விதாதா முதல் - விப்பிரயோகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விதாதா பிரமன் ; அருகன் .
விதாதிரு பிரமன் ; விதி ; காமன் .
விதாயகம் விதிப்பது ; முடிவு .
விதாரகம் கிணறு .
விதாரணம் பிளத்தல் ; கிழித்தல் ; கொல்லல் ; போர் .
விதாரம் காண்க : முள்ளிலவு ; சூழ்தல் ; ஆராய்ச்சி ; கவலை .
விதாவிதம் பலவிதம் .
விதானம் மேற்கட்டி ; தொகுதி ; வேள்வி ; மந்தம் ; பயனின்மை ; ஓய்வு ; விரிவு ; சட்டம் ; விதிக்கை ; ஏற்பாடு ; கற்பித்துக்கொள்ளுகை ; செய்கை ; ஒழுங்கு ; மாதிரி ; ஊழ் ; பேறு ; செல்வம் ; விரகு ; வணக்கம் ; வன்மம் ; ஒரு பண் ; யானை ; உணவு .
விதி சட்டம் ; தீர்ப்பு ; விதித்தன செய்க என்னும் ஆணை ; கட்டளை ; கடமை ; ஒழுக்கமுறை ; அமைக்குமுறை ; நீதி ; ஊழ் ; பிரமன் ; காசிபன் ; திருமால் ; காலம் ; நல்வினைப்பயன் ; பயன் ; பேறு ; செல்வம் ; இயல்பு ; உண்மை ; அறிவு ; செய்தொழில் ; குதிரை முதலியவற்றின் உணவு .
விதிக்கு கோணத்திசை .
விதிச்சூத்திரம் இன்னதற்கு இது என்று முன்னில்லாததை மொழியும் சூத்திரம் .
விதித்தல் செய்யுமாறு ஏவுதல் ; தண்டம் முதலியன அமைத்தல் ; உண்டாக்குதல் ; செய்தல் ; உறுதிப்படுத்தல் .
விதித்தோன் நான்முகன் ; கடவுள் .
விதிதம் வெளிப்படை .
விதிப்பு விதிக்கை ; நூலில் விதித்துள்ள முறை .
விதிபாதம் யோகம் இருபத்தேழனுள் ஒன்று .
விதிமுறை நெறிப்படி ; நியமம் .
விதியர் அமைச்சர் ; தந்திரிகள் ; கணக்கர் .
விதியுளி வேள்வி ; திருமணம் ; தூதர் ; முறைப்படி .
விதிர்த்தல் நடுங்குதல் ; அஞ்சுதல் ; சிதறுதல் ; தெறித்தல் ; அசைத்தல் ; உதறுதல் ; பலவாகப் போகவிடுதல் ; சொரிதல் .
விதிர்தல் நடுங்குதல் .
விதிர்ப்பு அச்சம் ; நடுக்கம் ; மிகுதி .
விதிர்விதிர்த்தல் நடுங்குதல் ; விருப்பங்கொள்ளுதல் .
விதிரேகம் வேறுபாடு ; எதிர்மறை ; வேற்றுமையணி .
விதிவசம் ஊழ்வலி .
விதிவத்து முறைப்படி ; முறையுடையது .
விதிவிலக்கு விதித்தலும் விலக்கலும் ; விதிக்கு விலக்கைக் கூறுஞ் சூத்திரம் .
விதிவினை உடன்பாட்டால் முடியும் வினை ; ஊழ் .
விது சந்திரன் ; திருமால் ; பிரமன் ; குபேரன் ; வாயு ; கருப்பூரம் ; பாவம்நீக்கச் செய்யும் பலி .
விதுடன் கற்றறிந்தவன் .
விதுடி கற்றவன் ; அறிவாளி .
விதுதமுகம் முக அபிநயம் பதினான்கனுள் வேண்டாமைக் குறிப்பாகத் தலையசைக்கும் அபிநயம் .
விதுப்பு நடுக்கம் ; விரைவு ; பரபரப்பு ; வேட்கை .
விதும்பு நடுக்கம் .
