விண்மணி முதல் - விதாகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விண்மணி காண்க : வான்மணி .
விண்மீன் உடு .
விண்முழுதாளி இந்திரன் .
விண்விண்ணெனல் யாழ்நரம்பு முதலியன ஒலித்தற்குறிப்பு ; புண் முதலியன தெறித்து நோவெடுத்தற்குறிப்பு .
விண்விணைத்தல் காண்க : விண்ணவிணைத்தல் .
விண்வீழ்கொள்ளி விண்ணினின்று விழும் உடுப்போன்ற சுடர் .
வித்தகம் அறிவு ; கல்வி ; பொன் ; காண்க : சின்முத்திரை ; திறமை ; திருத்தம் ; வியப்பு ; பெருமை ; நன்மை ; வடிவின் செம்மை ; சிற்பம் முதலிய சிறந்த கைத்தொழில் .
வித்தகன் வியத்தகு தன்மையுடையவன் ; வல்லவன் ; வைரவன் ; கம்மாளன் ; தூதன் ; இடையன் ; பேரறிவாளன் .
வித்தம் அறிவு ; பொருள் ; பொன் ; பேறு ; பழிப்பு ; கூட்டம் ; காண்க : வித்தாயம் .
வித்தரித்தல் பெருக்குதல் ; விரித்துச்சொல்லுதல் .
வித்தன் பண்டிதன் ; அறிஞன் ; பிறருக்குதவுவோன் ; ஈடுபாடுடையவன் ; தவசி .
வித்தாண்மை புலமை .
வித்தாயம் சூதிற் சிறுதாயம் .
வித்தாரகவி விரித்துப் பாடப்பெறும் பாட்டு ; விரிவாகப் பாடும் நூல் ; வித்தாரகவி பாடுவோன் .
வித்தாரம் விரிவு ; விரிவாகப் பாடும் நூல் ; சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; விற்பன்னம் .
வித்தாரி நயம்படப் பேசுபவன் ; அறிஞன் .
வித்தியர் கம்மாளர் .
வித்தியாகலை ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தரும் சிவசக்தி .
வித்தியாசம் வேறுபாடு .
வித்தியாசாலை கல்விகற்குஞ்சாலை .
வித்தியாதத்துவம் சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் தரும் தத்துவம் .
வித்தியாதரர் ஒருவகைத் தேவசாதியார் .
வித்தியாபாரகன் கல்வியைக் கரைகண்டவன் .
வித்தியார்த்தி கல்விகற்போன் .
வித்தியாலயம் காண்க : வித்தியாசாலை .
வித்தியாவினோதன் கல்வியால் பொழுது போக்குவோன் .
வித்தீரணம் பரப்பு .
வித்து மரஞ்செடிகொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை ; விந்து ; மரபுவழி ; வழித்தோன்றல் ; சாதனம் ; காரணம் .
வித்துத்தெளித்தல் விதையைத் தூவுதல் .
வித்துதல் விதைத்தல் ; பரப்புதல் ; பிறர் மனத்துப் பதியவைத்தல் .
வித்துரு பவளம் ; மின்னல் .
வித்துருமம் பவளம் ; இளந்தளிர் .
வித்துவசனம் புலவர் குழு .
வித்துவஞ்சம் இகழ்ச்சி ; வெறுப்பு ; பகை .
வித்துவமுத்திரை அறிஞர் பட்டம் .
வித்துவாமிசன் புலவன் ; பேரறிஞன் .
வித்துவான் புலவன் ; அறிஞன் .
வித்துவேடணம் எண்வகைச் செயலுள் ஒன்றான பகைத்தல் .
வித்துவேடணை எண்வகைச் செயலுள் ஒன்றான பகைத்தல் .
வித்துவேடம் பகைமை .
வித்தெறிதல் விதைவிதைத்தல் .
வித்தை கல்வி ; அறிவு ; மாயவித்தை ; ஆன்மாவுக்குப் பேரறிவைக் கொடுக்கும் தத்துவம் ; காண்க : இச்சாசத்தி ; நடைமுறைப்படுத்தத்தக்கது ; நால்வேதம் ; ஆறங்கம் ; மீமாஞ்சை , தருக்கம் ; தருமநூல் ; புராணம் என்னும் பதினான்கு நூல்கள் .
வித்தைக்கவி செய்யுளிலக்கண முதலியன கற்றுக் கவிபாடுவோன் .
வித்தைக்காரன் சாலவித்தை செய்வோன் ; விரகன் .
வித்தைக்கோள் புதன் .
விதண்டம் காண்க : விதண்டை .
விதண்டவாதி விதண்டைசெய்பவன் .
விதண்டாவாதம் பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் ; பகை .
விதண்டை பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் ; பகை .
விதத்தல் மிகுதல் ; சிறப்பித்துரைத்தல் .
விததி கூட்டம் ; வரிசை ; பரப்பு ; விரிவு .
விதந்து கைம்பெண் .
விதந்தோதுதல் சிறப்பாக எடுத்துச் சொல்லுதல் .
விதப்பு காண்க : விதந்தோதுதல் ; விதப்புவிதி ; விவரம் ; வியப்பு ; மதிலுறுப்பு ; மிகுதி ; விரைவு ; நடுக்கம் ; ஆசை .
விதப்புக்கிளவி மிகைமொழி ; சிறப்பித்துச் சொல்லும் மொழி .
விதப்புவிதி சிறப்புவிதி .
விதம் மாதிரி ; வகை ; வழிவகை ; சூத்திரம் .
விதர்க்கணம் சூழ்தல் ; உரையாடல் .
விதர்க்கம் எண்ணம் ; காண்க : மனோமயம் ; ஐயம் ; ஆராய்வு ; நியாயம் .
விதர்ப்பு அச்சம் ; நெருக்கம் ; போர் ; வெற்றி .
விதரணம் கொடை ; இரக்ககுணம் ; திறமை ; அறிவுக்கூர்மை .
விதரணன் கொடையாளன் ; சொல்வன்மையுள்ளவன் ; கூரிய அறிவுடையவன் .
விதரணிகன் கொடையாளன் .
விதரணை கொடை ; இரக்ககுணம் ; விவேகம் ; திறமை .
விதரம் பிளப்பு .
விதலம் கீழேழ் உலகங்களுள் ஒன்று .
விதலை நடுக்கம் ; நிலம் .
விதலையாப்பு செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளும் முறை .
விதவிடுதல் சிறப்பித்துரைத்தல் .
விதவை கைம்பெண் ; சோறு ; கூழ் ; குழம்பு ; குழைகை ; கைம்மணி .
விதறு நடுக்கம் .
விதறுதல் நடுங்குதல் ; பதறுதல் .
விதனம் துன்பம் ; மனத்துயர் ; ஏழுவகைக் குற்றம் ; களைப்பு ; உடல்நோவு .
விதனித்தல் துயருறுதல் .
விதாகம் உறைப்பு ; வெப்பம் .