வள்ளியோன் முதல் - வளையமுடித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வள்ளியோன் வண்மையுடையோன் .
வள்ளுரம் பசுந்தசை ; பசுவின் இறைச்சி .
வள்ளுவப்பயன் திருக்குறள் .
வள்ளுவன் ஒரு சாதியான் ; நிமித்திகன் ; திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் .
வள்ளூரம் சூட்டிறைச்சி ; பசுந்தசை .
வள்ளெனல் குரைக்கும் ஒலிக்குறிப்பு .
வள்ளை காண்க : வள்ளைப்பாட்டு ; ஒரு கொடிவகை .
வள்ளைப்பாட்டு மகளிர் நெல் குற்றும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு .
வளகம் பவளம் .
வளகு நீண்ட மரவகை ; செழிப்பு .
வளங்கோலுதல் செயல்முடிவுக்கு வழிதேடுதல் .
வளந்து பெரிய மிடா .
வளநாடு செழிப்புள்ள நாடு .
வளப்பம் செழுமை ; நன்மை ; மாட்சிமை ; வழக்கம் .
வளப்பாடு செழுமை ; பெருக்கம் .
வளம் செல்வம் ; செழுமை ; மிகுதி ; பயன் ; வருவாய் ; நன்மை ; மாட்சிமை ; தகுதி ; அழகு ; பதவி ; புனல் ; உணவு ; வாணிகப் பண்டம் ; வெற்றி ; வழி ; பக்கம் .
வளமை செழிப்பு ; நன்மை ; செல்வம் ; உதவி ; பொருள் ; மாட்சிமை .
வளமையர் வேளாளர் ; மாட்சிமையுள்ளோர் ; பணச்செழிப்புள்ளவர் .
வளயம் காண்க : வளையம் .
வளர் இளங்கொம்பு ; ஓர் உவமச்சொல் .
வளர்கிடாய் வீட்டில் வளர்த்த ஆட்டுக்கடா .
வளர்ச்சி வளர்தல் ; உயரம் ; நீட்சி ; உறக்கம் .
வளர்த்தல் பாதுகாத்தல் ; பெருக்குதல் ; காண்க : வளர்த்துதல் ; ஓம்புதல் .
வளர்த்தாள் செவிலித்தாய் ; கைத்தாய் .
வளர்த்தி காண்க : வளர்ச்சி .
வளர்த்துதல் உறங்கச்செய்தல் ; வளரச்செய்தல் ; நீட்டுதல் ; பொன் முதலியவற்றைத் தகடாக அடித்தல் ; கிடத்துதல் .
வளர்தல் பெரிதாதல் ; மிகுதல் ; நீளுதல் ; களித்தல் ; உறங்குதல் ; தங்குதல் .
வளர்ப்பு வளர்க்கை ; காண்க : வளர்ப்புப்பிள்ளை ; பிறனைச் சார்ந்து வாழ்பவன் ; தாசியின் தத்துப்பெண் .
வளர்ப்புப்பிள்ளை தத்துப்பிள்ளை .
வளர்பிறை முன்பக்கம் ; முன்பக்கத்து நிலா .
வளர்மயிர் மயிர்க்குழற்சி .
வளர்வு வளர்தல் .
வளரறம் மிகுகின்ற அறம் .
வளவளத்தல் வீணே பிதற்றுதல் ; சுருக்கமின்றிச் சொற்களைப் பெருக்குதல் .
வளவளப்பு வீண் பிதற்றல் ; பயனற்ற சொல் .
வளவன் சோழன் ; வேளாளன் .
வளவி வீட்டிறப்பு .
வளவு வீடு ; வீட்டுப்புறம் .
வளவுதல் வளர்த்தல் .
வளன் காண்க : வளம் .
வளா பரப்பு ; வியப்புக்குறிப்பு .
