சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வாயுறுத்தல் | வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல் ; வாயிலூட்டுதல் . |
| வாயுறை | உண்கை ; உணவு ; அறுகம்புல் ; அன்னப்பிராசனம் ; கவளம் ; மருந்து ; உறுதிமொழி ; மகளிர் காதணி . |
| வாயுறைவாழ்த்து | தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை . |
| வாயூறுதல் | வாயில் நீர் ஊறுதல் ; விரும்பல் . |
| வாயெடுத்தல் | பேசத்தொடங்கல் ; குரலெடுத்தல் . |
| வாயைக்கட்டுதல் | உணவிற் பத்தியமாக இருத்தல் ; காண்க : வாய்க்கட்டு ; வாயை மூடுதல் . |
| வாயொடுங்குதல் | பேச்சடங்குதல் . |
| வாயொலி | பாடல் . |
| வாயோடு | உடைந்த பானையின் வாய்ச்சில்லு ; குற்றும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக்கழுத்துப்போன்ற கருவி . |
| வார் | நெடுமை ; கடைகயிறு ; தோல்வார் ; நுண்மை ; நேர்மை ; வரிசை ; உயர்ச்சி ; நீர் ; தோல் ; முலைக்கச்சு ; துண்டு . |
| வார்க்கட்டு | வாராற் கட்டப்பட்டது ; யாழ்த்தந்தியுள்ள நரம்புக்கட்டு . |
| வார்க்குத்தி | நீர்ப்பெருக்குச் சுழித்தோடும் இடம் . |
| வார்க்குத்து | நீர்ப்பெருக்குச் சுழித்தோடும் இடம் . |
| வார்காது | தொங்கும் துளைச்செவி . |
| வார்த்தல் | ஊற்றுதல் ; உலோகத்தையுருக்கி அச்சில் ஊற்றி உருவஞ்செய்தல் ; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல் ; தோசை முதலியன சுடுதல் . |
| வார்த்தாகம் | கத்தரிச்செடி . |
| வார்த்திகம் | வாணிகம் ; வாழ்க்கை ; சூத்திரக் கருத்தை விளக்கும் ஓர் உரைவகை ; நான்கு மாத்திரைகூடிய களை ; கிழத்தன்மை . |
| வார்த்திகன் | தூதன் ; வணிகன் . |
| வார்த்தை | சொல் ; மறுமொழி ; வாக்குத்தத்தம் ; செய்தி ; அணிவகை ; உழவு ; பசுக்காவல் ; வாணிகம் என்னும் வணிகர் தொழில் ; ஒரு நூல் . |
| வார்த்தைகொடுத்தல் | பேசுதல் ; உறுதிமொழி தருதல் ; பேச இடங்கொடுத்தல் . |
| வார்த்தைத்தொழிலோர் | உழவர் . |
| வார்த்தைதடித்தல் | பேச்சுக் கடுமையாய் வளர்தல் . |
| வார்த்தைநாணயம் | சொல் தவறாமை . |
| வார்த்தைப்பாடு | உறுதிமொழி ; திருமணத்தில் மணமக்கள் சொல்லும் உறுதிமொழி ; பொருள்முக்கியம் இன்றி வாக்கியத்தில் விழுஞ் சொல் ; பேச்சுறுதி ; நயமொழி . |
| வார்த்தையாடுதல் | உரையாடுதல் . |
| வார்த்தையெடுத்தல் | பேச்சுத் தொடங்கல் ; உரையாடல் . |
| வார்தல் | ஒழுகுதல் ; வெளிவிடுதல் ; நெடுமையாதல் ; நேராதல் ; உயர்தல் ; ஒழுங்குபடுதல் ; நென்மணி முதலியன பால்கட்டுதல் ; உரிதல் ; மயிர்கோதுதல் ; தெரிதல் ; யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில் . |
| வார்ப்படம் | உருக்கிவார்க்கும் தொழில் . |
| வார்ப்பு | ஒழுக்குகை ; உலோகங்களை உருக்கி வார்த்தல் ; உருக்கி வார்க்கப்பட்டது ; அகன்ற பாண்டவகை ; கைவளை ; மாணிக்கத்தில் ஏற்றிய மேற்பூச்சு . |
| வார்ப்புவேலை | உருக்கிவார்த்தல் வேலை ; உருக்கி வார்க்கப்பட்டது . |
| வார்பு | நீளவாக்கில் சீவப்படுகை . |
| வார்மை | ஒழுக்கம் ; நேர்மை ; மரியாதை . |
| வாரக்கம் | உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; படைவீரனாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம் . |
| வாரக்காரன் | உழுங் குடியானவன் . |
| வாரக்குடி | நிலத்தைப் பயிரிட்டுப் பங்குபெறுங் குடியானவன் . |
| வாரகம் | உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் ; குதிரை ; குதிரைநடை ; கடல் ; காண்க : நிலப்பனை . |
