வழாஅல் முதல் - வழியாயம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வழாஅல் தவறுகை ; வழக்குகை .
வழாநிலை சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை .
வழாறு நிறைபுனல் உள்ள ஆறு அல்லது குளம் .
வழி நெறி ; காரணம் ; கழுவாய் ; வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; பின்சந்ததி ; மரபு ; மகன் ; சுற்றம் ; உடன்பிறந்தான் ; பரம்பரை ; நூல் வந்த நெறி ; சுவடு ; பின்னானது ; வழக்கு ; பழைமை ; மலைப்பக்கம் ; இடம் ; திரட்சி ; வரம் ; பின்பு ; வினையெச்சவிகுதி ; ஏழனுருபு .
வழிக்கரை வழிப்பக்கம் .
வழிக்குவருதல் இணங்குதல் ; நல்வழிப்படுதல் .
வழிக்கொள்ளுதல் பின்பற்றிச் செல்லுதல் ; பயணப்படுதல் .
வழிகட்டுதல் வழிமறித்தல் ; எத்தனஞ்செய்தல் ; வழிகாட்டுதல் .
வழிகாட்டி செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவர் ; பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவர் ; வழிகாட்டிமரம் .
வழிகாட்டுதல் செல்லும் நெறியை அறிவித்தல் ; நன்னெறி உணர்த்துதல் ; வழிவகை கூறுதல் .
வழிகெடுதல் சுவடுதெரியாமல் அழிதல் .
வழிச்செல்வோன் பயணி .
வழிச்செலவு பயணச்செலவு ; பயணம் .
வழிசீத்தல் செல்லும் வழியைச் செப்பனிடுதல் .
வழிசெய்தல் வகைசெய்தல் .
வழித்தடை பயணத்திற்கு நேரும் இடையூறு .
வழித்தல் வடித்தல் ; அரைத்த சந்தனம் முதலியவற்றைத் திரட்டியெடுத்தல் ; பூசுதல் ; துடைத்தெடுத்தல் ; வழிக்குதல் ; சவரம் பண்ணுதல் ; ஆடையைத் திரைத்தல் .
வழித்திண்ணை வீடு ; கோபுரம் முதலியவற்றின் வெளித்திண்ணை .
வழித்துணை பயணத்தில் உடன்வருவோன் ; வழிக்குத் துணையாவோன் ; வழிவழியாக உதவிவரும் குடும்பத்துணை .
வழித்தெய்வம் குலதெய்வம் .
வழித்தொண்டு வழிவழியடிமை .
வழித்தோன்றல் மரபிற் பிறந்த பிள்ளை , மகன் .
வழிதல் நிரம்பிவடிதல் ; தோல்வழலுதல் .
வழிதிகைத்தல் செல்வழி தெரியாது மயங்குதல் ; செய்வகை தெரியாது கலங்குதல் .
வழிதுறை வழியும் துறையும் ; பக்கத்துணை ; வழிவகை .
வழிநடத்தல் ஏவல் செய்தல் .
வழிநடை வழிச்செல்லுகை ; நடைபாதை .
வழிநாள் பின்வருநாள் .
வழிநிலை பின்னின்று ஏவல் செய்தல் ; பின் நிகழ்வது ; அலங்கார வகை .
வழிநிலைக்காட்சி இயற்கைப் புணர்ச்சியை அடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி .
வழிநிற்றல் ஏவல்செய்தல் .
வழிநூல் நூல் மூன்றனுள் ஒன்றான முதனூல் வழியை விகற்பிக்கும் நூல் .
வழிப்படுத்தல் பயணப்படுத்துதல் ; நல்வழிச் செலுத்துதல் ; சீர்திருத்துதல் ; வசப்படுத்துதல் ; வணக்கஞ் செய்வித்தல் .
வழிப்படுதல் காண்க : வழிபடுதல் ; நேர்படுதல் ; சந்தித்தல் ; வணங்குதல் .
வழிப்பயணம் ஆத்திரை , பிரயாணம் .
வழிப்பறி வழிக்கொள்ளை .
வழிப்பறித்தல் ஆறலைத்தல் .
வழிப்பிரிவு பலவழி கூடுமிடம் .
வழிப்புரை வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம் .
வழிப்பெருந்தேவி பட்டத்தரசிக்கு அடுத்த தேவி .
வழிப்போக்கு வழியிற்போகை ; வழி ; வயல்களில் உள்ள வழிப்பாதை ; பாழ்நிலம் .
வழிப்போதல் பயணமாதல் ; பின்பற்றுதல் .
வழிபடுகடவுள் ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள் .
வழிபடுத்தல் காண்க : வழிப்படுத்தல் .
வழிபடுதல் பின்பற்றுதல் ; பயணமாதல் .
வழிபடுதெய்வம் காண்க : வழிபடுகடவுள் .
வழிபண்ணுதல் வகைசெய்தல் .
வழிபயத்தல் பிற்பயத்தல் ; மறுக்காது கொடுத்தல் .
வழிபறி காண்க : வழிப்பறி .
வழிபறித்தல் காண்க : வழிப்பறித்தல் .
வழிபாடு வழியிற் செல்லுகை ; பின்பற்றுகை ; வணக்கம் ; பூசனை ; வழக்கம் ; சமயக்கோட்பாடு .
வழிபார்த்தல் எதிர்பார்த்தல் ; வகைபார்த்தல் ; சமயம் பார்த்தல் ; சூழ்ச்சி தேடுதல் .
வழிபோவார் பயணிகள் .
வழிமடக்குதல் செல்வதைத் தடுத்தல் .
வழிமறித்தல் செல்வதைத் தடுத்தல் .
வழிமார்க்கம் நல்லொழுக்கம் .
வழிமுட்டு செல்லமுடியாத வழி .
வழிமுதல் குலமுதல்வன் ; காண்க : வழிபடு கடவுள் .
வழிமுரண் ஒரு செய்யுளில் முரண்டொடை மிகுதியாகப் பயில்வது .
வழிமுறை தலைமுறை ; பின்பு .
வழிமுறைத்தாய் தகப்பனுக்கு இரண்டாந் தாரமாகிய சிறிய தாய் .
வழிமுறைத்தாரம் முதல் மணத்துக்குப்பின் மணந்துகொண்ட தாரம் .
வழிமொழி ஒரு சந்தப்பாட்டுவகை ; அணிவகை .
வழிமொழிதல் வழிபாடு கூறுதல் ; பின்மொழிதல் ; அனுசரித்துக் கூறுதல் .
வழிமோனை மோனைகளுள் ஒன்று .
வழியட்டுதல் வழியவிடுதல் .
வழியடியார் பரம்பரைத் தொண்டர் .
வழியடை இடையூறு ; தாயத்தின் பின் உரிமையுடையோன் .
வழியடைத்தல் செல்லவிடாது வழித்தடை செய்தல் ; தடுத்தல் .
வழியம்பலம் சாலையில் தங்குவதற்குரிய சத்திரம் .
வழியல் வழித்தெடுக்கப்பட்டது ; வழிந்தோடுவது .
வழியலைத்தல் வழியில் கொள்ளையடித்தல் .
வழியளவை கருதலளவை .
வழியனுப்புதல் பயணப்படுத்திவிடுதல் .
வழியாயம் சுங்கம் .