சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| விஞ்ஞானமயகோசம் | அறிவுமயமாய் உள்ள உறை . |
| விஞ்ஞானவாதி | அறிவு மாத்திரமேயுள்ளது என்று கூறும் யோகாசாரன் . |
| விஞ்ஞானாகலர் | காண்க : விஞ்ஞானகலர் . |
| விஞ்ஞை | காண்க : விஞ்சை . |
| விட்கம்பம் | வித்தாரம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; நாடகவுறுப்புகளுள் ஒன்று ; வட்டத்தின் குறுக்களவு . |
| விட்சேபம் | கலக்கம் ; அச்சம் ; எறிகை ; ஒடுங்கி விரியும் சத்தி ; கூத்துகை ; வானமண்டலத்து அட்சரேகை . |
| விட்டகுறை | முன்பிறப்பில் பயின்று விட்டதன் குறை . |
| விட்டபட்டினி | தொடர்ந்து பலநாள் கிடக்கும் பட்டினி . |
| விட்டபிறப்பு | சென்ற பிறப்பு . |
| விட்டம் | வட்டக் குறுக்களவு ; குறுக்காக இடப்பட்டது ; உத்திரம் ; உடல் ; அவிட்டநாள் . |
| விட்டரம் | தவத்தோர் பீடம் ; இருப்பிடம் ; மரம் ; கொள்கலம் ; ஒருபிடித் தருப்பைப்புல் . |
| விட்டரி | அகத்திமரம் . |
| விட்டல் | விடுதல் . |
| விட்டலக்கணை | காண்க : விட்டவாகுபெயர் . |
| விட்டவர் | பகைவர் ; துறந்தோர் . |
| விட்டவாகுபெயர் | இலக்கணை மூன்றனுள் சொல்லப்பட்ட சொல்லின் பொருளை இயைபின்மையால் கைவிட்டு அச்சொல்லிற்கு வேறுபொருள் கொள்ளுமாறு நிற்பது . |
| விட்டவாசல் | சிறப்புக்காலங்களில் அரசர் முதலியோர் சென்றுவரும் கோயிலின் தனிவாயில் . |
| விட்டார்த்தம் | பாதிவிட்டம் . |
| விட்டாற்றி | இளைப்பாறுகை . |
| விட்டி | கோழி ; முன்தள்ளிய வயிறு ; சிறுமரவகை . |
| விட்டிகை | விட்டில் . |
| விட்டிசை | அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை ; பாட்டில்வருந் தனிச்சொல் . |
| விட்டிசைத்தல் | அசைமுதலியன பிரிந்திசைத்தல் . |
| விட்டித்தல் | மலங்கழித்தல் . |
| விட்டிருத்தல் | பகைமேற் சென்றோர் பாசறையில் தங்குதல் . |
| விட்டில் | வெட்டுக்கிளி ; சிறு பூச்சிவகை ; கொலை ; பிராய்மரம் ; நீண்ட மரவகை . |
| விட்டு | திருமால் ; வானம் . |
| விட்டுக்கொடுத்தல் | காட்டிக்கொடுத்தல் ; கூட்டிக்கொடுத்தல் ; இணக்கங் காட்டுதல் ; பிறனைக் கருவியாகக்கொண்டு ஒரு செயலை அறிதல் ; அடிப்பதற்குப் பந்தயத் தேங்காய் உருட்டிவிடுதல் . |
| விட்டுச்சொல்லுதல் | மனத்திலுள்ளதை வெளியிட்டுக் கூறுதல் . |
| விட்டுசித்தர் | பெரியாழ்வார் . |
| விட்டுணு | திருமால் ; எங்கும் நிறைந்தவன் ; பன்னிரு ஆதித்தருள் ஒருவர் . |
| விட்டுணுக்கரந்தை | ஒரு செடிவகை . |
| விட்டுணுப்பிரியம் | காண்க : துளசி . |
| விட்டுணுபதம் | வானம் ; வைகுண்டம் ; காண்க : திருப்பாற்கடல் . |
| விட்டுணுவல்லபை | திருமகள் . |
| விட்டுப்பாடுதல் | குரலை அடக்காது முழுக்குரலுடன் பாடுதல் . |
