சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| விடமம் | சமமின்மை ; கரடுமுரடு ; இசைவற்றது ; தாளவங்கங்கள் விரவிவரும் நிலை ; குறும்பு ; சங்கடம் ; அழுத்தமின்மை ; அச்சம் . |
| விடமரம் | எட்டிமரம் . |
| விடமன் | குறும்புசெய்பவன் . |
| விடமி | குறும்புசெய்பவள் . |
| விடமுள் | தேள் . |
| விடமூங்கில் | ஒரு செடிவகை . |
| விடயம் | செயல் ; புலன் ; புலனால் அறியும் பொருள் ; நூல் நுதலிய பொருள் ; காரணம் ; நாடு ; பயன் ; காமவின்பம் ; சுக்கிலம் ; பாக்குடன் கூடிய வெற்றிலை மடிப்பு ; அடைக்கலம் . |
| விடயி | ஐம்பொறி ; அரசன் . |
| விடயித்தல் | பொறிகள் புலனைப் பற்றுதல் . |
| விடர் | நிலப்பிளப்பு ; மலைப்பிளப்பு ; மலைக்குகை ; முனிவர் இருப்பிடம் ; காடு ; பெருச்சாளி . |
| விடர்வு | காண்க : விடப்பு . |
| விடரகம் | மலைக்குகை ; மலை . |
| விடரவன் | பூனை . |
| விடரளை | மலைப் பிளப்பிடம் . |
| விடரி | மலை . |
| விடருதம் | பூனை ; பாம்பு . |
| விடல் | முற்றும் நீங்குகை ; ஊற்றுகை ; குற்றம் . |
| விடலம் | உள்ளி ; குதிரை ; நஞ்சு . |
| விடலி | கெட்டபெண் ; பூப்புடையாள் ; பன்னீரகவையுள்ள பெண் ; மலடி ; புல்வகை ; மணத்துக்குமுன் பூப்படைந்தாள் . |
| விடலை | பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ளவன் ; திண்ணியோன் ; பெறுமையிற் சிறந்தோன் ; வீரன் ; பாலைநிலத் தலைவன் ; மருதநிலத் தலைவன் ; மணவாளன் ; ஆண்மகன் ; இளங் காளைமாடு ; சூறைத்தேங்காய் ; இளநீர் . |
| விடவல்லி | ஒரு செடிவகை . |
| விடவி | மரம் . |
| விடவிடெனல் | குளிர் முதலியவற்றால் உண்டாகும் நடுக்கக்குறிப்பு ; சுறுசுறுப்பாயிருத்தற்குறிப்பு ; மெலிவுக்குறிப்பு . |
| விடவு | நிலப்பிளபப்பு ; கயமைத்தன்மை . |
| விடன் | காமுகன் ; கள்ளக்கணவன் ; வீரன் . |
| விடாக்கண்டன் | பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன் . |
| விடாணம் | விலங்கின் கொம்பு . |
| விடாணி | கொம்புள்ளது ; யானை . |
| விடாதம் | மயக்கம் . |
| விடாதவாகுபெயர் | இலக்கணை மூன்றனுள் வாசகத்தின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை . |
| விடாந்தகன் | பாற்கடலிலுண்டாகிய நஞ்சைக் கெடுத்தவனாகிய சிவபிரான் . |
| விடாப்படை | கையினின்றும் விடுபடாத வாள் ; குந்தம் போன்ற ஆயுதம் . |
| விடாப்பிடி | பிடித்த பிடி ; உறுதியாகப் பற்றுகை ; உறுதியாக நிற்கை ; பிடிவாதம் ; மாறாமல் ஒரே நிலையி லிருக்கை . |
| விடாமழை | இடையீடின்றிப் பெய்யும் மழை . |
| விடாய் | வேட்கை ; ஆசை ; களைப்பு ; விடுமுறைநாள் ; வெப்பம் . |
| விடாய்த்தல் | வேட்கையுறுதல் ; களைப்படைதல் ; விரும்புதல் ; செருக்குக்கொள்ளுதல் . |
| விடாய்ப்பு | வேட்கை ; களைப்பு ; ஆசை . |
| விடாயன் | வேட்கையுள்ளவன் ; களைப்புற்றவன் ; காமுகன் . |
| விடாயுதம் | பாம்பு . |
| விடாயெடுத்தல் | தாகமெடுத்தல் . |
| விடாலகம் | பூனை ; பொன்னரிதாரம் . |
| விடி | காண்க : விடிகாலை ; தனிப்பட்டது ; திரைச்சீலை ; சிறுமரவகை . |
| விடிகாலை | பொழுது விடிகின்ற நேரம் . |
| விடிதல் | உதயமாதல் ; முடிவுபெறுதல் ; துன்பம் நீங்கி இன்புறுதல் . |
