விற்பனவு முதல் - வினைச்சொல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
விற்பனவு விற்றல் .
விற்பனை விற்றல் .
விற்பனைப்பத்திரம் விலையாவணம் , கிரயப்பத்திரம் .
விற்பாட்டு வில்லுப்பாட்டு .
விற்பிடி வில்லைப் பிடிக்குங் கையினுள்ளளவு ; அபிநயவகை .
விற்பிடித்தல் வில்வித்தை பயிலத் தொடங்குதல் .
விற்பிடிமாணிக்கம் சிறந்த மாணிக்கம் .
விற்புட்டில் விரலுறை .
விற்பூட்டு காண்க : பூட்டுவிற்பொருள்கோள் . கத்தரிவகை .
விற்பொறி சேரவரசரது வில்லிலாஞ்சனை .
விற்றல் பண்டங்களை விலைக்குக் கொடுத்தல் .
விற்றானை படைகளுள் வில்வீரர்களாலான படை .
விற்றூண் விற்று உண்ணற்குரிய சில்லறைப் பண்டங்கள் .
விறகாள் விறகுசுமந்து விற்போன் .
விறகு எரிக்கும் கட்டை ; காண்க : சமிதை .
விறகுகட்டு கட்டிய விறகின் தொகுதி .
விறகுகட்டை எரிக்க உதவும் மரத்துண்டு .
விறகுகாடு விறகின் தொகுதி ; விறகுக்காக ஒதுக்கப்பட்ட காடு .
விறகுதலையன் விறகுசுமந்து விற்போன் ; காண்க : விறகுவெட்டி ; மூடன் .
விறகுவெட்டி விறகு தறிப்பவன் .
விறத்தல் செறிதல் ; மிகுதல் ; வெற்றிபெறுதல் ; போர்செய்தல் ; வெருவுதல் .
விறப்ப ஓர் உவமவாய்பாடு .
விறப்பு செறிவு ; பெருக்கம் ; வலிமை ; வெற்றி ; போர் ; அச்சம் .
விறல் வெற்றி ; பெருமை ; வலிமை ; வீரம் ; சிறப்பு ; உடல்வேறுபாடு .
விறல்கோளணி பகை அல்லது அதன் துணையின்மேற் செலுத்தும் பேராற்றலைக் கூறும் அணிவகை .
விறல்வென்றி போர்வீரத்தா லுண்டாகிய வெற்றி .
விறலி உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள் ; பாணர்குலப் பெண் ; பதினாறு அகவைப் பெண் .
விறலுதல் சினத்தோடு எதிர்த்துச் செல்லுதல் .
விறலோன் திண்ணியன் ; வீரன் ; அருகன் .
விறாட்டி காண்க : வறட்டி .
விறாண்டுதல் காண்க : பிறாண்டுதல் .
விறாய் செருக்கு .
விறிசு ஒரு வாணவகை .
விறிசுவிடுதல் விறிசுவாணத்தை மேலெழவிடுதல் ; பொய்யுரைகட்டிப் பேசுதல் .
விறுவிறுத்தல் மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென் றிழுத்தல் ; காரம் உறைத்தல் ; சினம் பொங்குதல் ; விரைதல் ; புண் குத்தெடுத்தல் .
விறுவிறுப்பு மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறுவென்று இழுக்கை ; மிகுசினம் ; சுறுசுறுப்பு ; உறைப்பு ; புண் முதலியன குத்தெடுக்கை .
விறுவிறெனல் விறுவிறென்றிழுத்தற்குறிப்பு ; உறைத்தற்குறிப்பு ; குத்தற்குறிப்பு ; சினத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
விறைத்தல் மரத்துப்போதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; திகைத்தல் ; திமிர்கொள்ளல் .
விறைப்பு விறைத்துப்போகை ; நடுக்கம் ; திகைப்பு ; செருக்குக்காட்டுகை .
வின்மை விற்றொழில் ; வில்வன்மை .
வின்னப்படுதல் சிதைதல் ; காயப்படுதல் ; பின்னப்படுதல் .
வின்னம் மாறுபாடு ; வேறுபாடு ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; தடை ; கேடு .
வின்னாண் வில்லை வளைத்துப் பூட்டுங் கயிறு .
வின்னியாசம் வைக்கை ; பேச்சுத்திறமை ; அம்புதொடுக்கை .
வினகம் சேங்கொட்டைமரம் .
வினயம் செய்தொழில் ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; சூழ்ச்சி ; கொடுஞ்செயல் ; வணக்கவொடுக்கம் ; அடக்கம் ; காண்க : தேவபாணி .
வினவுதல் உசாவுதல் ; விசாரணை செய்தல் ; பிறர்சொல்லக் கேட்டல் ; கேள்விப்படுதல் ; நினைதல் .
வினவுநர் உசாவுவோர் ; செவியேற்பவர் .
வினா கேள்வி ; சொல் ; விவேகம் ; நினைவு ; கவனிப்பு ; அன்றி ; இலக்கண நூல்களில் கூறப்படும் கேள்விகள் .
வினாசம் கேடு .
வினாதல் காண்க : வினவுதல் .
வினாதலிறை வினாவடிவமான பதில் .
வினாப்பெயர் வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் .
வினாபூதகற்பனை தெளிவில்லாத நீதி வாக்கியம் .
வினாயகத்தாளம் நாட்டியத் தொடக்கத்தில் விநாயகர்துதி பாடற்குக் கொட்டும் தாள விசேடம் .
வினாவழு வினாவைப் பொருளியைபில்லாதபடி வழங்குகை .
வினாவழுவமைதி வினாவழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது .
வினாவறிதல் அறியுந்திறமை உண்டாதல் .
வினாவிடை வினாவடிவான விடைவகை ; கேள்வியும் பதிலும் ; வினாவும் விடையுமாக அமைந்த நூல் .
வினாவுதல் காண்க : வினவுதல் .
வினாவுள்ளவன் நிதானபுத்தியுள்ளவன் .
வினாவெழுத்து சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருள் தரும் எழுத்துகளான எ , யா , ஆ , ஓ , ஏ என்பன .
வினிதை அயோத்தி .
வினியோகக்காரன் கொடையாளன் .
வினியோகம் செலவிடுகை ; பகிர்ந்துகொடுத்தல் ; பயன்பாடு ; ஆலயத்தில் பிரசாதம் வழங்குகை .
வினை தொழில் ; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை ; வினைச்சொல் ; செய்தற்குரியது ; பரிகாரச்செயல் ; முயற்சி ; போர் ; வஞ்சகம் ; தந்திரம் ; கருத்து ; தொந்தரவு ; சீழ் ; இரண்டைக் குறிக்கும் குழூஉக்குறி .
வினைக்கட்டு கன்மபந்தம் .
வினைக்களம் போர்க்களம் .
வினைக்கீடு செய்த வினையின் பயன் .
வினைக்குறிப்பு குறிப்புவினை .
வினைக்குறிப்புமுற்று குறிப்புவினைமுற்றாய் வருவது .
வினைக்கேடன் முன்னை வினையை ஒழிப்பவன் ; வேலையைத் தடைசெய்து கெடுப்போன் .
வினைக்கேடு வீணானது ; செயலறுகை ; தாமதம் .
வினைச்செவ்வெண் தொடர்ந்துவரும் வினையெச்சங்களில் எண்ணிடைச்சொல் தொக்கு வருவது .
வினைச்சொல் பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்கும் சொல் .