலிமை ; காண்க : வயவுநோய் ; விருப்பம் . |
| வயவுநோய் | கருப்பகாலத்து மகளிர்க்கு உண்டாகும் மயக்கம் . |
| வயவெற்றி | காண்க : வயதெற்றி . |
| வயவை | வழி . |
| வயளை | பசலைக்கொடி . |
| வயற்கடைதூரம் | வயலளவுள்ள தொலைவு . |
| வயற்கரை | வயலுள்ள பகுதி ; வயல் ; வரப்பு . |
| வயற்சார்பு | மருதநிலம் . |
| வயறு | கொக்கி ; கயிறு . |
| வயன் | விதம் ; நிலைமை ; இனிய உணவு ; நல்லமைப்பு ; விவரம் ; நேர்த்தி ; ஏற்றது ; காரணம் . |
| வயனம் | உரை ; வகை ; வேதம் ; பழிமொழி ; காண்க : வயன் . |
| வயனர் | பறவை வடிவினர் . |
| வயா | வேட்கைப்பெருக்கம் ; காண்க : வயவுநோய் ; கருப்பம் ; கருப்பை ; மகப்பேற்றுநோய் ; வருத்தம் ; நோய் . |
| வயாநோய் | காண்க : வயவுநோய் . |
| வயாப்பண்டம் | கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம் . |
| வயாமது | சீந்திற்கொடி . |
| வயாவு | காண்க : வயா . |
| வயாவுதல் | விரும்புதல் . |
| வயாவுயிர்த்தல் | கருவீனுதல் ; வருத்தந் தீர்தல் . |
| வயானம் | பறவை ; சுடுகாடு . |
| வயிடூயம் | காண்க : வயிரக்கல் . |
| வயிடூரியம் | காண்க : வயிரக்கல் . |
| வயித்தியம் | மருத்துவம் ; சிகிச்சை ; மருத்துவநூல் ; மருத்துவனது தொழில் . |
| வயிந்தவம் | மாயை ; குதிரை . |
| வயிர் | கூர்மை ; ஊதுகொம்பு ; மூங்கில் . |
| வயிர்த்தல் | வயிரங்கொள்ளுதல் ; கோபங்கொள்ளுதல் . |
| வயிரக்கல் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று . |
| வயிரகரணி | செடிவகை . |
| வயிரச்சங்கிலி | சரப்பணி எண்ணும் அணி . |
| வயிரப்படை | வச்சிரப்படை . |
| வயிரப்படையோன் | இந்திரன் . |
|
|
|