| விடிமீன் | காண்க : விடிவெள்ளி . |
| விடியல் | காண்க : விடிகாலை ; மலங்கழித்தல் ; வயிற்றுப்போக்கு ; வெளியிடம் . |
| விடியல்வைகறை | பொழுது விடிதற்கு முன்னர்த்தாகிய வைகறை . |
| விடியற்காலம் | வைகறை . |
| விடியாவழக்கு | ஒருபொழுதும் முடிவுபெறாத வழக்கு . |
| விடியாவிளக்கு | காண்க : நந்தாவிளக்கு . |
| விடிவிளக்கு | விடியும்வரை எரியும் விளக்கு . |
| விடிவு | காண்க : விடிகாலை ; துன்பம் நீங்கி இன்பம் வருகை ; ஒழிவுவேளை ; வெளியிடம் ; அச்சம் ; நறும்புகை . |
| விடிவெள்ளி | விடியற்காலையில் கிழக்கில் தோன்றும் சுக்கிரன் . |
| விடிவேளை | வைகறை . |
| விடிவை | வைகறை . |
| விடிவோரை | அதிகாலை . |
| விடு | பகலிரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள் . |
| விடுகதை | விடுவிக்கவேண்டிய புதிர் . |
| விடுகவி | தனிப்பாட்டு . |
| விடுகாது | வளர்த்துத் தொங்கவிடும் தொள்ளைக் காது . |
| விடுகாலி | பட்டிமாடு ; கட்டுக்கடங்காதவர் . |
| விடுகுதிரை | பககைவர்மேல் விடுங் குதிரைப்பொறி . |
| விடுத்தம் | தடவை ; எட்டிமரம் . |
| விடுத்தல் | அனுப்புதல் ; போகவிடுதல் ; பந்தம் விடுவித்தல் ; நெகிழ்த்துதல் ; பிரித்தல் ; நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; இசைவுதருதல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; உண்டாக்குதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; வெளிவிடுதல் ; வெளிப்படக்கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; விடைகூறல் ; விடைபெறுதல் ; தங்குதல் . |
| விடுத்துவிடுத்து | அடிக்கடி . |
| விடுதருதல் | கொடுத்தனுப்புதல் ; தடையின்றி முன்செல்லுதல் . |
| விடுதல் | நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; பிரித்தல் ; கைவிடுதல் ; போகவிடுதல் ; அனுப்புதல் ; பந்தம் விடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; வெளிவிடுதல் ; செலுத்துதல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; சொல்லுதல் ; வெளிப்படக் கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; இசைவளித்தல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; பிரிதல் ; புதிர்விள்ளுதல் ; கட்டு அவிழ்தல் ; மலர்தல் ; உண்டாக்குதல் ; மிகுதல் ; தங்குதல் ; தவிர்தல் ; பிளந்திருத்தல் ; பலம் குறைதல் ; அறுபடுதல் ; விலகுதல் ; துணைவினை ; விடுதலை . |
| விடுதலம் | நிலாமுற்றம் ; பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடப்பட்ட காலிநிலம் . |
| விடுதலை | சுதந்தரம் ; ஓய்வு ; பந்தநீக்கம் . |
| விடுதலைப்பத்திரம் | சொத்தில் உரிமையில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் . |
| விடுதி | தங்குமிடம் ; காலிநிலம் ; தனித்தது ; ஆணை . |
| விடுதிப்பூ | காண்க : விடுபூ . |
| விடுதியாள் | வேலையில்லாதவன் ; குடும்பபாரமில்லாத தனித்த ஆள் . |
| விடுது | ஆலம் விழுது ; தூக்குருண்டை ; ஆழம் பார்ப்பதற்காக ஒரு முனையில் ஈயவுருண்டை கட்டிய கயிறு . |
| விடுதுறை | படிக்கும்போது நிறுத்துமிடம் . |
|
|
|