வழியிரங்குதல் முதல் - வள்ளியன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வழியிரங்குதல் பின் வருந்துதல் .
வழியிலார் வழித்தோன்றல் ; திக்கற்றவர் .
வழியுணவு கட்டுச்சோறு .
வழியுரைத்தல் தூதுசொல்லுதல் .
வழியுரைப்போர் தூதர் .
வழியெஞ்சுதல் மரபற்றுப்போதல் .
வழியெதுகை ஒரு செய்யுளில் அடிதோறும் முதன் மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகை வகை .
வழியொழுகுதல் பின்செல்லுதல் ; நேர்வழியிற் செல்லுதல் ; ஏவலின்படி நடத்தல் .
வழியோன் காண்க : வழித்தோன்றல் .
வழிவகை இடம் பொருள் ஏவல்கள் .
வழிவந்தான் மரபிற் பிறந்தவன் ; பின்பற்றியொழுகுவோன் ; நற்குடியிற் பிறந்தோன் .
வழிவருத்தம் பயணத்தாலுண்டான இளைப்பு .
வழிவருதல் மரபுவழியாய் வருதல் ; தொன்று தொட்டு வருதல் ; நற்குடிப் பிறத்தல் ; பின்பற்றி யொழுகுதல் ; சாத்திரங்களில் கூறிய முறை தப்பாமல் நடத்தல் .
வழிவழி மரபுவழி .
வழிவழியாய்ப்போதல் வெவ்வேறு வழியாகப் பிரிந்துபோதல் .
வழிவிடுதல் பயணமனுப்புதல் ; வழிவிட்டு ஒதுங்குதல் ; செல்வழியைத் திறத்தல் ; நெறிதவறுதல் ; இடையூறுகளைப் போக்குதல் ; இறக்குந்தறுவாயில் கழுவாய்ச் சடங்கு செய்தல் .
வழு தவறு ; கேடு ; பாவம் ; பழிப்புரை ; குற்றம் ; கன்று முதலியன பிறக்கும்போது காணப்படும் சவ்வு முதலியன .
வழுக்கட்டை உருண்டுதிரண்டிருக்கை ; மூடத்தன்மை ; சிறுவன் .
வழுக்கம் தவறு ; ஒழுக்கத்தவறு .
வழுக்கல் சறுக்குகை ; காண்க : வழுக்குநிலம் ; வழுக்கை ; வழுக்காய் .
வழுக்காய் வழுக்கலுள்ள இளந்தேங்காய் .
வழுக்கு தோல்வி ; சறுக்குகை ; தவறு ; மறதி ; பயன்படாது கழிவது ; கொழுப்பு ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் .
வழுக்குதல் சறுக்குதல் ; தவறுசெய்தல் ; தப்புதல் ; மறத்தல் ; அசைதல் ; ஒழிதல் ; அடித்தல் ; மோதுதல் .
வழுக்குநிலம் சறுக்கலான தரை .
வழுக்குமரம் விளையாடுதற்குரிய சறுக்குமரம் .
வழுக்கை இளந்தேங்காயின் உள்ளீடு ; தலை மயிர் உதிர்ந்து வளராத நிலை .
வழுக்கைத்தலை பொட்டலாயிருக்குந் தலை .
வழுத்தரல் இறந்துபோதல் .
வழுத்துதல் வாழ்த்துதல் ; துதித்தல் ; மந்திரித்தல் .
வழுதலை கத்தரிச்செடி ; கண்டங்கத்திரிவகை ; புல்லுருவிச்செடி ; திருடர்களை அச்சுறுத்துவதற்காகப் புனத்திடும் பொய்க்கழு .
வழுதி பாண்டியன் .
வழுதிவளநாடு ஆழ்வார்திருநகரியைச் சூழ்ந்த நாடு .
வழுது பொய் ; வைக்கோல் ; அரிதாள் .
வழுதுணங்காய் கத்தரிக்காய் ; கண்டங்கத்தரிவகை .
