சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| விடுதோல் | மேற்றோல் . |
| விடுந்தலைப்பு | சீலையின் முன்றானை . |
| விடுநகம் | கிட்டிக்கோல் . |
| விடுநாண் | அரைஞாண் . |
| விடுநிலம் | தரிசுநிலம் . |
| விடுப்பு | நீக்கம் ; விடுமுறை ; துருவியறியுந்தன்மை ; விநோதமானது ; விருப்பம் . |
| விடுபடுதல் | நீக்கப்படுதல் ; விடுதலையடைதல் . |
| விடுபடை | எறியப்படும் படை . |
| விடுபதி | மருமகன் . |
| விடுபாட்டு | தனிப்பாடல் . |
| விடுபூ | தொடுக்காத பூ . |
| விடுமலர் | மலர்ந்த பூ . |
| விடுமுறை | ஓய்வுநாள் . |
| விடுவாய் | காண்க : விடப்பு . |
| விடுவாய்செய்தல் | அரிதல் . |
| விடுவிடெனல் | சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு ; அச்சக்குறிப்பு ; சினத்தற்குறிப் . |
| விடுவித்தல் | விடுதலைசெய்தல் ; உட்பொருளைக் கூறுதல் . |
| விடூசி | அம்பு . |
| விடேல்விடேலெனல் | ஈரடுக்கொலிக்குறிப்பு . |
| விடேலெனல் | ஓசைக்குறிப்பு . |
| விடை | பதில் , எதிர்மொழி ; இசைவு ; காண்க : விடைக்கோழி ; அசைவு ; மிகுதி ; வருத்தம் ; எருது ; இடபராசி ; எருமைக்கடா ; மரையின் ஆண் ; ஆட்டுக்கடா ; வெருகு ; தோட்டா ; குதிரை ; இளம்பாம்பு . |
| விடைக்கந்தம் | செம்மணித்தக்காளி . |
| விடைக்குறி | எருதுமுத்திரை . |
| விடைக்கொடி | ஏற்றுக்கொடி . |
| விடைக்கொடியன் | ஏற்றுக்கொடியையுடைய சிவபிரான் . |
| விடைக்கோழி | தாயைவிட்டுப் பிரிந்து திரியக்கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு . |
| விடைகொடுத்தல் | அனுமதியளித்தல் ; மறுமொழி பகர்தல் . |
| விடைகொள்ளுதல் | வெளியேற ஆணைபெறுதல் ; வந்துசேர்தல் . |
| விடைகோள் | காண்க : விடைதழால் . |
| விடைத்தல் | வேறுபடுத்துதல் ; அடித்தல் ; கண்டித்தல் ; வெளிப்படுத்துதல் ; மிகுதல் ; கடுகுதல் ; தடுத்தல் ; வருந்துதல் ; சோர்தல் ; விம்முதல் ; பெருஞ்சினங்கொள்ளுதல் ; வலிப்புக்கொள்ளுதல் ; விறைத்துநிற்றல் ; செருக்குக்கொள்ளுதல் . |
| விடைதல் | சினங்கொள்ளுதல் ; பிரிதல் ; குற்றஞ்சொல்லுதல் . |
| விடைதழால் | கோபம் மூட்டிவிடப்பட்ட ஏற்றினைத் தழுவிப்பிடிக்கை . |
| விடைப்பாகன் | சிவபிரான் . |
| விடைப்பு | வேறுபடுத்துகை ; கோபங்காட்டுகை ; கருவம் ; குற்றம் ; நீக்குகை . |
| விடைமுகன் | நந்தி . |
| விடைமுரிப்பு | எருத்தின் திமில் . |
| விடையம் | காட்சிப்பொருள் ; காரியம் ; நூல் நுதலிய பொருள் ; ஒரு நாடு ; காண்க : அதிவிடையம் . |
| விடையவன் | சிவபிரான் ; வருணன் . |
| விடையன் | சிவபிரான் ; காமுகன் . |
| விடையாற்றி | விடாயாற்றியின் மரூஉ ; திருவிழாவையடுத்து இளைப்பாற்றலாகக் கோயிலுக்குள் நடைபெறும் விழா . |
| விடையாயம் | பசுக்கூட்டத்திடையே காளைகள் இருத்தல் ; ஏற்றையுடைய ஆனிரை . |
| விடையில்அதிகாரி | அரசாணை விடுக்கும் அதிகாரி . |
| விடையுச்சன் | சந்திரன் . |
| விடையூர்தி | காளையை ஊர்தியாகவுடைய சிவபிரான் . |
| விடையோன் | காளையை ஊர்தியாகவுடைய சிவபிரான் . |
| விண் | வானம் ; மேலுலகம் ; மேகம் ; காற்றாடிப் பட்டத்தின் ஒரு கருவி . |
| விண்கொள்ளி | விண்ணினின்று விழும் நட்சத்திரம்போன்ற சுடர் . |
| விண்கோ | இந்திரன் . |
| விண்டல் | மூங்கில் . |
| விண்டலம் | வானம் ; மேலுலகம் . |
| விண்டவர் | பகைவர் . |
| விண்டாண்டு | ஊஞ்சல் . |
| விண்டார் | காண்க : விண்டவர் . |
| விண்டு | திருமால் ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; வானம் ; மேலுலகம் ; மேகம் ; மலை ; மூங்கில் ; காற்று ; தாமரை ; செடிவகை . |
| விண்டுசித்தன் | காண்க : விட்டுசித்தர் . |
| விண்டுநதி | ஆகாயகங்கை ; சுரநதி . |
| விண்டுபதம் | வானம் . |
| விண்டேர் | கானல் . |
| விண்ணகர் | வைகுந்தம் ; காண்க : விண்ணகரம் . |
| விண்ணகரம் | திருமால்கோயில் ; தஞ்சாவூரில் ஒப்பிலியப்பன் கோயில் என வழங்கப்படும் விட்டுணுத்தலம் . |
| விண்ணதிர்ப்பு | இடிமுழக்கம் . |
| விண்ணப்பம் | வேண்டுகோள் ; பணிவுடன் கேட்குதல் ; மன்றாட்டம் ; பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு ; கடவுளின் திருமுன்பு பாசுரம் முதலியன ஓதுகை ; மனு . |
| விண்ணப்பித்தல் | பெரியோர்முன் பணிந்தறிவித்தல் ; பாசுரங்களைக் கடவுள்முன்பு ஓதுதல் ; மனுச்செய்தல் . |
| விண்ணல் | காண்க : காவட்டம்புல் . |
| விண்ணவன் | அருகன் ; தேவன் . |
| விண்ணவிணைத்தல் | மிக்க ஒளியால் கண்தெறித்தல் . |
| விண்ணாங்கு | ஒரு மரவகை . |
| விண்ணாணம் | விஞ்ஞானம் ; அறிவு ; நாகரிகம் ; விரகு ; பகட்டு . |
| விண்ணு | திருமால் . |
| விண்ணுலகம் | துறக்கம் , மேலுலகம் . |
| விண்ணுலகு | துறக்கம் , மேலுலகம் . |
| விண்ணெனல் | ஓசைக்குறிப்பு ; கண் முதலியன தெறித்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; வெளியாதற்குறிப்பு ; இறுகியிருத்தற்குறிப்பு . |
| விண்ணேறு | இடி . |
| விண்ணோர் | தேவர் . |
| விண்பகல் | காண்க : விண்டல் . |
|
|
|