விமோசனம் முதல் - வியாமோகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விமோசனம் நீங்குகை .
விய அறுபதாண்டுக் கணக்கில் இருபதாம் ஆண்டு .
வியக்கம் பெருமை .
வியக்களை குடிக்கூலி .
வியங்கம் இயற்கையான குற்றம் ; பிறவிக்குறை ; தவளை .
வியங்கியம் குறிப்புப்பொருள் ; குத்தலான பேச்சு .
வியங்கொள்ளுதல் ஏவலைக் கொள்ளுதல் ; செலுத்துதல் .
வியங்கோள் ஏவல் ; வினைமுற்றுவகை .
வியஞ்சகம் விளங்கும்படி செய்கை ; விளக்குங் கருவி ; குறிப்புப்பொருள் ; அபிநயம் .
வியஞ்சனம் மெய்யெழுத்து ; உணவுக்குரிய கறிகள் ; அடையாளம் ; கறிக்குதவும் பொருள்கள் ; குறிப்பில் பொருளுணர்த்தும் சொல்லினது ஆற்றல் .
வியட்டி தனிப்பட்டது .
வியட்டிரூபம் பருவுடல் .
வியத்தம் வெளிப்படை ; புலன்களுக்குத் தெரிவது .
வியத்தல் செருக்குறுதல் ; அதிசயப்படல் ; நன்குமதித்தல் ; பாராட்டுதல் ; கொடுத்தல் ; கடத்தல் .
வியத்திகை பெருமை .
வியதிபாதம் யோகம் இருபத்தேழனுள் ஒன்று .
வியதிரேகம் வேறுபாடு ; எதிர்மறை ; உடனில்லாத நிலை ; வேற்றுமையணி .
வியந்தம் பண்வகை .
வியந்தரம் பிசாசு .
வியநெறி பெரும்பாதை .
வியப்ப ஓர் உவம வாய்பாடு .
வியப்பணி ஒரு பயனைக் கருதி அதற்கு மாறாகிய முயற்சிசெய்வதாகக் கூறும் அணி .
வியப்பம் வியப்பு .
வியப்பு அதிசயம் ; வியப்பணி ; பாராட்டு ; மேம்பாடு ; அளவு ; சினம் ; சினக்குறிப்பு .
வியபிசாரம் கற்புநெறி தவறுதல் ; சாத்தியமில்லாதவிடத்து ஏது விருப்பதாகிய ஏதுப்போலி .
வியபிசாரி கற்புநெறி தவறியவள் .
வியம் ஏவல் ; உடல் ; போக்கு ; வழி ; ஒற்றைப்படை எண் ; சமமற்றது ; முருட்டுத்தன்மை ; வேறுபாடு ; விரிவு ; உயரம் ; பறவை .
வியமம் பாராட்டத்தக்கது .
வியயம் பயணச்செலவு .
வியர் உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி ; இளைப்பு .
வியர்த்தம் பயனின்மை ; பொருளின்மை .
வியர்த்தல் பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல் ; கோபித்தல் ; உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி .
வியர்ப்பு வியர்வை ; சினம் ; சினக்குறிப்பு .
வியர்வு உடலின்மீது நீர்த்துளி உண்டாதல் ; சினக்குறிப்பு .
வியர்வை உடலின்மீது நீர்த்துளி உண்டாதல் ; சினக்குறிப்பு .
வியல் பெருமை ; அகலம் ; மிகுதி ; பொன் ; காடு ; மரத்தட்டு ; பலதிறப்படுகை .
வியல்பூதி வில்வம் .
வியலகம் பூமி .
வியலிகை பெருமை .
வியலிடம் பூமி ; அகலம் .
வியலுள் அகன்ற இடம் .
வியவகரித்தல் பேசுதல் ; வாதம்செய்தல் .
வியவன் ஏவல் செய்வோன் ; ஏவுவோன் ; தலைவன் ; திண்ணியன் ; வழிச்செல்வோன் .
வியவு வேறுபாடு .
வியன் வானம் ; பெருமை ; சிறப்பு ; வியப்பு ; அகலம் ; எண்ணின் ஒற்றை .
வியனிலைவஞ்சி மூச்சீரடி வஞ்சிப்பா .
வியனுலகம் பரந்த உலகம் ; தேவலோகம் .
வியாக்கியானம் உரை .
வியாக்கியானி உரையாசிரியன் .
வியாக்கிரம் புலி .
வியாக்கிராசனம் புலித்தோலால் ஆன இருக்கை .
வியாக்கினம் விளக்கவுரை .
வியாகரணம் கலைஞானம் அறுபத்து நான்கனுள் ஒன்றான இலக்கணம் ; வேதாங்கம் ஆறனுள் ஒன்றான வடமொழியிலக்கணம் .
வியாகுலம் வருத்தம் ; துக்கம் ; கவலை ; மயக்கம் .
வியாகுலித்தல் துயரப்படுதல் .
வியாத்தி எங்கும் நிறைந்திருத்தல் ; பரந்திருத்தல் ; முறையான உடனிகழ்ச்சி .
வியாத்திரன் தொழில்நடத்துவோன் .
வியாத்துவம் எங்கும் இருக்குந்தன்மை .
வியாதம் வேறுபாடு .
வியாதன் வேடன் ; கீழ்மகன் ; வியாசன் .
வியாதி நோய் ; பெருநோய் .
வியாப்தம் பரந்திருக்கப்பட்டது .
வியாப்தி எங்குமிருக்கை ; பரந்திருக்கை ; முறையான உடனிகழ்ச்சி .
வியாபகத்துவம் நிறைந்திருத்தல் .
வியாபகம் எங்கும் நிறைந்த தன்மை ; பரவியிருக்குந் தன்மை .
வியாபகன் எங்கும் இருப்பவனாகிய கடவுள் ; எங்கும் அறியப்பட்டவன் .
வியாபகி எங்கும் வியாபிக்குஞ் சிவசத்தி .
வியாபரித்தல் தொழிற்படுதல் ; சொல்லுதல் ; நன்கொடை திரட்டுதல் .
வியாபாதம் நன்கொடை திரட்டுதல் ; வஞ்சகம் .
வியாபாரம் வாணிகம் ; தொழில் .
வியாபாரி வாணிகன் .
வியாபி எங்கும் நிறைந்தது .
வியாபித்தல் எங்கும் பரந்து நிறைந்திருத்தல் .
வியாமம் நான்குமுழ அளவு .
வியாமோகம் பெருமோகம் .