வளாகம் இடம் ; வளைத்தல் ; உலகம் ; நிலவுலகம் ; நாடு ; தினைப்புனம் ; பரப்பு ; தோட்டம் .
வளார் இளங்கொம்பு .
வளால் தரைக்கூறுவகை .
வளாவுதல் சூழ்தல் ; மூடுதல் ; கலத்தல் ; அளவளாவுதல் .
வளி காற்று ; சுழல்காற்று ; உடல்வாதம் ; அண்டவாதநோய் ; சிறிய காலவளவுவகை .
வளிச்செல்வன் வாயுதேவன் .
வளிசம் தூண்டில் .
வளிநிலை கோபுரம் .
வளிமகன் காற்றின் மக்களான அனுமான் அல்லது வீமன் .
வளிமறை கதவு ; வீடு .
வளு இளமை ; இளைது .
வளும்பு நிணம் ; நிணம் முதலியவற்றின் மேலுள்ள வழுவழுப்பான நீர்ப்பண்டம் ; அழுக்கு .
வளுவளுத்தல் வழுக்குந்தன்மையாதல் ; பேச்சில் தெளிவில்லாதிருத்தல் .
வளை சுற்றிடம் ; சங்கு ; கைவளை ; சக்கரப்படை ; துளை ; எலி முதலியவற்றின் பொந்து ; நீண்ட மரத்துண்டு ; தூதுவளை என்னும் கொடிவகை ; சிறிய உத்திரம் .
வளை (வி) தடைசெய் ; கட்டு ; வாரு ; முற்றுகையிடு .
வளைக்கரன் சங்கை ஏந்திய திருமால் .
வளைகாப்பு முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்து அல்லது ஏழாம் மாதத்தில் வளையலணியுஞ் சிறப்பு நிகழ்ச்சி .
வளைச்சல் வளைவு ; வளைவுள்ளது ; வீடு முதலியவற்றின் சுற்றுப்புறம் .
வளைத்தல் வளையச்செய்தல் ; சூழ்தல் ; தடுத்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல் ; எழுதுதல் ; அணிதல் .
வளைத்துவைத்தல் அப்பாற் போகவொட்டாது மடக்குதல் ; சிறையகப்படுத்துதல் .
வளைதடி ஓர் எறிபடைவகை .
வளைதல் சூழ்தல் ; சுற்றுதல் ; சுற்றிவருதல் ; தாழ்தல் ; கோணுதல் ; திடமறுதல் ; நேர்மையினின்று விலகுதல் ; வருந்துதல் .
வளைநீர் உலகை வளைத்துக்கிடக்கும் கடல் .
வளைப்பு வளைத்தல் ; வளைவு ; சூழ்தல் ; முற்றுகையிடுதல் ; குடியிருப்பிடம் ; சிறை ; காவல் ; உழவுசால் .
வளைபோழ்நர் காண்க : சங்கறுப்போர் .
வளைபோழுநர் காண்க : சங்கறுப்போர் .
வளைமணி அக்குமணி , சங்குமணி .
வளையக்கொடி காண்க : அண்ண(ணா)ந்தாள் .
வளையக்கோலுகை சுற்றுகை ; தனக்குமட்டும் உரிமையாக்கிக்கொள்ளுகை .
வளையகம் சங்கு .
வளையம் தாமரைச்சுருள் ; சுற்று ; முடியில் வளைத்துச்சூடும் மாலை ; குளம் ; கைவளை ; சங்கு ; எல்லை ; மண்டலம் ; ஒரு கோள் வான மண்டலத்தை ஒருமுறை சுற்றிவரும் காலம் .
வளையம்போடுதல் வட்டம் இடுதல் ; சூதாட்டத்தில் வளையமெறிதல் ; ஒருவனைச் சுற்றித்திரிதல் .
வளையமாலை முடியில் வளைத்துச் சூடும் மாலை .
வளையமுடித்தல் திரளக் கூட்டிமுடித்தல் .