வாளெடுப்பான் முதல் - வானேறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வாளெடுப்பான் அரசனது வாளைத் தாங்கிச் செல்வோன் .
வாளேந்தி வாள்தரித்த வீரன் ; துர்க்கை .
வாளேறு வாள்வெட்டு ; ஒளியெறிகை .
வாளை ஒரு மீன்வகை .
வாற்கலம் காண்க : வற்கலை .
வாற்கிண்ணம் எண்ணெய் முதலியன வைத்தற்குரியதும் கைப்பிடி யுள்ளதுமான கிண்ணவகை .
வாற்கோதுமை நீண்ட கோதுமைவகை .
வாற்சகம் கன்றுக்கூட்டம் ; பசுவின் கூட்டம் .
வாற்சல்லியம் உருக்கமான அன்பு .
வாறான் கப்பற்பாய் கட்டுங் கயிறு .
வாறு விதம் ; பேறு ; வலிமை ; வரலாறு .
வாறோசுசூடன் கருப்பூரவகை .
வான் வானம் ; மூலப்பகுதி ; மேகம் ; மழை ; அமிர்தம் ; துறக்கம் ; நன்மை ; பெருமை ; அழகு ; வலிமை ; நேர்மை ; மரவகை ; ஒரு வினையெச்ச விகுதி .
வான்கண் வானத்தின் கண்ணாகிய சூரியன் .
வான்கழி பரலோகம் .
வான்கொடி மின்னற்கொடி .
வான்கோழி கோழிவகை .
வான்பதம் வீடுபேறு .
வான்புலம் உண்மையறிவு .
வான்மகள் இந்திராணி .
வான்மணி காண்க : வான்கண் .
வான்மிகம் இந்திரவில் ; புற்று .
வான்மீன் விண்மீன் ; காண்க : வால்நட்சத்திரம் .
வான்மை வெண்மை ; தூய்மை .
வான்மைந்தன் வாயுதேவன் .
வான்மொழி வானொலி .
வான்வளம் மழை .
வான்விளக்கம் சூரியன் .
வான்வெளிச்செலவு வான்வழிப்பயணம் .
வான்றரு கற்பகமரம் .
வான்றேர்ப்பாகன் விண்ணில் உலவுந் தென்றலாகிய தேரைச் செலுத்துகின்ற மன்மதன் .
வானக்கல் காகச்சிலை .
வானகம் விண் ; விண்ணுலகம் ; மரவகை .
வானசாத்திரம் விண்மீன் முதலியவற்றின் செயல்களை அறிவிக்கும் நூல் .
வானதி கங்கை .
வானநாடன் மேலுலகத்திற்குத் தலைவன் ; துறக்கவுலகத்தான் .
வானநாடி துறக்கவுலகத்தாள் ; கீரைவகை .
வானநாடு வீட்டுலகம் ; காண்க : வானநாடி .
வானப்பத்தியம் பூத்தோன்றாது காய்க்கும் மரம் .
வானப்பிரத்தம் மனைவியோடு காட்டில் தவம் செய்தல் .
வானப்பிரத்தன் இல்லாளுடன் கானகம் புகுந்து தவஞ்செய்வோன் .
வானப்பிரியை மரம் ; இலுப்பைமரம் .
வானம் விண் ; தேவருலகு ; அக்கினி ; மேகம் ; மழை ; உலர்ந்தமரம் ; மரக்கனி ; உலர்ந்த காய் ; உலர்ச்சி ; உயிரோடு இருக்கை ; போகை ; மணம் ; நீர்த்திரை ; புற்பாய் ; கோபுரத்தின் ஓருறுப்பு .
வானம்பாடி ஒரு பாடும் பறவைவகை ; சாதகப்புள் ; ஆசனவகை .
வானம்பார்த்தபயிர் மழையால் விளையும் பயிர் .
வானம்பார்த்தபூமி பாசனவழி யில்லாது மழையால் விளையும் பூமி .
வானமண்டலம் விண்வெளி .
வானமாமலை திருமால் ; ஓர் ஊர் .
வானர் காண்க : வானவர் .
வானரக்கொடியோன் காண்க : அனுமக்கொடியோன் .
வானரகதி குதிரைநடை ஐந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை .
வானரப்பகை நண்டு .
வானரம் குரங்கு .
வானரமகள் காண்க : வானரமங்கை ; பெண் குரங்கு .
வானரமங்கை வானுலகத்துப் பெண் .
வானவர் தேவர் .
வானவர்கோன் இந்திரன் .
வானவர்முதல்வன் பிரமன் .
வானவர்முதுவன் காண்க : வானோர்முதுவன் .
வானவரம்பன் சேரன் .
வானவருறையுள் கோயில் .
வானவல்லி மின்னற்கொடி .
வானவன் தேவன் ; காண்க : வானோர்முதல்வன் ; சூரியன் ; சேர அரசன் .
வானவில் இந்திரவில் .
வானவூர்தி ஆகாயவிமானம் .
வானவெளி திறந்தவெளியாயிருக்கும் வீட்டின் உள்முற்றம் ; விண்வெளி .
வானாடு காண்க : வானநாடு .
வானி மேற்கட்டி ; துகிற்கொடி ; கூடாரம் ; ஆன்பொருநை ; பவானியாறு ; மரவகை ; காற்றாடிப்பட்டம் ; இடிக்கொடி ; படை ; செடிவகை .
வானிதம் மணல்போன்று நுண்ணியதா யிருக்குஞ் சருக்கரை .
வானிழல் விண்ணிலிருந்து எழும் ஒலி , வானொலி .
வானிறை நீர்நிறைந்த மேகம் .
வானீரம் வஞ்சிக்கொடி .
வானுலகம் துறக்கம் ; வீட்டுலகம் .
வானுலகு துறக்கம் ; வீட்டுலகம் .
வானேறு இடியேறு .