சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| விழிதுறை | நீர்த்துறை ; இறங்குதுறை . |
| விழிப்பு | விழிக்கை ; எச்சரிக்கை ; செய்வது தெரியாமல் திகைத்தல் ; சிறந்து விளங்குகை . |
| விழிபிதுங்குதல் | வேலை மிகுதியால் வருந்துதல் . |
| விழியன் | பெருங்கண்ணுடையவன் ; பிதுங்கிய விழியுடையவன் . |
| விழிவாதம் | இமைகளையாட்டும் கண்ணோய் வகை . |
| விழு | சிறந்த ; துன்பமான ; பகல் இரவுகள் நாழிகை அளவில் ஒத்தநாள் . |
| விழக்காடிடுதல் | கூறிடுதல் . |
| விழுக்காடு | வீதம் ; வீழ்கை ; கீழ்நோக்கான பாய்ச்சல் ; பங்கு ; தற்செயல் ; மேல்வருவது ; பொருளின்றிக் கூட்டியுரைக்கபடுஞ் சொல் ; அருத்தாபத்தி . |
| விழுக்கு | மெல்லாது உட்கொள்ளுதல் ; ஊன்விசேடம் ; எண்ணெய்ப் பிசுக்கு . |
| விழுங்குதல் | மெல்லாது உட்கொள்ளுதல் ; கவளீகரித்தல் ; தெளிவின்றிப் பேசுதல் ; வெல்லுதல் ; சொற்களை மழுப்புதல் ; கவர்தல் ; பரவுதல் ; கொல்லுதல் . |
| விழுங்கும்பாம்பு | மதிற்பொறிவகை . |
| விழுச்சிறை | சீரிய சிறைவாழ்க்கை . |
| விழுச்செல்வம் | பெருஞ்செல்வம் . |
| விழுசுமை | பெரும்பாரம் . |
| விழுத்தகை | பிறருக்கில்லாத சிறப்பு . |
| விழுத்தண்டு | பெரிய ஊன்றுகோல் . |
| விழுத்தம் | காண்க : கருஞ்சீரகம் . |
| விழுத்தல் | விழச்செய்தல் ; சாகச்செய்தல் ; களைதல் . |
| விழுத்திணை | உயர்குடி . |
| விழுத்து | இலக்கு . |
| விழுத்துதல் | காண்க : விழுத்தல் . |
| விழுதல் | கீழ்நோக்கி யிழிதல் ; நிலம்படியச் சாய்தல் ; நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல் ; தோற்றுப் போதல் ; தாழ்தல் ; கெடுதல் ; சாதல் ; தங்குதல் ; மறைதல் ; திரண்டு கூடுதல் ; கிடைத்தல் ; பதிதல் ; வெளித்தோன்றுதல் ; நேர்தல் ; கழிதல் ; விருப்பங்கொள்ளுதல் ; சொல் முதலியன வெளிப்படுதல் ; பிரிவுபடுதல் ; கீழ்நோக்கிப்பாய்தல் ; ஆறு முதலியன கடலிற் கலத்தல் ; தொங்குதல் ; சினங்கொள்ளுதல் ; முகம் வாடுதல் ; பணம் முடங்கிக்கிடத்தல் . |
| விழுதி | மருந்துச் செடிவகை . |
| விழுது | ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி ; தலைமயிர்ச் சடையின் ஒரு கால் ; இறுகிக் கட்டின நெய் ; வெண்ணெய் ; கொழுப்பு ; நீர்விட்டு அரைத்துத் திரட்டியது . |
| விழுந்துபோதல் | கீழே விழுதல் ; இறத்தல் ; குறுக்குவழியில் செல்லுதல் . |
| விழுப்பகை | சீரிய பகை . |
| விழுப்பம் | சிறப்பு ; நன்மை ; குலம் ; இடும்பை . |
| விழுப்பாதராயன் | தமிழரசருக்குக் கீழ்ப்பட்ட தலைவருள் ஒரு சாராரின் பட்டப்பெயர் ; கோயிலில் சாமி திருமுன்பு கணக்குப் படிக்கும் உரிமை மரபினன் . |
| விழுப்பிணி | தீராத முற்றிய நோய் . |
| விழுப்பு | கழிக்கப்படுவது ; நீராடும்முன் உள்ள தூய்மைகெட்ட நிலை ; சிறப்பு ; குலம் ; இடும்பை . |
| விழுப்புண் | போரில் முகத்திலும் மார்பிலும் பட்ட புண் ; இடும்பைதரும் புண் . |
| விழுப்பொருள் | மேலான பொருள் . |
| விழுமம் | சிறப்பு ; சீர்மை ; தூய்மை ; இடும்பை ; துன்பம் . |
| விழுமிய | சிறந்த . |
| விழுமியதுபயத்தல் | நூலழகு பத்தனுள் சீரிய பொருளை உணர்த்தலாகிய அழகு . |
| விழுமியர் | சிறந்தோர் . |
| விழுமியோர் | சிறந்தோர . |
| விழுமுறுதல் | துன்புறுதல் . |
| விழுவிழெனல் | வழுவழுப்பாயிருத்தற்குறிப்பு ; பசைபிடித்தற்குறிப்பு . |
