வயிரம் முதல் - வர்த்தனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வயிரம் காண்க : வயிரக்கல் ; வயிரவாள் ; மரவயிரம் ; திண்மை ; வலிமை ; கூர்மை ; கிம்புரி ; தண்டாயுதம் ; திருவோணநாள் ; கோபம் ; மயிர்ப்படாம் .
வயிரமணி காண்க : வயிரக்கல் ; பொன்னாலாகிய மணிவகை .
வயிரவம் ஓர் அகப்புறச் சமயம் ; அச்சம் .
வயிரவல்லி ஒரு கொடிவகை .
வயிரவன் சிறுகீரை ; சிவமூர்த்தங்களுள் ஒன்று .
வயிரவன்வாகனம் நாய் .
வயிரவாள் வச்சிரப்படை .
வயிரவி துர்க்கை ; ஒரு பண்வகை .
வயிரவூசி கண்ணாடியறுக்கும் கூரிய வயிரம் ; முத்துத் துளைக்கும் ஊசி .
வயிராக்கியன் பற்றற்றவன் ; பிடிவாதமுள்ளவன் ; ஊக்கமுள்ளவன் .
வயிராகம் பற்றின்மை ; ஊக்கம் ; பிடிவாதம் .
வயிரி பகைவன் ; வன்னெஞ்சுடையோன் ; காண்க : வல்லூறு .
வயிரித்தல் மனம்முதலியன கடினமாதல் ; பிடிவாதமாயிருத்தல் .
வயிரிப்பு கடினமாகை ; பிடிவாதம் .
வயிரியம் மயிர்ச்சீலை .
வயிரியமாக்கள் கூத்தர் ; பாடகர் .
வயிரியர் கூத்தர் ; பாடகர் .
வயிற்றிசிவு காண்க : வயிற்றுவலி ; மகப்பேற்று நோவு .
வயிற்றிலடித்தல் பிழைப்பைக் கெடுத்தல் .
வயிற்றிற்கொள்ளுதல் உண்ணுதல் ; காத்தல் ; மனத்திற்கொள்ளுதல் .
வயிற்றுக்கடுப்பு சீதபேதி ; வயிற்றில் உண்டாகும் வலி .
வயிற்றுக்கழிச்சல் காண்க : வயிற்றுப்போக்கு .
வயிற்றுக்கிருமி வயிற்றில் உண்டாகும் புழு .
வயிற்றுக்கொதி பசி ; காண்க : வயிற்றுப்போக்கு .
வயிற்றுத்தீ பெரும்பசி எடுக்கும் நோய்வகை .
வயிற்றுநோய் காண்க : வயிற்றுவலி .
வயிற்றுப்பிழைப்பு உயிர்வாழ்வு .
வயிற்றுப்பொருமல் காண்க : வயிற்றெரிச்சல் ; வயிறுப்பசம் .
வயிற்றுப்போக்கு பேதியாதல் ; செரியாமல் மலங்கழிகை .
வயிற்றுமாரி பெருந்தீனிக்காரன் ; சாப்பாட்டுராமன் .
வயிற்றுவலி வயிற்றில் உண்டாகும் நோவுவகை ; செரியாமையால் உண்டாகும் நோய் .
வயிற்றுளைவு காண்க : வயிற்றுப்போக்கு ; வயிற்றில் உண்டாகும் வலி .
வயிற்றெரிச்சல் வயிற்றிற் காணும் எரிவு ; பொறாமை ; மனவருத்தம் ; இரக்கம் .
வயிற்றைக்கட்டுதல் குறைவாய் உண்ணுதல் ; வயிற்றுப்போக்கை நிறுத்துதல் .
வயிற்றைப்பெருக்குதல் உண்ணும் அளவை அதிகப்படுத்துதல் ; நிரம்ப உண்ணுதல் .
வயிற்றையொடுக்குதல் உணவைக் குறைத்தல் .
வயிற்றையொறுத்தல் உணவைக் குறைத்தல் .
வயிற்றைவளர்த்தல் காண்க : வயிறுவளர்த்தல் .
