வாலேயம் முதல் - வாளுழவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வாலேயம் கழுதை .
வாலை இளம்பருவத்திலுள்ள பூப்படையாத பெண் ; சத்திபேதங்களுள் ஒன்று ; செய்நீர் வடிக்கும் பாண்டம் ; தூய்மை ; பாதரசம் ; சித்திராநதி .
வாலைரசம் காண்க : இரசகருப்பூரம் .
வாவயம் காண்க : துளச .
வாவரசி காண்க : வாழ்வரசி , இல்லாள் .
வாவல் தாண்டுகை ; கூத்து ; வௌவால் ; கடல் ; மீன் ; வயா .
வாவி நீர்நிலை ; நடைக்கிணறு ; ஆற்றோடை .
வாவிப்புள் அன்னம் .
வாவு காண்க : உவா ; விடுமுறைநாள் .
வாவுதல் தாண்டுதல் .
வாழ் முறைமை .
வாழ்க்கை வாழ்தல் ; வாழ்நாள் ; இல்வாழ்க்கை ; மனைவி ; நல்வாழ்வுநிலை ; செல்வநிலை ; ஊர் ; மருதநிலத்தூர் .
வாழ்க்கைத்துணை மனைவி .
வாழ்க்கைப்படுத்துதல் திருமணஞ்செய்து கொடுத்தல் .
வாழ்க்கைப்படுதல் திருமணமாதல் .
வாழ்கிறவள் காண்க : வாழ்வரசி .
வாழ்ச்சி வாழ்க்கை ; செல்வநிலை ; வெற்றியாகிய செல்வநிலை .
வாழ்ச்சிப்படுத்துதல் வாழவைத்தல் .
வாழ்த்தணி இன்னார்க்கு இன்ன நன்மை இயைக என்று முன்னியது விரிக்கும் அணிவகை .
வாழ்த்து துதி ; ஆசி ; கடவுளை வாழ்த்துகை ; மங்களம் பாடுகை ; அணிவகை .
வாழ்த்துதல் நல்லுரை கூறுதல் ; துதித்தல் ; மங்களம்பாடுதல் .
வாழ்த்தெடுத்தல் துதித்தல் .
வாழ்தல் இருத்தல் ; செழித்திருத்தல் ; மகிழ்தல் ; சுமங்கலியாக இருத்தல் ; விதிப்படி ஒழுகுதல் .
வாழ்நர் வாழ்வோர் .
வாழ்நாள் ஆயுட்காலம் .
வாழ்முதல் வாழ்வுக்கு முதற்காரணனான கடவுள் .
வாழ்வரசி கணவனோடு வாழ்பவள் , சுமங்கலி .
வாழ்வித்தல் வாழவைத்தல் ; நீதிமன்றமூலம் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல் .
வாழ்விழத்தல் கைம்பெண்ணாதல் ; தாரமிழத்தல் .
வாழ்விழந்தவள் கைம்பெண் .
வாழ்வினை கணவன் தன்மை .
வாழ்வு நல்வாழ்க்கை ; பிழைப்பு ; வாழ்க்கைக்காக விடப்பெற்ற இறையிலிநிலம் ; வசிக்கை ; உறைவிடம் ; ஊர் ; உயர்ந்த பதவி ; செல்வம் ; முறைமை .
வாழ்வுதாழ்வு ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் செல்வநிலையும் வறுமைநிலையும் .
வாழகம் வெள்ளைக்குங்கிலியம் .
வாழாக்கேடி காண்க : வாழாவெட்டி .
வாழாதவள் காண்க : வாழாவெட்டி ; கைம்பெண் .
வாழாவெட்டி கணவனோடு சேர்ந்துவாழப் பெறாதவள் .
வாழி வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல் ; ஓர் அசைச்சொல் .
வாழிப்பு மதர்ப்பு .
வாழிய காண்க : வாழி ; முன்னிலையசைச்சொல் .
வாழுமோர் வாழ்பவர் .
வாழை ஒரு மரவகை .
வாழைக்கன்று இளவாழை .
வாழைத்தண்டு குலையீன்ற வாழையின் உட்புறத் தண்டு .
வாழைப்பூ வாழையின் பூ ; மீன் .
வாழைமலடி ஒரே பிள்ளையைப் பெற்றவள் .
வாழைமுகை வாழையின் பூ .
வாழையடிவாழை இடையறாது தொடர்ந்து வருஞ் சந்தானம் .
வாள் ஒளி ; கத்தி ; கத்தரிகை ; கூர்மை ; ஈர்வாள் ; விளக்கம் ; புகழ் ; கொல்லுகை ; கலப்பை ; உழுபடையின் கொழு ; கயிறு ; நீர் ; கச்சு .
வாள்கைக்கொண்டாள் கொற்றவை .
வாள்வட்டணை வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை .
வாள்வரி புலி .
வாள்வரிக்கொடுங்காய் வெள்ளரிக்காய் .
வாள்வலம் வாள்வீரம் .
வாள்வாளெனல் அழுது கதறுதற்குறிப்பு .
வாள்வீச்சு வாளைச் சுழற்றுகை .
வாள்வீரம் வாட்போர்த்திறமை ; வில்வமரம் .
வாளகம் வெட்டிவேர் .
வாளகிரி சக்கரவாளமலை .
வாளம் வாள் ; காண்க : யாளி ; வட்டம் ; சக்கரவாளமலை ; சக்கரவாகப்புள் ; காண்க : நேர்வாளம் .
வாளமலை காண்க : வாள்வீச்சு .
வாளரம் ஈர்வாளைக் கூர்மையாக்க உதவும் அரம் ; மரமறுக்கும் வாள் .
வாளரி அரிமா .
வாளவரை கொடிவகை .
வாளா மோனமாய் ; அலட்சியமாய் ; பயனின்றி .
வாளாங்கு மோனமாய் ; அலட்சியமாய் ; பயனின்றி .
வாளாண்மை வாட்போர்த்திறமை .
வாளாது காண்க : வாளா .
வாளாமை மௌனம் ; பொருட்படுத்தாமை ; பயனின்மை ; உள்ளீடின்மை .
வாளி வாள்வீரன் ; வட்டமாயோடல் ; மாதர் காதணியுள் ஒன்று ; நீர்ச்சால்வகை .
வாளிகை ஒரு காதணிவகை .
வாளிபோதல் குதிரை முதலியன வட்டமாயோடுதல் .
வாளியம்பு அலகம்பு .
வாளுழத்தி கொற்றவை .
வாளுழவன் வாள்வீரன் ; படைவீரன் ; தானைத் தலைவன் .