வழுதுணை கத்தரிச்செடி .
வழுந்துதல் தோலுரிதல் .
வழுநிலை சொல் முதலியன இலக்கணத் தவறாக வருகை .
வழுநீர் கண்பீளை .
வழும்பு குற்றம் ; தீங்கு ; நிணம் ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் ; அழுக்கு .
வழுவமைத்தல் இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் .
வழுவமைதி இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் .
வழுவல் நழுவுதல் ; தவறு ; கேடு ; இளந்தேங்காயின் வழுக்கல் .
வழுவழுத்தல் வழுக்குதல் ; வழுவழுப்பாதல் ; உறுதியறிதல் .
வழுவழுப்பு கொழகொழப்பு ; வழுக்குந்தன்மை ; மென்மை ; பளபளப்பு ; எண்ணெய்ப்பசையுடைமை .
வழுவழெனல் மென்மைக்குறிப்பு ; விரைதற்குறிப்பு ; வழுக்குதற்குறிப்பு .
வழுவாடி செயலை நழுவவிடுபவன் .
வழுவாமை நேர்மை ; தவறுறாமை .
வழுவாய் தப்புகை ; பாவம் .
வழுவு தவறு ; குற்றம் ; கேடு ; பாவம் ; பழிப்புரை .
வழுவுடைக்காமம் பிறர் பொருள் விரும்பல் ; பெருந்திணை .
வழுவுதல் தவறுதல் ; நழுவுதல் ; சறுக்குதல் ; குறைவுடையதாதல் .
வழுவை யானை .
வழூஉ காண்க : வழுவு .
வழூஉச்சொற்புணர்த்தல் குற்றமுடைய சொற்களைச் செய்யுளிலும் உரைநடையிலும் சேர்த்தல் .
வழை புன்னைமரம் ; காண்க : வழைச்சு .
வழைச்சு புதுமை .
வள் வளம் ; பெருமை ; நெருக்கம் ; கூர்மை ; வாள் ; வார் ; வாளுறை ; கடிவாளம் ; காது ; படுக்கை ; வலிமை ; வலிப்பற்றிரும்பு .
வள்பு வார் .
வள்வு வார் .
வள்ளடி காதினடி .
வள்ளம் உண்ணும் வட்டில் ; நாழிகை ; அளவுவகை ; சிறுதோணி .
வள்ளல் வரையாது கொடுப்போன் ; வண்மை ; திறமை ; கமுக்கச்செயல் ; கொடிவகை .
வள்ளற்றனம் கொடைக்குணம் ; கொடைப்பண்பு .
வள்ளன்மை கொடைக்குணம் ; கொடைப்பண்பு .
வள்ளி கொடிவகை ; நிலப்பூசணி ; தண்டு ; கொடிபோன்று தொடர்ந்திருப்பது ; கைவளை ; தொய்யிற்கொடி ; காண்க : வள்ளித்தண்டை ; முருகக்கடவுளின் தேவி ; குறிஞ்சி நிலப் பெண் ; முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை ; குறிஞ்சி மகளிர் கூத்துவகை ; சந்திரன் .
வள்ளிக்கண்டம் சீந்திற்கொடி .
வள்ளிக்கூத்து குறிஞ்சிநில மக்களின் கூத்து வகை .
வள்ளிகேள்வன் முருகக்கடவுள் .
வள்ளிசாய் முழுவதும் ; நேர்த்தியாய் ; சரியாய் .
வள்ளிசு நேர்த்தி ; முழுமை ; துல்லியம் .
வள்ளித்தண்டை பிரம்பினால் ஆன கேடகம் .
வள்ளிநாய்ச்சியார் முருகக்கடவுளின் தேவி .
வள்ளிமணாளன் காண்க : வள்ளிகேள்வன் .
வள்ளியம் ஊதுகுழல் ; மரக்கலம் ; மெழுகு ; மிளகு .
வள்ளியன் வண்மையுடையோன் .