வயிறடித்தல் துயரக்குறியாக வயிற்றிலடித்துக் கொள்ளுதல் .
வயிறடைத்தல் உண்ணும் விருப்பம் இல்லாதிருக்கை ; பூப்பு நின்றுபோகை ; கருத்தரிக்குந் தன்மையற்றுப்போதல் ; மலடாயிருக்கை .
வயிறலைத்தல் காண்க : வயிறடித்தல் .
வயிறழிதல் கருச்சிதைதல் ; வெளிவிடுதல் .
வயிறு உதரம் ; கருப்பப்பை ; நடுவிடம் ; உள்ளிடம் ; மனம் .
வயிறுகழிதல் பேதியாதல் .
வயிறுகழுவுதல் காண்க : வயிறுவளர்த்தல் .
வயிறுகாந்துதல் பசித்தல் ; பட்டினியாயிருத்தல் .
வயிறுகிள்ளுதல் பசித்தல் ; பட்டினியாயிருத்தல் .
வயிறுகுத்துதல் வயிற்றில் வலியுண்டாகை .
வயிறுகுளிர்தல் உணவால் வயிறு நிறைதல் .
வயிறுதாரி பெருவயிறன் ; பெருந்தீனிக்காரன் ; தன்னலம் ஒன்றையே கருதுபவன் .
வயிறுப்பசம் உணவு செரியாமையால் வயிறு பெருக்கை .
வயிறுபேதித்தல் காண்க : வயிறுகழிதல் .
வயிறுவளர்த்தல் பாடுபட்டு ; உணவுத்தேடி வாழ்தல் .
வயிறுவாய்த்தல் மகப்பெறுதல் ; கருக்கொள்ளுதல் .
வயிறெரிதல் பொறாமைகொள்ளுதல் ; மிக்க வருத்தமுறுதல் .
வயின் இடம் ; பக்கம் ; வீடு ; வயிறு ; பக்குவம் ; முறை ; எல்லை ; ஏழனுருபு ; ஓர் அசைச்சொல் .
வயினதேயன் கருடன் .
வயினம் பறவை .
வயேகடம் காண்க : மரமஞ்சள் .
வயோதிகம் முதுமை .
வயோதிகன் கிழவன் ; முதியவன் .
வர்க்கம் ஒத்த பொருள்களின் கூட்டம் ; வகுப்பு ; அத்தியாயம் ; இனம் ; வமிசம் ; எருக்கம்பால் ; தீ ; பிசாசு ; காண்க : வருக்கம் .
வர்க்கை இனம் ; உயிர் ; மெய் முதலிய எழுத்துகளின் இனம் .
வர்ச்சியம் விலக்கத்தக்கது .
வர்ணகம் சந்தனம் ; மரவகை .
வர்ணம் நிறம் ; சாதி ; குலம் ; அழகு ; ஒளி ; பொன்னுரை ; பொன் ; புகழ் ; மணம் ; துதி ; குங்குமம் ; பூச்சுப்பொருள் ; எழுத்து ; ஓசை ; சுரத்தின் எழுத்து ; மஞ்சள் ; வேடம் ; குணம் ; மாற்று .
வர்ணவேலை சித்திரமெழுதுந் தொழில் .
வர்ணனை புகழ்ந்துரைத்தல் ; தோத்திரம் .
வர்ணித்தல் புனைந்துரைத்தல் ; தோத்திரித்தல் ; மிகைபடக் கூறுதல் ; உவமித்தல் .
வர்ணியம் உவமேயம் .
வர்த்தகம் வணிகம் ; பெருக்குவது .
வர்த்தகன் வணிகன் ; பெருக்குபவன் .
வர்த்தமானகாலம் நடக்கின்ற காலம் ; நிகழ்காலம் .
வர்த்தமானம் செய்தி ; தற்கால நிகழ்ச்சி ; காண்க : ஆமணக்கு ; வர்த்தமானகாலம் .
வர்த்தனம் தொடங்குதல் ; வளர்த்தல் ; பெருகுதல் .