விளங்குதிங்கள் முதல் - விற்பனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விளங்குதிங்கள் சுக்கிரன் .
விளங்குபொன் உலோகத்தாற் செய்த கண்ணாடி .
விளங்கொளி அருகன் .
விளத்தம் விவரம் .
விளத்தாரு வெண்கடம்பு .
விளத்துதல் விவரித்தல் ; விலக்குதல் .
விளப்பு சொல்லுகை ; புகழாதல் .
விளம் அடம் ; அகங்காரம் ; விளாமரம் ; இயற்சீரின் இறுதி நிரை வாய்பாடு .
விளம்பம் தாமதம் ; இலயவகை .
விளம்பரம் அறிக்கை .
விளம்பனம் பழங்கால மக்களின் பழக்கத்தைப் பாடியும் ஆடியும் காட்டுதல் .
விளம்பி கள் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்திரண்டாம் ஆண்டு .
விளம்பிதம் காண்க : விளம்பம் .
விளம்பு சொல் .
விளம்புதல் சொல்லுதல் ; வெளிப்படக் கூறுதல் ; பரப்புதல் ; பரிமாறுதல் ; விசாரித்தல் ; பழகுதற்காகப் பிள்ளைகள் எழுத்தின்மேல் எழுதுதல் .
விளர் வெண்மை ; நிணம் ; முற்றாதது ; நேர்மை ; பெருஞ்சினம் ; வெறுப்பு ; கொழுமை ; இளமை .
விளர்த்தல் வெளுத்தல் ; வெட்குதல் ; நிறம் வேறுபடுதல் .
விளர்தல் வெளுத்தல் ; முதிராதிருத்தல் ; கூப்பிடுதல் .
விளர்ப்பு வெளுப்பு .
விளரி இளமை ; வேட்கைப்பெருக்கம் ; மிகுதி ; நெய்தல்நிலத்து யாழ் ; விளாமரம் ; ஏழிசையுள் ஒன்று .
விளவு காண்க : அகில் ; விளாமரம் ; நிலப்பிளவு ; இளமை .
விளவுதல் கலத்தல் ; தழுவிக்கொள்ளுதல் ; அடித்தல் ; மனத்தில் உறுத்தப் பேசுதல் .
விளா விளாமரம் ; உழவில்வருஞ் சுற்று .
விளாக்குலைகொள்ளுதல் பரவுதல் ; உட்கொள்ளுதல் .
விளாக்கைத்தல் உழுதல் .
விளாக்கொள்ளுதல் பரவுதல் .
விளாகம் போர்க்களம் ; சூழ்ந்தவிடம் .
விளாசுதல் அடித்தல் ; மனத்தில் உறுத்தப் பேசுதல் .
விளாப்பு பிறர்க்குப் பங்கில்லாதது .
விளாப்பூசை சிவன்கோயிலில் விடியற்காலத்தில் நடக்கும் பூசை .
விளாம்பூச்சு சித்திரப்பூச்சுவகை .
விளாவுதல் கலத்தல் ; தழுவிக்கொள்ளுதல் ; சுற்றுதல் ; சுற்றிச்சுற்றி வருதல் ; காண்க : விளாசுதல் .
விளி ஓசை ; இசைப்பாட்டு ; கொக்கரிப்பு ; சொல் ; அழைப்பு ; எட்டாம் வேற்றுமை .
விளிக்கூத்து சீழ்க்கைக்கூத்து .
விளித்தல் அழைத்தல் ; சொல்லுதல் ; பாடுதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; பேராரவாரஞ் செய்தல் .
விளிதல் இறத்தல் ; அழிதல் ; குறைதல் ; கழிதல் ; ஓய்தல் ; சினத்தல் ; நாணமடைதல் ; அவமானமடைதல் ; வருத்தப்படல் ; மறிதல் ; சொல்லுதல் .
விளிந்தார் இறந்தார் .
விளிப்பு ஓசை ; சத்தமிடுகை .
விளிம்பு ஓரம் ; கரை ; கண்ணிமை ; எயிறு .
விளிவித்தல் அழைப்பித்தல் ; கொல்லல் .
விளிவு சாவு ; கேடு ; உறக்கம் ; இடையறவு ; நாணம் ; கடுஞ்சினம் ; வீரர் ; ஆர்ப்பு .
