விலைதீர்த்தல் முதல் - விழித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விலைதீர்த்தல் விலையை உறுதிப்படுத்தல் .
விலைதீர்தல் விலை உறுதியாதல் .
விலைநலப்பெண்டிர் பரத்தையர் .
விலைப்பட்டி விற்ற பண்டங்களின் விலைக்குறிப்பு ; விற்பனைக் கணக்கு .
விலைப்படுதல் விற்கப்படுதல் .
விலைப்பண்டம் காண்க : விலைச்சரக்கு .
விலைப்பலி பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி .
விலைபெறுதல் காண்க : விலைபோதல் ; மதிப்பு மேம்படுதல் .
விலைபோதல் விலைப்படல் .
விலைமகள் தாசி , பொதுமகள் .
விலைமாது தாசி , பொதுமகள் .
விலையாட்டி பண்டம் விற்பவள் .
விலையாள் அடிமை .
விலையாளன் பண்டம் விற்போன் .
விலையிடுதல் விற்பனைத்தொகை குறித்தல் .
விலைவன் கூலியின்பொருட்டாக ஒன்றைச் செய்பவன் .
விலைவாசி கிரயவளவு .
விலைவிழுதல் கிரயத்தொகை குறைதல் .
விலைவைத்தல் காண்க : விலைகுறித்தல் .
விலோசனம் கண் ; பார்வை ; உட்கருத்து .
விலோதம் பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; துகிற்பெருங்கொடி .
விலோதனம் பெருங்கொடி ; துகிற்கொடி ; கண் .
விலோபனம் அழிவு ; இழுத்தல் ; கலக்குதல் ; புகழ்ச்சி ; மயக்கம் .
விலோமன் வருணன் .
விவகரித்தல் நியாயஞ் சொல்லுதல் ; விரித்துக் கூறுதல் ; வாதஞ்செய்தல் .
விவகாரம் நியாயத்தல வழக்கு ; வாதஞ் செய்தல் ; நடத்தை ; நியாயத்தல வழக்குச் சம்பந்தமான அறநூற் பகுதி .
விவகாரி நியாயத்தலத்தில் வழக்காடுவோன் ; செய்திகளை நன்றாய் அறிந்து பேசுபவன் .
விவகாரிகம் விவகார சம்பந்தமுடையது ; வழக்கம் .
விவசம் தன்வயமிழத்தல் ; ஆன்மாவின் விடுதலைநிலை .
விவசாயம் வேளாண்மை ; வாணிகம் ; தொழில் ; முயற்சி .
விவட்சை பேசவேண்டுமென்ற விருப்பம் ; கருத்து .
விவத்து காண்க : விபத்து .
விவத்தை ஆபத்து ; முடிவு ; ஒழுங்குமுறை .
விவதானம் மறைப்பு ; தடை .
விவர்த்தம் சுற்றிவருதல் ; ஆடுதல் ; ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவத்தைக் காண்பிக்கை .
விவர்த்தனம் சுழலல் .
விவரணம் விவரமான குறிப்பு .
விவரம் பகுத்தறிவு ; மலைக்குகை ; துளை ; இடைவெளி ; வரலாற்றுக் குறிப்பு .
விவரித்தல் விரித்துக்கூறுதல் .
விவா பெருமை ; இரவு .
விவாகம் திருமணம் .
விவாதம் தருக்கம் ; நியாயத்தல வழக்கு .
விவிதம் பலவிதம் .
விவிலியமதம் கிறித்தவ சமயம் .
விவேகபருவம் பகுத்தறியும் பருவம் .
விவேகம் பகுத்தறிவு ; புத்திக்கூர்மை ; பாயிரம் .
விவேகி பகுத்தறிவுள்ளவன் .
விவேகித்தல் பகுத்தறிதல் .
விவேசனம் பகுத்தறிவு .
விழ காண்க : விழா .
விழத்தட்டுதல் கீழே விழும்படி தள்ளுதல் ; பிறன் கையிலுள்ளதைத் தட்டி வீழ்த்துதல் .
விழம்பு சோறு .
விழல் விழுதல் ; பயனின்மை ; ஒரு புல்வகை ; காண்க : இலாமிச்சு(சை) .
விழலன் பயனற்றவன் .
விழலாண்டி சோம்பித்திரியும் வீணன் .
விழலி ஒன்றுக்கும் உதவாதவள் .
விழலுக்கிறைத்தல் வீண்பாடுபடுதல் .
விழவணி நற்காலங்களில் அணியும் அலங்காரம் .
விழவர் விழாக் கொண்டாடுவோர் .
விழவாற்றுப்படுத்தல் விழாவை முடிவுசெய்தல் .
விழவு காண்க : விழா ; விளையாட்டு ; அவா ; மிதுனராசி .
விழவேடெடுத்தல் புத்தகத்தைத் திருடிக் கொள்ளுதல் .
விழற்கட்டு புல்வீடு .
விழற்கிறைத்தல் காண்க : விழலுக்கிறைத்தல் .
விழா திருவிழா ; திருமணக் கொண்டாட்டம் ; மங்கலச் சடங்கு .
விழாக்கடி திருநாட்காட்சி .
விழாக்கால்கோள் திருவிழாத் தொடக்கம் .
விழாக்கொள்ளுதல் திருவிழா நடத்துதல் .
விழாக்கோள் திருவிழா நடத்துதல் .
விழாக்கோளாளர் அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர் .
விழாவணி திருவிழாச் சிறப்பு ; வீரர் போர்க்கோலம் ; காண்க : விழவணி .
விழி கண் ; அறிவு ; மிண்டை .
விழிகண்குருடு வெளித்தோற்றத்தில் விழியில் மாறுபாடின்றியே கண்தெரியாமை .
விழிச்சி காதுக்குள் வெடிக்கும் கட்டி .
விழித்தல் கண்திறத்தல் ; தூக்கம் தெளிதல் ; எச்சரிக்கையாயிருத்தல் ; கவனித்து நோக்குதல் ; மருண்டு நோக்குதல் ; ஒளிர்தல் ; தெளிவாதல் ; உயிர்வாழ்தல் .