| வாரசுந்தரி | விலைமகள் . |
| வாரசூலை | சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையில் பயணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைக்குற்றம் . |
| வாரநடை | பனை முதலியவற்றின் ஓலையீர்க்கு ; தராசின் ஏற்றத்தாழ்வான நிலை ; தோல்வார் . |
| வாரணம் | சங்கு ; யானை ; பன்றி ; தடை ; மறைப்பு ; கவசம் ; சட்டை ; காப்பு ; கேடகம் ; உன்மத்தம் ; கோழி ; உறையூர் ; கடல் ; காசி நகரம் ; மரவகை ; நீங்குகை . |
| வாரணரேகை | மக்களின் நல்வாழ்வைக் காட்டும் உள்ளங்கைக் கோடு . |
| வாரணன் | கணபதி . |
| வாரணாசி | காசிநகரம் . |
| வாரணை | தடை . |
| வாரணையம் | தடை . |
| வாரத்துக்குவளர்த்தல் | விற்பதால் கிடைக்கும் இலாபத்தைச் சொந்தக்காரனோடு பகுத்துக் கொள்வதாக ஒப்புக்கொண்டு கோழி பன்றி முதலியன வளர்த்தல் . |
| வாரப்பாடு | அன்பு ; உருக்கம் ; ஒருசார்பு . |
| வாரம் | ஏழு கிழமைகள்கொண்ட காலப்பகுதி ; உரிமை ; குடியிறை ; வாடகை ; தானியக் கட்டுக்குத்தகை ; மேல்வாரக் குடிவாரங்களாகிய விளைச்சற் பங்கு ; பங்கு ; பாதி ; அன்பு ; ஒருசார்பு பற்றிநிற்றல் ; தடை ; திரை ; வாயில் ; திரள் ; கடல் ; பாண்டம் ; தடவை ; வேதச்சந்தை ; வரம்பு ; நீர்க்கரை ; மலைச்சாரல் ; தாழ்வாரம் ; பக்கம் ; சொல்லொழுக்கும் இசையொழுக்குமுடைய இசைப்பாட்டு ; கலிப்பாவுறுப்புகளுள் ஒன்றான சுரிதகம் ; பின்பாட்டு ; தெய்வப்பாடல் ; கூத்துவகை ; தூண் . |
| வாரம்படுதல் | நடுநிலைதவறுதல் ; ஒரு பக்கமாய்ப் பேசுதல் . |
| வாரம்பாடுதல் | பின்பாட்டுப் பாடுதல் . |
| வாரம்பிரித்தல் | சாகுபடி நெல் முதலியவற்றைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல் . |
| வாரம்வைத்தல் | விருப்பப்படுதல் . |
| வாரமாதர் | பொதுமகளிர் . |
| வாராக்கடன் | செலவெழுதவேண்டிய கடன் . |
| வாராக்கதி | வீடுபேறு . |
| வாராகம் | திருமாலின் பன்றிப்பிறவி ; ஒரு சோதிடக் கணிதநூல் . |
| வாராகரம் | கடல் . |
| வாராகன் | பன்றிப்பிறவி எடுத்த திருமால் . |
| வாராகி | எழுவகை மாதருள் ஒருத்தி ; பெண்பன்றி ; ஒரு கிழங்குவகை ; பூமி . |
| வாராவதி | பாலம் . |
| வாராவரவு | அருகிய வருகை . |
| வாராவாரம் | வாரந்தோறும் . |
| வாராவுலகம் | வீடுபேறு ; வீரர் முதலியோர் அடைதற்குரிய துறக்கம் . |
| வாரானை | பிள்ளைத்தமிழில் குழந்தையைத் தம்மிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம் . |
| வாரி | வருவாய் ; விளைவு ; தானியம் ; செல்வம் ; மூட்டைகளைக் கட்டவுதவும் கழி ; கூரையினின்று வடியும் நீரைக் கொண்டுசெல்லுங்கால் ; தோணிப்பலகை ; மடை ; சீப்பு ; குப்பைவாருங் கருவி ; தடை ; மதிற்சுற்று ; செண்டுவெளி ; பகுதி ; நீர் ; வெள்ளம் ; கடல் ; நீர்நிலை ; நூல் ; திருமகள் ; வீணைவகை ; இசைக்குழல் ; யானையகப்படுத்தும் இடம் ; யானைகட்டுங் கயிறு ; யானைக்கோட்டம் ; வாயில் ; கதவு ; வழி ; முறையில் என்னும் பொருளில் வரும் சொல் . |
| வாரிகம் | செடிவகை . |
| வாரிச்சி | நடனவகை . |
| வாரிசம் | நீரில் தோன்றும் தாமரை ; உப்பு ; சங்கு . |
| வாரிசன் | திருமால் . |
| வாரிசாதம் | தாமரை . |
| வாரிசாதை | திருமகள் . |
| வாரிசு | ஒருவன் ஆயுளுக்குப்பின் அவனது சொத்தையடைதற்கு உரியவன் . |
| வாரித்தல் | தடுத்தல் ; ஆணையிட்டுக் கூறுதல் ; நடத்துதல் . |
| வாரித்திரம் | ஓலைக்குடை ; காண்க : சாதகப்புள் . |
| வாரிதம் | மேகம் ; தடை . |
|
|
|