வாரிதி முதல் - வாலேபம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வாரிதி கடல் .
வாரிதித்தண்டு பவளம் .
வாரிதிநாதம் சங்கு .
வாரிதிவிந்து கடல்நுரை .
வாரிநாதன் வருணன .
வாரிநிதி கடல் .
வாரியப்பெருமக்கள் ஊராளும் சபையோர் .
வாரியம் மேல்விசாரணை செய்யும் உத்தியோகம் ; கழகம் ; துறை .
வாரியன் மேல்விசாரணை செய்வோன் ; மேலதிகாரி ; குதிரைப்பாகன் .
வாரியிறைத்தல் வீணாக்குதல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; சிதறச்செய்தல் .
வாரியோட்டு நீரோடை .
வாரிவளைத்தல் ஒருசேரத் திரட்டுதல் .
வாரிவாகம் மேகம் .
வாரிவிடுதல் மிகுதியாகக் கொடுத்தல் .
வாருகம் வெள்ளரி ; காண்க : பேய்க்கொம்மட்டி .
வாருகோல் துடைப்பம் .
வாருண்டகம் எண்காற்பறவை .
வாருண்டம் எண்காற்பறவை ; பீளை ; குறும்பி .
வாருணதீர்த்தம் ஆறு முதலியவற்றின் நன்னீரில் நீராடல் .
வாருணப்படை வருணனைத் தேவதையாகக் கொண்ட பாணம் .
வாருணம் வருணனுக்குரியது ; மேற்கு ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது ; ஒரு புராணம் ; கடல் ; குதிரைவகை ; மாவிலிங்கமரம் ; கள் .
வாருணி அகத்தியன் ; வருணன் மகள் ; வருணன் மனைவி ; கள் ; மேற்கு ; சதயநாள் ; கொடிவகை .
வாருதல் அள்ளுதல் ; கொள்ளுதல் ; தொகுத்தல் ; மிகுதியாகக் கொண்டுசெல்லுதல் ; கவர்தல் ; திருடுதல் ; தோண்டியெடுத்தல் ; கொழித்தல் ; மயிர்சீவுதல் ; அரித்தல் ; யாழ் நரம்பைத் தடவுதல் ; ஓலையை எழுதுதற்குரிய இதழாகச் செம்மைசெய்தல் ; பூசுதல் .
வாரை மூங்கில் ; காவுதடி ; மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி ; கைமரம் ; நீண்டு ; ஒடுக்கமானது ; காண்க : ஆவிரை ; மீன்வகை .
வால் இளமை ; தூய்மை ; வெண்மை ; நன்மை ; பெருமை ; மிகுதி ; விலங்குகளின் பின்புறத்தில் நீண்டு தொங்கும் உறுப்பு ; நீளமானது ; குறும்புசெய்பவர் ; குறும்பு ; காண்க : வாலுளுவை .
வால்நட்சத்திரம் நீண்ட உடலுடன் வானில் சுழன்றுவரும் ஒளிப்பிழம்பு ; தூமகேது ; வால்மீன் .
வால்மிளகு ஒரு கொடிவகை .
வால்முளைத்தல் குறும்புசெய்தல் .
வால்வரிக்கொடுங்காய் வெள்ளரிக்காய் .
வால்வெடித்தல் சினத்தினால் வாலைத் தூக்கி அடித்தல் .
வால்வெள்ளி காண்க : வால்நட்சத்திரம் .
வாலகம் விலங்கின் வால் .
வாலகிரகம் இளம்பிள்ளைகட்கு வருகின்ற கோள்பற்றிய நோய் .
வாலகன் காண்க : வாலிபன் .
வாலகில்லியர் கட்டை விரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார் .
வாலகிலர் கட்டை விரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார் .
வாலகிலியர் கட்டை விரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார் .
வாலசரிதைநாடகம் கண்ணபிரான் இளமைப் பருவத்து நடித்த கூத்து .
வாலதி வால் ; யானையின் வால் .
வாலம் வால் ; தலைமயிர் ; நீண்டு அகலம் குறுகிய துண்டு ; கந்தைத்துணி ; இளமை ; எறிபடைவகை ; தனியாகக் கட்டடம் செய்த புத்தகம் .
வாலமதி இளஞ்சந்திரன் .
வாலமனை அகப்புறத்தமைந்த சிறுவீடு .
வாலமாலம் அரிதாரம் .
வாலரசம் சாதிலிங்கத்தில் வடித்த ரசம் .
வாலரவி உதயகாலச் சூரியன் .
வாலரிக்கொடுங்காய் காண்க : வால்வரிக்கொடுங்காய் .
வாலவயது இளமை .
வாலவாயசம் வைடூரியம் .
வாலவாயம் வைடூரியம் .
வாலவிளையாட்டு இளமை விளையாட்டு .
வாலறிவன் கடவுள் .
வாலறிவு பேரறிவு ; உண்மை .
வாலன் இளைஞன் ; குறும்புசெய்பவன் ; ஒரு நெல்வகை ; பாலன் .
வாலாசம் மாடு குதிரைகளின் வாலின் அடியிலிருக்கும் வார் .
வாலாட்டு குறும்பு ; செருக்கான செயல் .
வாலாட்டுதல் குறும்புசெய்தல் ; வீண்பெருமை காட்டுதல் .
வாலாதபம் காலைவெயில் .
வாலாதி பந்தயக்குதிரை .
வாலாமை தூய்மையின்மை ; அழுக்கு ; மகளிர் தீட்டு .
வாலாயம் வழக்கம் ; பொதுவானது ; மிக்க பழக்கம் ; வைடூரியம் .
வாலி வெண்ணிறமுள்ள பலராமன் ; கிட்கிந்தை மன்னன் ; வாலுடையது ; கரிக்குருவி ; மழைத்தூரல் ; குதிரைவாலி ; திருவாலியமுதனார் ; சீனிவாலி .
வாலிகை மணல் .
வாலிது தூயது ; வெண்மையானது ; நன்மையானது ; வலிமை .
வாலிபம் இளமை .
வாலிபன் இளைஞன் .
வாலிமை பெருமை ; வலிமை .
வாலியம் காண்க : வாலிபம் ; கந்தைத்துணி .
வாலியன் தூய்மையுடையவன் ; இளைஞன் .
வாலூகம் மணல் ; வெண்மணல் .
வாலுருவிவிடுதல் துன்பஞ்செய்யத் தூண்டி விடுதல் .
வாலுவன் சமையற்காரன் .
வாலுளுவை ஒரு கொடிவகை .
வாலுறை அடுப்பு .
வாலூகம் நஞ்சு .
வாலேபம் கழுதை .