சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வளையல் | மகளிர் கையணிவகை ; கண்ணாடி ; வளைவுள்ளது . |
| வளையலுப்பு | ஒரு மருந்துப்புவகை . |
| வளையற்காரன் | வளையல் விற்பவன் . |
| வளையில் | காண்க : வளையல் . |
| வளைவாணன் | பலராமன் ; நாகநாட்டரசன் . |
| வளைவாணி | கொக்கி . |
| வளைவாயுதம் | உள்வளைந்த இடங்களை இழைக்கும் இழைப்புளிவகை . |
| வளைவி | வீட்டிறப்பு ; மகளிரது கையணிவகை . |
| வளைவிற்பொறி | வளைந்து தானே எய்யும் இயந்திரவில் . |
| வளைவு | சுற்று ; கோணல் ; கட்டடத்தில் அமைக்கும் வில்வளைவு ; வீட்டுப்புறம் ; வட்டம் ; பணிவு . |
| வளைவெடுத்தல் | வளைவை நிமிர்த்துதல் ; வளைவுகட்டுதல் . |
| வற்கடம் | வறட்சி ; பஞ்சம் . |
| வற்கம் | குதிரையின் கடிவாளம் ; குதிரைக்குரிய கலணை முதலியன ; இனம் , ஒத்த பொருள்களின் கூட்டம் ; பிசாசு ; அத்தியாயம் ; ஒழுங்கு ; மரப்பட்டை ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவரும் தொகை ; மரபு . |
| வற்கமார்க்கம் | நாயுருவிச்செடி . |
| வற்கரி | கரகம் ; குதிரையின் கடிவாளம் . |
| வற்கலம் | மரவுரி ; மரப்பட்டை . |
| வற்கலை | மரவுரி ; மரப்பட்டை . |
| வற்காலம் | வறட்சிக்காலம் . |
| வற்காலி | வெள்ளாடு ; ஆடு . |
| வற்கித்தல் | ஒரு தொகையை அத் தொகையாற் பெருக்குதல் . |
| வற்குணம் | கொடுமை . |
| வற்கெனல் | வலிதாதற்குறிப்பு . |
| வற்சதரம் | இளங்கன்று . |
| வற்சவம் | எருமை , பசு இவற்றின் கன்று ; குழந்தைப் பருவம் ; ஒரு நாடு ; மார்பு . |
| வற்சரம் | ஆண்டு . |
| வற்சலம் | காண்க : வற்சலை ; பேரன்பு . |
| வற்சலை | ஈன்ற பசு . |
| வற்சன் | குழந்தை . |
| வற்சை | மலட்டுப்பசு ; குழந்தை . |
| வற்பம் | வன்மை ; வறட்சி . |
| வற்பு | உறுதிப்பாடு ; வலிமை . |
| வற்புலம் | மேட்டுநிலம் . |
| வற்புறுத்துதல் | உறுதிப்படுத்திச் சொல்லுதல் ; வலிமைப்படுத்துதல் . |
| வற்புறுதல் | உறுதிப்படுதல் ; திடப்படுதல் ; ஆறுதலடைதல் . |
| வற்றம் | கடல்நீர் வடிகை ; வறட்சி . |
| வற்றல் | வடிகை ; வறளுகை ; உலர்ந்தது ; உலர வைத்த காய் , இறைச்சி முதலிய உணவு . |
| வற்றனோய் | இரத்தங் குன்றி உடலை மெலிவிக்கும் நோய் . |
| வற்று | கடல்நீர் வடிகை ; கூடியது , ஒரு சாரியை . |
| வற்றுதல் | சுவறுதல் ; கடல்நீர் முதலியன வடிதல் ; புண் முதலியன உலர்தல் ; வாடுதல் ; மெலிதல் ; பயனற்றுப்போதல் . |
| வறக்கடை | தீமுதலியவற்றா லுண்டாகிய வறட்சி . |
| வறக்காலன் | தன் குடும்பத்திற்கு இழப்புண்டாக வந்தவன் . |
| வறக்காலி | தன் குடும்பத்திற்கு இழப்புண்டாக வந்தவள் . |
| வறங்கூர்தல் | மழைபெய்யாதுபோதல் ; பஞ்சம் மிகுதல் . |
| வறட்காலம் | பஞ்சகாலம் ; மழையில்லாக் காலம் . |
| வறட்கேடு | மழையின்மையா லுண்டாகுந் துன்பம் . |
| வறட்சாவி | மழையில்லாமையாலான பயிர்ச்சாவி . |
| வறட்சி | நீரற்றுப்போதல் ; உடற்காங்கை ; சொறி ; உடலை மெலியச்செய்யும் நோய் . |
| வறட்சுண்டி | காண்க : ஆடுதின்னாப்பாளை ; சுண்டிவகை . |
| வறட்டாடு | மலட்டு ஆடு . |
| வறட்டி | அடைபோல் தட்டிக் காய்ந்த சாணம் . |
| வறட்டிருமல் | தொண்டையை வறளச்செய்யும் இருமல்வகை . |
| வறட்டுதல் | வற்றச்செய்தல் ; காயச்செய்தல். வறுத்தல் . |
| வறட்டுப்பசு | மலட்டுப்பசு . |
| வறட்பால் | காய்ந்து கட்டியான பால் . |
| வறடன் | மெலிந்தவன் ; ஆண்மையற்றவன் . |
| வறடி | மெலிந்தவள் ; மலடி . |
| வறடு | வறட்சி ; ஈனாத பசு முதலியன . |
| வறண்டி | குப்பை முதலியன வாருங் கருவி ; வழிக்குங் கருவி . |
| வறண்டுதல் | தெள்ளுதல் ; பிறாண்டுதல் ; திருடுதல் . |
| வறத்தல் | காய்தல் ; வறுமையாதல் ; மழை பெய்யாது போதல் ; குறைந்து மெலிதல் . |
| வறம் | காண்க : வறன் . |
| வறல் | உலர்தல் ; வறண்ட நிலம் ; சுள்ளி ; நீரில்லாமை ; வறுத்தல் ; உலரவைத்த காய் ; இறைச்சி முதலிய உணவு . |
| வறவறெனல் | உலர்ந்து கடினமாதற்குறிப்பு . |
| வறவு | கஞ்சி . |
| வறள் | உலர்கை ; வறட்சியான நிலம் ; மணற்பாங்கு . |
| வறளி | காண்க : வறட்டி ; உலர்ந்தது . |
| வறளுதல் | வற்றுதல் ; உடம்பு மெலிதல் . |
| வறற்காலை | நீரில்லாத காலம் . |
| வறன் | வற்றுகை ; நீரில்லாமை ; கோடைக்காலம் ; பஞ்சம் ; வறுமை ; வறண்ட பூமி . |
| வறனுழத்தல் | நீரின்றி வருந்துதல் ; வறுமையுறுதல் . |
| வறிஞன் | பொருளில்லாதவன் . |
| வறிது | சிறிது ; பயனின்மை ; அறியாமை ; குறைவு ; வறுமை ; உள்ளீடற்றது ; இயலாமை . |
| வறியன் | காண்க : வறிஞன் ; அறிவிலான் . |
| வறியான் | காண்க : வறிஞன் ; அறிவிலான் . |
| வறியோன் | காண்க : வறிஞன் ; அறிவிலான் . |
|
|
|