சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| விப்பிரலம்பம் | வஞ்சகம் ; சண்டை ; தாமசம் ; காதலர் பிரிவு . |
| விப்பிரன் | பார்ப்பனன் . |
| விப்பிரியம் | விருப்பமின்மை . |
| விப்பிலவம் | அநியாயப் போர் ; தொல்லை ; கலகம் ; பொல்லாங்கு . |
| விப்புருதி | புண் . |
| விப்புருதிக்கட்டி | குழந்தைகட்கு அக்குளில் வரும் ஒரு புண்கட்டிவகை . |
| விபக்கம் | எதிர்க்கட்சி ; எதிரிடையான கொள்கை ; அனுமான உறுப்புள் துணிபொருள் இல்லா இடம் . |
| விபக்கன் | பகைவன் . |
| விபகரித்தல் | வழக்குச்சொல்லல் . |
| விபகலிதம் | கழித்தல் . |
| விபகாரம் | காண்க : விவகாரம் . |
| விபசாரம் | தீயநடத்தை ; சோரம்போகை . |
| விபசாரி | விலைமகள் ; சோரம்போனவள் . |
| விபஞ்சி | வீணைவகை ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று . |
| விபஞ்சிகம் | வீணைவகை . |
| விபஞ்சிகை | வீணைவகை . |
| விபத்தம் | எட்டிமரம் . |
| விபத்தன் | குடும்பத்தினின்றும் பிரிந்தவன் . |
| விபத்தி | வேறுபாடு ; வேற்றுமை ; வேற்றுமையுருபு ; காண்க : விபத்து . |
| விபத்து | நற்பேறின்மை ; வேதனை ; சாவு ; ஆபத்து ; வறுமை ; அழிவு . |
| விபரம் | காண்க : விவரம் . |
| விபரியாசம் | எதிரிடை ; வேறுபாடு . |
| விபரீதகாலம் | கேடு விளைக்குங் காலம் . |
| விபரீதஞானம் | திரிபுணர்ச்சி . |
| விபரீதம் | மாறுபாடு ; கைகூடாமை ; திரிபுணர்ச்சி ; வியப்பு ; மிகுதி . |
| விபரீதலட்சணை | காண்க : எதிர்மறையிலக்கணை . |
| விபரீதவுவமை | தொன்றுதொட்டு வழங்கும் உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமையாக்கியும் உரைக்கும் அணிவகை . |
| விபவ | அறுபதாண்டுக் கணக்கில் இரண்டாம் ஆண்டு . |
| விபவம் | பெருமை ; செல்வம் ; வாழ்வு ; வீடுபேறு ; திருமாலின் அவதாரநிலை . |
| விபன்னம் | குற்றம் ; மெலிவு . |
| விபன்னன் | துன்பப்பட்டவன் . |
| விபாகம் | பிரிவு ; குடும்பச் சொத்தைப் பிரிக்கை ; வரையறை செய்த பகுதி . |
| விபாகரன் | சூரியன் . |
| விபாடம் | பிளத்தல் . |
| விபாதம் | உதயகாலம் . |
| விபாவரி | இரவு ; பார்வதி . |
| விபாவனம் | ஆராய்ச்சி ; தூய்மையின்மை . |
| விபாவனை | காரணமின்றிக் காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை ; பார்வதி . |
| விபினம் | காடு . |
| விபீதகம் | தான்றிமரம் . |
| விபு | எங்கும் பரவியுள்ளது ; கடவுள் ; தலைவன் . |
| விபுணன் | வல்லுநன் ; சிறந்தோன் ; வெற்றியையுடையோன் . |
| விபுத்துவம் | எங்கும் பரவுந்தன்மை . |
| விபுதன் | அறிஞன் ; தேவன் ; சந்திரன் . |
| விபுலம் | விரிவு ; அகலம் ; பெருமை ; மேரு ; இமயமலை ; பூமி . |
| விபுலை | பூமி . |
| விபூடணம் | அணிகலன் . |
| விபூதி | திருநீறு ; எண்வகை சித்தி ; சாம்பல் ; செல்வம் ; பெருமை ; கேடுற்ற தசை ; ஒரு நரகம் ; கொடுமை ; குற்றம் ; வரிவகை . |
| விபூதிபோடுதல் | திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் . |
| விபூதியிடுதல் | திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் . |
| விபோதம் | அறிவு . |
| விம்பம் | வடிவம் ; நிழல் ; எதிரொளி ; வட்டம் ; விக்கிரகம் ; உடல் ; ஒளி ; கொவ்வைக்கொடி ; பாடாணவகை . |
| விம்பிகை | கொவ்வைக்கொடி . |
| விம்பித்தல் | எதிரொளித்தல் . |
| விம்மம் | தேம்பியழுகை ; துன்பம் . |
| விம்மல் | காண்க : விம்மம் ; ஏக்கம் ; வீங்குகை ; உள்ளப்பூரிப்பு ; கலக்கம் ; ஒலிக்கை ; யாழ்நரம்போசை . |
| விம்மாத்தல் | தேம்பியழுதல் ; வருந்துதல் ; மகிழ்வுறுதல் . |
| விம்மிதம் | உடல் ; அச்சம் ; வியப்பு ; உவகை . |
| விம்மு | கனம் . |
| விம்முதல் | காண்க : விம்மாத்தல் ; நிறைதல் ; பருத்தல் ; மிகுதல் ; மலர்தல் ; ஒலித்தல் ; ஈனுதல் . |
| விம்முயிர்த்தல் | பெருமூச்சுவிடுதல் . |
| விம்முறவு | வருத்தம் . |
| விம்முறுதல் | வருந்துதல் . |
| விம்மெனல் | இறுகியதாதற்குறிப்பு . |
| விமர்த்தனம் | அரைத்துப் பொடிசெய்கை ; இடிக்கை ; அழிக்கை ; பிசைகை ; கிரகணம் . |
| விமரிசம் | திறனாய்வு , ஆராய்ச்சி ; மனனம் ; புத்தித்தெளிவு . |
| விமரிசனம் | திறனாய்வு , ஆராய்ச்சி ; மனனம் ; புத்தித்தெளிவு . |
| விமரிசை | காண்க : விமரிசம் ; பகட்டு ; சிறப்பு ; பார்வதி . |
| விமலம் | அழுக்கின்மை ; வெண்மை ; தூய்மை ; தெளிவு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று . |
| விமலன் | கடவுள் ; குற்றமற்றவன் ; தூயன் ; சிவபிரான் ; அருகன் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் . |
| விமலி | பார்வதி ; காண்க : குப்பைமேனி . |
| விமலை | தூய்மையுடையவள் ; திருமகள் ; கலைமகள் ; பார்வதி ; துர்க்கை ; குற்றமற்றவள் ; கங்கை ; கோதாவரி . |
| விமார்க்கம் | தீயொழுக்கம் ; விளக்குமாறு . |
| விமானம் | வானூர்தி ; சந்திரன்ஊர்தி ; ஊர்தி ; தூண் ; ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை ; அரண்மனை ; தேவர்கோயில் ; தேவலோகம் ; உரோகிணிநாள் . |
| விமானவாயில் | கோயில்வாயில் . |
|
|
|