விதும்புதல் நடுங்குதல் ; விரைதல் ; விரும்புதல் .
விதுரம் கலக்கம் ; காதலர்பிரிவு .
விதுரன் அறிஞன் ; திண்ணியன் ; மனைவியை இழந்தவன் ; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி .
விதுலம் ஒப்பின்மை .
விதுலன் ஒப்பில்லாதவன் .
விதுவிதுத்தல் மகிழ்ச்சியுறுதல் .
விதுவிதுப்பு குத்துநோய் ; நடுக்கம் ; விருப்பம் .
விதூடகக்கூத்து நகைவிளைக்கும் ஒரு கூத்து வகை .
விதூடகன் நகைச்சுவை விளைவிப்போன் .
விதூடணம் பெருநிந்தை .
விதூரசம் வைடூரியம் .
விதை மரஞ்செடிகொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து ; பீசம் ; தன் மாத்திரை ; அறிவு ; பெருமை .
விதைத்தல் விதை தெளித்தல் ; பரப்புதல் ; செலுத்துதல் .
விதைநெல் விதைப்பதற்காக வைக்கப்பட்ட நெல்மணி .
விதைப்புக்காலம் விதை தெளிக்கும் பருவம் .
விதைப்புனம் சமன்செய்த புதிய நிலம் .
விதைமணி விதைப்பதற்குரிய தானியம் .
விதையடித்தல் மாடு முதலியவற்றின் விதையை நசுக்குதல் .
விந்தம் விந்தியமலை ; குருவிந்தம் ; தாமரை ; ஒரு பேரெண் ; காடு ; பச்சைக்கருப்பூரம் ; மேலோர் ; மரவகை ; பாடாணவகை ; செம்புளிப்பச்சை .
விந்தமட்டோன் அகத்தியன் .
விந்தன் இடையன் .
விந்தியம் விந்தியமலை .
விந்தியவாசி துர்க்கை .
விந்தியவாசினி துர்க்கை .
விந்து புள்ளி ; துளி ; நீர்த்துளி அளவு ; சுக்கிலம் ; பாதரசம் ; வயிரக்குற்றம் ; குறி ; நெற்றித் திலகம் ; நெல்மூக்கு ; புருவநடு ; வட்டம் ; சிவதத்துவம் ; சுத்தமாயை ; பதினாறு கலையுள் ஒன்று .
விந்துத்தீ காண்க : காமத்தீ .
விந்துவழி பிறவிமுறை .
விந்தை சாலவித்தை ; கல்வி ; துர்க்கை ; வெற்றித்திருமகள் ; பார்வதி ; திருமகள் ; அழகு ; வியப்பு ; ஓரகத்தி ; விந்தியமலை .
விந்தைக்காரன் சிற்பி .
விந்தைமகள் திருமகள் .
விநயம் வணக்கம் ; மரியாதை ; ஒழுக்கம் ; நயமொழி ; பணிவு ; அவையடக்கம் ; காண்க : தேவபாணி ; கட்டளை ; விரகு ; நன்னடை ; தருமம் .
விநாடி ஒரு காலநுட்பம் .
விநாடிகை ஒரு காலநுட்பம் .
விநாயகசதுர்த்தி பிள்ளையாருக்குத் திருவிழாச் செய்யும் ஆவணி மாதத்து வளர்பிறை நாலாம் நாள் விழா .
விநாயகன் கணபதி ; அருகன் ; புத்தன் ; கருடன் ; குரு .
விநாழிகை காண்க : விநாடிகை .
விப்பிரகாரம் எதிரிடை ; தீங்கு ; நிந்தை .
விப்பிரநாராயணர் தொண்டரடிப்பொடியாழ்வார் .
விப்பிரம் அழகு ; ஐயம் ; சுழலுதல் ; தவறு .
விப்பிரமம் சுழற்சி ; மயக்கம் ; மனக்குழப்பம் ; குற்றம் ; அழகு ; மோகல¦லை ; காமப்பிணக்கு .
விப்பிரயோகம் காதலரின் பிரிவு ; வெய்துயிர்த்து இரங்கல் .