விளை விளைகை ; விளைபொருள் ; புன்செய்க்காடு ; நுகர்வு ; நீர் ஏறாத மேட்டுநிலம் ; நகர்சூழ் காவற்காடு ; காக்கட்டான் ; நரம்பு ; மீன்வகை .
விளைகரி நிலக்கரி .
விளைச்சல் விளைபொருள் ; முற்றிவரும் பயிர் ; விளைகை ; இளமையில் முதிர்ந்த அறிவு .
விளைஞர் மருதநில மக்கள் .
விளைத்தல் பயிர் முதலியன வளரச்செய்தல் ; உண்டாக்குதல் ; புரிதல் .
விளைதல் தானியம் முதலியன உற்பத்தியாதல் ; பயன்தருதல் ; உண்டாதல் ; முதிர்தல் ; நிகழ்தல் .
விளைநிலம் பயிரிடக்கூடிய நிலம் .
விளைநீர் பாசனத்துக்குரிய நீர் .
விளைபுலம் காண்க : விளைநிலம் .
விளைபொருள் நிலத்திலுண்டாகும் பொருள் .
விளையவைத்தல் முதிரச்செய்தல் ; பயன்படச்செய்தல் ; விளைவுண்டாகச் செய்தல் ; இறுகக்கட்டியாகும்படி செய்தல் ; அவுரிச்சரக்கை அழுகவைத்தல் ; பிணஞ்சுட நெருப்பு மூட்டுதல் .
விளையாட்டம் காண்க : விளையாட்டு ; விளைநிலம் .
விளையாட்டம்மை மணல்வாரியம்மை ; சின்னம்மை .
விளையாட்டு பொழுதுபோக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல் ; எளிதாகச் செய்யுந் தொழில் ; வேடிக்கை ; காதல்விளையாட்டு ; பாடநினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுகை .
விளையாட்டுக்காட்டுதல் குழந்தைகட்குப் போக்குக்காட்டுதல் ; வேடிக்கைகாட்டுதல் ; சாலவித்தை முதலியன காட்டுதல் .
விளையாட்டுப்பிள்ளை சிறுபிள்ளை ; அறிவீனமாய் நடப்பவர் ; கவலையின்றி இருப்பவர் .
விளையாடுதல் பொழுதுபோக்குதல் ; துள்ளிக்குதித்தல் ; உடற்பயிற்சி செய்தல் ; வேடிக்கையாய் செய்தல் ; ஏளனம் செய்தல் .
விளையாநிலம் களர்நிலம் , பயிர்விளையாத நிலம் .
விளையுங்காலம் அறுவடைக்காலம் .
விளையுள் விளைச்சல் ; முதிர்கை ; வயல் ; உள்ளம் .
விளைவித்தல் விளையச்செய்தல் ; செயற்கை வழியாகப் பயிர் முதலியன வளர்த்தல் ; பயன்தருதல் .
விளைவு நிகழ்ச்சி ; விளைகை ; முதுமை ; விளைபொருள் ; பழம் ; பயன் ; கைகூடுகை ; ஆக்கம் ; விளையுமிடம் ; வயல் ; மேகம் ; நாடகச்சந்தி ஐந்தனுள் ஒன்று .
விளைவுகாலம் தானியம் வளர்ந்திருக்கும் காலம் ; காண்க : விளையுங்காலம் .
விற்காரன் விற்றொழிலில் வல்லவன் .
விற்கிடை நான்குமுழ அளவு .
விற்குன்று சிவபிரானது வில்லான மேருமலை .
விற்கோடி தனுஷ்கோடி ; ஒரு பேரெண்வகை .
விற்படை வில்லாயுதம் ; காண்க : விற்றானை ; அம்பு .
விற்பத்தி கல்விவன்மை ; மொழிப்பொருட்காரணம் .
விற்பத்திமான் கல்வியிற் சிறந்தோன் .
விற்பன்னம் காண்க : விற்பனம் .
விற்பன்னன் கல்வியிற் சிறந்தோன் ; புலவன் ; புதுமைச் செயல்புரியும் ஆற்றலுள்ளவன் .
விற்பன்னித்தல் சிறப்பித்தல் ; விளக்குதல் .
விற்பனம் கல்வி ; அறிவு ; அறிவுக்கூர்மை ; புதுமை ; நுட்பம் ; விந்தை ; சொற்பொழிவு .