| விழைச்சி | இன்பநுகர்வு ; புணர்ச்சி . |
| விழைச்சு | இளமை ; புணர்ச்சி . |
| விழைதல் | மிக விரும்புதல் ; மதித்தல் ; நெருங்கிப் பழகுதல் . |
| விழைந்தோன் | நண்பன் ; கணவன் . |
| விழைய | ஓர் உவமவாய்பாடு . |
| விழையார் | பகைவர் . |
| விழைவு | விருப்பம் ; யாழின் உள்ளோசை ; புணர்ச்சி . |
| விள்கை | விட்டகலுகை . |
| விள்ளல் | பிரிவு ; மலர்கை ; கட்டித்தழுவல் ; மரவகை . |
| விள்ளுதல் | மலர்தல் ; உடைதல் ; வெடித்தல் ; பிளத்தல் ; பகைத்தல் ; மாறுபடுதல் ; தெளிவாதல் ; நீங்குதல் ; சொல்லுதல் ; வெளிப்படுத்துதல் ; வாய் முதலியன திறத்தல் ; புதிர் முதலியன விடுத்தல் . |
| விள | நிலம் முதலியவற்றின் பிளப்பு ; இளமை ; மரவகை . |
| விளக்கங்காணுதல் | ஆராய்ந்தறிதல் . |
| விளக்கணம் | பொடிவைத்துப் பொருத்துகை ; பற்றுப்பொடி . |
| விளக்கணி | ஒரு சொல் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருள் தரும் அணிவகை . |
| விளக்கம் | தெளிவான பொருள் ; தெளிவு ; ஒளி ; சந்திரகலை ; மோதிரம் ; புகழ் ; விசாரணை ; நீதிமன்றம் ; அதிகம் ; விளக்கு . |
| விளக்கிடுகல்யாணம் | கார்காத்த வேளாளரில் மணம்புரியாத பெண்களுக்கு ஏழு அல்லது பதினொரு வயதில் செய்யப்படுஞ் சடங்கு வகை . |
| விளக்கிடுதல் | விளங்கச்செய்தல் ; விளக்கேற்றுதல் ; கோயிலில் திருவிளக்கு ஏற்றிவைத்தல் . |
| விளக்கீடு | மார்கழித் திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை . |
| விளக்கு | ஒளிதருங் கருவி ; ஒளிப்பிழம்பு ; ஒளி பெறச் செய்கை ; சோதிநாள் . |
| விளக்குக்கூண்டு | காண்க : கலங்கரைவிளக்கம் ; விளக்கை உள்வைத்து வானத்துச் செல்லவிடுக்கும் கூண்டு . |
| விளக்குத்தண்டு | விளக்குத் தகழியைத் தாங்கும் தண்டு . |
| விளக்குதல் | தெளிவாக்குதல் ; பரிமாறுதல் ; பிரசித்தப்படுத்துதல் ; தூய்மையாக்குதல் ; துலக்குதல் ; துடைப்பத்தாற் பெருக்குதல் ; பொடியிட்டுப் பற்றவைத்தல் . |
| விளக்குநிலை | அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை ; வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை ; ஒரு நூல் ; காண்க : விளக்குத்தண்டு . |
| விளக்குப்பாதம் | விளக்குத்தண்டு ; விளக்குத்தண்டின் அடிப்பாகம் . |
| விளக்குப்புறம் | கோயிலில் விளக்கிடுவதற்கு விடப்பட்ட இறையிலிநிலம் . |
| விளக்குப்போடுதல் | விளக்கேற்றுதல் ; கட் குடித்தல் . |
| விளக்குமாடம் | விளக்கு வைப்பதற்கான சுவர்ப்புரை ; திருவிளக்கிடும் கோயிலிடம் . |
| விளக்குமாற்றுக்கட்டை | தேய்ந்த துடைப்பம் ; ஒரு பழிச்சொல் . |
| விளக்குமாறு | துடைப்பம் . |
| விளக்குறுத்தல் | ஒளிபெறச் செய்தல் . |
| விளக்கெண்ணெய் | விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய் ; மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய் ; வேப்பெண்ணெய் . |
| விளக்கேற்றிவைத்தல் | விளக்கேற்றுதல் ; கலியாணஞ் செய்துவைத்தல் ; நிலைநிறுத்துதல் . |
| விளக்கைக்குளிரவைத்தல் | விளக்கணைத்தல் . |
| விளங்கவைத்தல் | தெளிவாக்குதல் ; விளக்கேற்றி வைத்தல் ; புகழ்பெறச் செய்தல் . |
| விளங்கு | அரத்தைவகை . |
| விளங்குதல் | ஒளிர்தல் ; தெளிவாதல் ; விளக்கமாதல் ; பளபளப்பாதல் ; பெருகுதல் ; மிகுதல் ; அறிதல் . |
|
|
|