வராடி முதல் - வருடாகாலம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வராடி பலகறை ; பாலை யாழ்த்திறத்துள் ஒன்று ; முரட்டுநூற் சீலை .
வரால் ஒரு மீன்வகை .
வராலி செடிவகை .
வராளம் பாம்பு .
வராளி சந்திரன் ; ஒரு பண்வகை ; யாழ் வகை ; மண்ணீரல் .
வராற்பகடு ஆண்வரால் .
வராற்போத்து இளவரால் .
வரானி செடிவகை ; பாலை .
வரி கோடு ; தொய்யில் முதலிய வரி ; கைரேகை ; ஒழுங்குநிரை ; எழுத்து ; புள்ளி ; தேமல் ; வண்டு ; கடல் ; கட்டு ; பல தெருக்கள் கூடுமிடம் ; வழி ; இசை ; இசைப்பாட்டு ; கூத்துவகை ; கடைச்சங்கத்து நூல்களுள் ஒன்று ; உயர்ச்சி ; நீளம் ; குடியிறை ; தீ ; நிறம் ; அழகு ; வடிவு ; நெல் .
வரிக்கடை வண்டு .
வரிக்கயிறு வடக்கயிறு .
வரிக்கல் நீளமாக அடித்துத் திருத்திய கல் .
வரிக்காரன் வரி வாங்குபவன் ; வரி கொடுப்பவன் ; வடக்கயிறு திரிப்போன் .
வரிக்குதிரை பலநிறக் கோடுள்ள குதிரை ; சேணம்வேண்டாக் குதிரை ; விலங்குவகை .
வரிக்கூத்து கூத்துவகை .
வரிக்கூறுசெய்வார் அரசிறை அதிகாரிகள் .
வரிக்கோலம் தொய்யிலின் பத்திக்கீற்று .
வரிகயிறு வண்டியில் மூட்டையைப் பிணைத்துக் கட்டுங் கயிறு .
வரிகோலம் காண்க : வரிக்கோலம் .
வரிச்சந்தி பல தெருக்கள் கூடுமிடம் .
வரிச்சல் கட்டுவரிச்சல் , கூரையிலிடுங் குறுக்குச்சட்டம் .
வரிச்சு கட்டுவரிச்சல் , கூரையிலிடுங் குறுக்குச்சட்டம் .
வரிச்சுருள் செவ்வட்டை .
வரிசி தூண்டில் .
வரிசை ஒழுங்கு ; நிரையொழுங்கு ; வேலை முறை ; அரசர் முதலியோரால் பெறுஞ் சிறப்பு ; அரசசின்னம் ; மரியாதை ; மேம்பாடு ; தகுதி ; பாராட்டு ; நல்லொழுக்கம் ; நன்னிலை ; சீராகச் செய்யும் நன்கொடை ; வீதம் ; ஊர்வரிவகை ; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு .
வரிசைக்கிரமம் ஒழுங்குமுறை .
வரிசைசெய்தல் மரியாதைசெய்தல் ; காண்க : வரிசையெடுத்தல் .
வரிசைபார்த்தல் ஒழுங்குமுறையை அளவுக்கு மிஞ்சிக் கவனித்தல் .
வரிசைமகளிர் விறலியர் .
வரிசைமாதர் விறலியர் .
வரிசையாளர் நிலத்தைப் பயிரிடுங் குடிகள் .
வரிசையெடுத்தல் பலரும் அறியச் சீர் எடுத்தல் .
வரிட்டம் மிகச் சிறந்தது .
வரிட்டன் மேலானவன் ; சீவன்முத்தருள் பிரமவரிட்டர் வகையினன் .
வரித்தல் எழுதுதல் ; சித்திரமெழுதுதல் ; பூசுதல் ; கட்டுதல் ; மொய்த்தல் ; கோலஞ்செய்தல் ; ஓடுதல் ; தேர்ந்துகொள்ளுதல் ; அமர்த்தல் ; அழைத்தல் .
வரிதகம் முப்பத்திரண்டு அடியான் வரும் இசைப்பாட்டு .
வரிதல் எழுதுதல் ; ஓவியந் தீட்டுதல் ; பூசுதல் ; மூடுதல் ; கட்டுதல் .
வரிந்துகட்டுதல் இறுக்கிக்கட்டுதல் ; வேலைக்கு ஆயத்தமாதல் .
வரிநிழல் செறியாத நிழல் .
வரிப்பணம் குடியிறை .
வரிப்பிளந்தெழுதுதல் கையெழுத்து வரியில் இடைச்செருகி எழுதுதல் .
வரிப்பிளப்பு இடைச்செருகி எழுதுவது .
வரிப்புலி வேங்கைப்புலி .
வரிப்புறம் அணில்வகை .
வரிப்பூனை காட்டுப்பூனைவகை .
வரிமணல் அறலினையுடைய மணல் .
