சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வீண்செயல் | காண்க : வீண்காரியம் . |
வீண்செலவு | பயனற்ற பணச்செலவு . |
வீண்சொல் | பயனில்சொல் . |
வீண்டம்பம் | பயனற்ற பகட்டு . |
வீண்நியாயம் | சாக்கு ; பயனற்ற விவாதம் . |
வீண்பாடு | பயனற்ற வேலை ; பயனற்ற முயற்சி . |
வீண்பொழுதுபோக்குதல் | காலத்தை வீணேகழித்தல் . |
வீண்வம்பு | தகாத பேச்சு அல்லது செயல் ; பயனற்ற வம்பளப்பு . |
வீணன் | சோம்பேறி ; பயனற்றவன் ; தீநெறி நடப்போன் . |
வீணாகரணம் | வீணைவாசித்தல் . |
வீணாத்தண்டு | வீணைக்காம்பு . |
வீணாதண்டம் | காண்க : வீணாத்தண்டு ; முதுகெலும்பு . |
வீணாவாதன் | வீணைவாசிப்போன் . |
வீணை | இருபத்திரண்டு வகையுள்ள யாழ் போன்ற நரம்புக் கருவிவகை . |
வீணைமீட்டுதல் | நரம்பை நயமுணர்ந்து சுருதி சேர்த்தல் . |
வீணையியக்கல் | வீணையிலே பாடுதல் . |
வீணைவல்லவர் | வீணைவாசிப்பதில் வல்லவர் ; கந்தருவர் . |
வீணைவல்லோர் | வீணைவாசிப்பதில் வல்லவர் ; கந்தருவர் . |
வீணைவலிக்கட்டு | யாழின் வார்க்கட்டு . |
வீத்து | அடிக்கை ; நீளம் . |
வீதசோகம் | அசோகமரம் . |
வீதம் | அளவுமுறை ; பங்கு ; விடுகை ; விடப்பட்டது ; விழுக்காடு ; அமைதி . |
வீதராகம் | பற்றின்மை . |
வீதராகன் | பற்றற்றவன் . |
வீதல் | வறுமை ; சாதல் . |
வீதன் | சாந்தன் . |
வீதா | பயனின்மை . |
வீதாசாரம் | பங்கு . |
வீதி | தெரு ; கடைவீதி ; சூரியன் முதலிய கோள்கள் செல்லும் வழி ; வழி ; முறை ; ஒழுங்கு ; நாடகவகை ; அகலம் ; நேரோட்டம் ; காண்க : வையாளிவீதி ; ஒளி , மேடை ; அச்சம் ; குதிரை . |
வீதிகுத்துதல் | தீமை பயக்குமாறு தெருவுக்கு நேராக வீடு அமைந்திருக்கும் நிலை . |
வீதிகோத்திரம் | அக்கினி . |
வீதித்தல் | பங்கிடுதல் ; பகுத்து ஆராய்தல் . |
வீதிப்போக்கு | இசையின் நேர்செலவு . |
வீதியிலேவிடுதல் | குழந்தை முதலியவற்றைத் திக்கற்ற நிலையில் விட்டுவிடுதல் . |
வீதிவண்ணச்சேலை | ஒரு புடைவைவகை . |
வீப்பகழி | காமனின் மலரம்பு . |
வீபணி | கடைவீதி , அங்காடி . |
வீபத்து | சந்திரன் . |
வீம்பன் | வீண்பெருமைக்காரன் ; செருக்குடையோன் ; பிடிவாதக்காரன் . |
வீம்பு | வீண்பெருமை ; தற்புகழ்ச்சி ; பிடிவாதம் . |
வீம்புப்பேச்சு | தற்புகழ்ச்சி . |
வீமம் | அச்சம் ; அச்சந்தருவது ; நரகவகை ; பருமன் . |
வீயம் | வித்து ; அரிசி . |
வீர்வீரெனல் | கத்துதற்குறிப்பு . |
வீரக்கல் | காண்க : நடுகல் . |
வீரக்கழல் | வீரர்கள் காலில் அணியும் அணி , கொடையாலும் வீரத்தாலும் கட்டும் கழல் . |
வீரக்குட்டி | வீரரிற் சிறந்தோன் . |
வீரக்குழல் | முன்கையில் அணியும் இருப்புக்கவசம் . |
வீரக்கொடி | வெற்றிக்கொடி . |
வீரக்கொம்பு | படையெழுச்சியில் ஊதுங்கொம்பு . |
வீரகடகம் | வீரர் அணியும் கைவளை . |
வீரகண்டாமணி | வீரக்குறியாக அணியும் மணிகட்டிய கழல் . |
வீரகத்தி | வீரரைக் கொன்ற பழி . |
வீரகவசம் | வீரர் அணியும் காப்புச்சட்டை . |
வீரகேயூரம் | வீரர்அணிவதற்குரிய இருப்புத்தோளணி . |
வீரங்காட்டுதல் | சூரங்காண்பித்தல் , தன் வலிமை காட்டுதல் . |
வீரச்சங்கிலி | வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி ; மகளிர் கழுத்தணிவகை . |
வீரச்சலங்கை | வீரர் காலிலணியும் பொற்சலங்கை . |
வீரச்சுவை | வீரத்தை விளக்கும் சுவை . |
வீரச்செல்வி | கொற்றவை . |
வீரசயந்திகை | போர் ; போர்வீரரது கூத்துவகை . |
வீரசயனம் | திருமாலின் படுக்கைநிலைவகை . |
வீரசாசனம் | வீரர்க்குக் கொடுக்கும் நிலம் முதலிய . |
வீரசிங்காசனம் | வீரர்கள் இருத்தற்குரிய அரியணை . |
வீரசின்னம் | வீரர் விருதுகளுள் ஒன்றான ஊதுகொம்பு . |
வீரசுவர்க்கம் | இறந்த வீரர் அடையும் துறக்கப் பதவி . |
வீரசூரம் | பேராண்மை . |
வீரசூரன் | அதிவீரன் ; பேராண்மையுடையோன் . |
வீரசைவன் | இலிங்கதாரிகளாகிய வீரசைவ மதத்தினன் . |
வீரட்டம் | சிவபிரானது வீரம் விளங்கிய தலம் ; கூத்துவகை . |
வீரட்டானம் | சிவபிரானது வீரம் விளங்கிய தலம் ; கூத்துவகை . |
வீரணம் | காண்க : இலாமிச்சு(சை) . |
வீரணன் | வீரமுள்ளவன் . |
வீரணி | மிளகு ; காண்க : இலாமிச்சு(சை) . |
வீரத்துவம் | வீரத்தன்மை . |
![]() |
![]() |
![]() |