| விட்டுப்பிடித்தல் | ஒரு செயலைச் சிறுதுகாலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல் ; கண்டிக்காமற் சிறிது இடங்கொடுத்தல் ; சற்றுப்பொறுத்து மறுபடியும் தொடர்தல் ; துளைக்கருவியை விரலால் தடவி வாசித்தல் . |
| விட்டுப்போதல் | நீங்கிவிடுதல் ; மிக்க நோவாயிருத்தல் . |
| விட்டும்விடாத இலக்கணை | இலக்கணை மூன்றனுள் ஒன்று . |
| விட்டுரைத்தல் | காண்க : விட்டுச்சொல்லுதல் . |
| விட்டுவிடுதல் | பிடிப்புவிடுதல் ; விலகிவிடுதல் . |
| விட்டுவிளங்குதல் | நன்றாக ஒளிவிடல் . |
| விட்டெறிதல் | தூரவிழும்படி எறிதல் ; நீக்குதல் . |
| விட்டேற்றி | சுற்றத்தினின்றும் நட்பினின்றும் நீங்கிப் பிறரையும் அவ்வண்ணம் செய்விப்போன் ; தொடர்பற்றவன்(ர்) . |
| விட்டேறு | எறிகோல் ; வேல் ; இகழ்ச்சிச்சொல் . |
| விட்டை | விலங்குகளின் மலம் . |
| விட்புலம் | மேலுலகம் . |
| விட | மிகவும் ; காட்டிலும் . |
| விடக்கு | இறைச்சி ; பிணம் . |
| விடக்கோள் | குளிகன் . |
| விடகண்டன் | சிவன் . |
| விடகாரி | நச்சகற்றும் மருத்துவன் . |
| விடங்கம் | புறாக்கூடு ; கொடுங்கை ; சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை ; வீட்டின் முகடு ; வீதிக்கொடி ; உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த இலிங்கம் ; அழகு ; ஆண்மை ; இளமை . |
| விடங்கர் | சிறுவழி ; முதலை . |
| விடங்கன் | தானே உண்டான இலிங்கம் ; நல்லுருவமுடையவன் ; காமுகன் ; வம்பளப்பவன் . |
| விடங்கு | அழகு ; அணிகலன்களின் உறுப்பு ; இன்பக்குறிப்பு . |
| விடங்கொல்லி | சிறியாநங்கைப்பூண்டு . |
| விடத்தர் | முள்ளுடைய மரவகை . |
| விடத்தேதொடரி | ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை . |
| விடத்தேர் | ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை . |
| விடத்தேரை | ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை . |
| விடதம் | முகில் ; துரிசு . |
| விடதரம் | பாம்பு ; மேகம் ; துரிசு . |
| விடதரன் | சிவபிரான் . |
| விடதாரி | காண்க : விடகாரி . |
| விடதாலி | பூரான் . |
| விடப்பு | நிலப்பிளவு . |
| விடபகதி | குதிரைநடை ஐந்தனுள் ஒன்று . |
| விடபம் | எருது ; இடபராசி ; மரக்கொம்பு ; பெருந்தூறு ; தூண் ; தளிர் ; அண்டத்திலுள்ள விதை ; விரிவடைதல் . |
| விடபி | மரப்பொது ; அத்திமரம் . |
| விடம் | நஞ்சு ; பாடாணம் ; கேடுவிளைப்பது ; தேள் ; சுக்கின் தோல் ; நீர் ; தாமரைநூல் ; காண்க : அதிவிடையம் ; கயமைத்தனம் ; மரக்கொம்பு ; மலை ; இடம் ; ஐந்துப்புள் ஒன்று ; நச்சுப்பூடுவகை . |
| விடம்பம் | உள்ளொன்று புறம்பொன்றான தன்மை ; உண்மைபோன்று நடிக்கும் நடிப்பு ; வேடம்பூணுகை . |
| விடம்பனம் | நடிப்பு ; நிந்தை ; தொல்லை . |
| விடம்பு | காண்க : விடப்பு . |
| விடம்பை | பிளப்பு . |
|
|
|