வரியரிசி சீரகம் .
வரியாடல் எழுதுகை .
வரியிலார் காண்க : வரிக்கூறுசெய்வார் .
வரியோலை உடன்படிக்கைப் பத்திரம் .
வரிவடிவு ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு .
வரிவயம் புலி .
வரிவரி தண்ணீர்விட்டான்கிழங்கு .
வரிவரிமணலி கற்றாழை .
வரிவனம் தில்லைமரம் .
வரிவைத்தல் குடியிறைவிதித்தல் ; வரிசையாகக் கட்டுதல் ; பொதுநிதி முதலியவற்றிற்காக வீதாசாரத்தொகை குறிப்பிடுதல் .
வருக்கம் இனம் ; குலம் ; தொகுதி ; சதுரம் ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவருந் தொகை ; அத்தியாயம் ; ஒழுங்கு .
வருக்கமூலம் வருக்கத் தொகைக்கு மூலமாயுள்ள எண் .
வருக்கமோனை பாடல் அடிகளில் முதலெழுத்துகள் வருக்கவெழுத்துகளால் அமையும் மோனைவகை .
வருக்கவெதுகை இனவெழுத்துகளால் ஆகும் எதுகைத்தொடை .
வருக்கவெழுத்து உயிர் அல்லது ஒரு மெய்யின் இனத்தைச் சேர்ந்த எழுத்து .
வருக்கித்தல் ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குதல் .
வருக்கு கஞ்சி ; பேரேடு .
வருக்கை இனவரிசை ; வேர்ப்பலா ; உயிர்மெய் முதலிய எழுத்துகளின் இனம் ; மீன்வகை .
வருகம் மயிற்றோகை ; இலை ; பரிவாரம் .
வருகாலம் இனி வரப்போகுங் காலப்பகுதி , எதிர்காலம் .
வருங்காலம் இனி வரப்போகுங் காலப்பகுதி , எதிர்காலம் .
வருச்சித்தல் கைவிடுதல் ; விலக்குதல் .
வருட்டம் வேப்பமரம் ; முட்டை .
வருட்டுதல் தேற்றுதல் ; வயப்படுத்தல் .
வருடகம் முடக்கொற்றான் .
வருடப்பாதி அரையாண்டு , அயனம் .
வருடம் ஆண்டு ; மழை ; பூகண்டம் ; ஆவணி ; புரட்டாசி மாதங்களைக் கொண்ட மழைக் காலம் , வருடம் அறுபது- 1. பிரபவ , 2. விபவ , 3. சுக்கில , 4. பிரமோதூத , 5. பிரசோற்பத்தி , 6. ஆங்கீரச ,7. சீமுக , 8. பவ. 9. யுவ , 10. தாது , 11. ஈசுவர , 12. வெகுதானிய , 13. பிரமாதி , 14. விக்கிரம , 15.
வருடம்அறுபது 1. பிரபவ ; 2. விபவ ; 3. சுக்கில ; 4. பிரமோதூத ; 5. பிரசோற்பத்தி ; 6. ஆங்கீரச ; 7. சீமுக ; 8. பவ ; 9. யுவ ; 10. தாது ; 11. ஈசுவர ; 12. வெகுதானிய ; 13. பிரமாதி ; 14. விக்கிரம ; 15. விசு ; 16. சித்திரபானு ; 17. சுபானு ; 18. தாரண ; 19. பார்த்திப ; 20. விய ; 21. சர்வசித்து ; 22. சர்வதாரி ; 23. விரோதி ; 24. விகிர்தி ; 25. கர ; 26. நந்தன ; 27. விசய ; 28. சய ; 29. மன்மத ; 30. துன்முகி ; 31. ஏவிளம்பி ; 32. விளம்பி ; 33. விகாரி ; 34. சார்வரி ; 35. பிலவ ; 36. சுபகிருது ; 37. சோபகிருது ; 38. குரோதி ; 39. விசுவாவக ; 40. பராபவ ; 41. பிலவங்க ; 42. கீலக ; 43. சௌமிய ; 44. சாதாரண ; 45. விரோதிகிருது ; 46. பரிதாபி ; 47. பிரமாதீச ; 48. ஆனந்த ; 49. இராட்சச ; 50. நள ; 51. பிங்கள ; 52. காளயுக்தி ; 53. சித்தார்த்தி ; 54. இரௌத்திரி ; 55. துன்மதி ; 56. துந்துபி ; 57. உருத்திரோற்காரி ; 58. இரத்தாட்சி ; 59. குரோதன ; 60. அட்சய ; இவற்றுள் முதல் இருபதாண்டு உயர்ந்தவை ; இடை இருபதாண்டு இடைப்பட்டவை ; கடை இருபது ஆண்டு இழிந்தவை என்பர் .
வருடாகாலம் மழைக்காலம் .