வர்த்தனை முதல் - வராடகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வர்த்தனை பெருகுகை ; வளர்ச்சி ; செல்வம் ; மானிய சுதந்தரம் ; ஏற்றஇறக்கமுறையில் சுரம்பாடுதல் ; ஒருவன் தசையான ஆண்டை மூன்றால் பெருக்கின எண் .
வர்த்தித்தல் உளதாதல் ; நிகழ்தல் ; தங்குதல் ; பெருகுதல் .
வர்த்துலம் வட்டவடிவு ; உருண்டை .
வர்மம் உட்பகை ; காண்க : மருமம் .
வர்மித்தல் பகைத்தல் .
வர அசைச்சொல் ; வரை .
வரகதி மேலான நிலை .
வரகவி அருட்கவி ; சிறந்த செய்யுள் .
வரகாத்திரம் தலை ; யானைத்தலை .
வரகு தானியவகை ; சாமைவகை .
வரகுணம் உயர்ந்தகுணம் .
வரகுதிரிகை வரகு அரைக்கும் எந்திரம் .
வரங்கிடத்தல் வரம்வேண்டுதல் .
வரடம் அன்னம் ; கொடிவகை .
வரண்டகம் உண்டை ; சுவர் ; யானைமேற்றவிசு ; காண்க : வரண்டகை ; முகப்பரு .
வரண்டகை நாகணவாய்ப்புள் .
வரண்டியம் செடிவகை .
வரணம் தெரிந்தெடுத்தல் ; அமர்த்தல் ; சூழ்தல் ; மதில் ; மறைத்தல் ; சட்டை ; ஒட்டகம் ; பால் ; மரவகை .
வரத்து வருகை ; நீர்வரும் வழி ; வரும்படி , வருவாய் ; பெருக்கு ; எல்லை ; வரவுதொகை காட்டுங் கணக்கு ; ஆணை ; மரபுவழி .
வரதட்சிணை மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் பொருள் .
வரதநூல் சகுனசாத்திரம் .
வரதம் வரமளிப்பது ; நல்லுடை ; அருள் ; குபேரன் நிதி ; வரந்தருவதற்கு அறிகுறியாக அமையும் கை .
வரதன் வரமளிப்பவன் ; கடவுள் ; உதவுவோன் ; காளமேகப் புலவரின் இயற்பெயர் ; சட்டநூல் இயற்றிய ஆசிரியர் .
வரதை பார்வதி ; கன்னி ; வரந்தருபவள் .
வரநதி கங்கையாறு .
வரப்படுத்துதல் மனப்பாடஞ்செய்தல் ; வந்ததைப் பெற்றுக்கொள்ளுதல் .
வரப்பண்ணுதல் வரவழைத்தல் ; காண்க : வரப்படுத்துதல் .
வரப்பிரசாதம் கடவுளரின் அருட்கொடை .
வரப்பிரதானம் வரமளிக்கை ; நன்கொடை .
வரப்பு வயலின் கரை ; எல்லை .
வரப்புக்கடா நண்டுவகை .
வரப்புள் வயல் .
வரபலம் வரத்தினாலாகிய தன்மை ; தென்னைமரம் .
வரம் தெய்வம் முதலியவற்றாற் பெரும் பேறு ; அருள் ; வாழ்த்து ; வேண்டுகோள் ; விருப்பம் ; மேன்மை ; ஒரு நிதி ; சூழல் ; அடைக்கலாங்குருவி ; எறும்பு ; மஞ்சள் .
வரம்பழிதல் அளவிலதாதல் ; அளவுகடத்தல் .
வரம்பிகத்தல் அளவிலதாதல் ; அளவுகடத்தல் .
வரம்பில்காட்சி பேரறிவு .
வரம்பிலறிவன் கடவுள் .
வரம்பிலாற்றல் முடிவிலா ஆற்றல் .
வரம்பிலின்பம் அளவிலா ஆனந்தம் .
வரம்பிலின்பமுடைமை சிவன் எண்குணத்துள் ஒன்றான அளவிலா ஆனந்தம் உடைமை .
வரம்பு எல்லை ; வரப்பு ; அணை ; வழி ; விளிம்பு ; ஒழுங்கு ; வட்டி ; மனை .
வரம்புகட்டுதல் அணைகட்டுதல் ; எல்லைகட்டுதல் ; முடித்தல் ; கடிப்புண் வட்டமாகத் தடித்தல் .
வரயோகம் யோகவகை .
வரர் சிறந்தவர் ; வானோர் .
வரலாற்றுமுறைமை வழிவழியாகக் கையாளப்படும் அடிப்பட்ட வழக்கு .
வரலாறு சரித்திரம் ; முன்வரலாறு ; நிகழ்ச்சி முறை ; செய்தி ; விவரம் ; ஒழுங்கு ; வழிவகை ; எடுத்துக்காட்டு .
வரவர மேலும்மேலும் ; படிப்படியாய் .
வரவழைத்தல் வருவித்தல் .
வரவிடுதல் அனுப்புதல் .
வரவிருத்தன் சிவபிரான் .
வரவு வருவாய் ; வருகை ; வரலாறு ; விளைவு ; வழி ; வணங்குகை .
வரவுதாழ்த்தல் தாமதித்து வருதல் .
வரவுமுறை வருவாய் .
வரவுவைத்தல் செலுத்திய தொகையைக் குறித்து எழுதிவைத்தல் .
வரவேற்றல் எதிர்கொண்டு அழைத்தல் .
வரவை வயல்தாக்கு ; வரி .
வரன் சிறந்தவன் ; கடவுள் ; பிரமன் ; தமையன் ; மணமகன் ; கணவன் ; சீவன்முத்தருள் பிரமவரர் எனப்படும் வகையினன் .
வரன்முறை வரலாற்றுமுறை ; அடிப்படவந்த முறை ; வரலாறு ; ஊழ் ; பெரியோர்க்குச் செய்யும் போற்றுகை .
வரன்றுதல் வாருதல் .
வராக்கடன் காண்க : வாராக்கடன் .
வராககற்பம் திருமால் பன்றிப்பிறப்பெடுத்த காலம் .
வராகபுடம் இருபது அல்லது ஐம்பது வறட்டி வைத்துப் போடப்படும் புடம் .
வராகம் பன்றி ; திருமால் ; பிறப்புகளுள் ஒன்று ; பதினெண் புராணத்துள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; கணிதநூல் ; காண்க : நிலப்பனை ; ஒரு நாட்டுப் பகுதி ; போர் ; ஆசனவகை .
வராகன் பன்றி உருக்கொண்ட திருமால் ; மூன்றரை ரூபா மதிப்புள்ள பொன் நாணயம் ; காண்க : வராகன்பூண்டு ; அருகன் .
வராகன்பூண்டு மூக்குத்திப்பூண்டு .
வராகனெடை பொன்நிறுக்கும் நிறைவகை .
வராகி சிறுகுறட்டை ; காண்க : சிற்றரத்தை ; நிலப்பனை ; வராகபுடம் ; சிறுகுறிஞ்சாக்கொடி ; வாராகி .
வராகிவேய் முள்ளம்பன்றிமுள் .
வராங்ககம் இலவங்கப்பட்டை .
வராங்கம் தலை ; அழகிய உருவம் ; உடல் ; யானை ; இலவங்கம் ; வானவரின் உடம்பு .
வராங்கனை உருவிற்சிறந்தவள் ; கூந்தற்பனை .
வராசனன் வாயிற்காப்போன் ; கள்ளக்கணவன் .
வராசான் கருப்பூரவகை .
வராடகம் தாமரையின் காய் ; பலகறை ; கயிறு .