சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வீரதச்சுவன் | மன்மதன் . |
| வீரதத்துவம் | காண்க : வீரத்துவம் . |
| வீரதரன் | வீரருள் மிக்கான் . |
| வீரதீரன் | துணிவுமிக்க வீரன் ; ஒன்பதுவகை வீரருள் ஒருவன் . |
| வீரதுரந்தரன் | வீரருள் தலைவன் ; பேராற்றலுள்ள வீரன் . |
| வீரதை | வீரம் ; வலிமை . |
| வீரப்பட்டயம் | வெற்றிபெற்ற வீரர் நெற்றியில் அணியும் பொற்றகடு . |
| வீரப்பாடு | வெற்றி ; பேராண்மை . |
| வீரப்பேர் | வீரம்பற்றிப் புனையும் பெயர் . |
| வீரப்போர் | வீரர்களின் நெறிதவறாத சண்டை . |
| வீரபட்டம் | காண்க : வீரப்பட்டயம் ; தெய்வ மூர்த்தங்கட்கு அணியும் நெற்றியணிவகை . |
| வீரபட்டிகை | காண்க : வீரப்பட்டயம் . |
| வீரபத்திரம் | அசுவமேதக் குதிரை . |
| வீரபத்திரன் | உருத்திரமூர்த்திகளுள் ஒருவன் . |
| வீரபத்தினி | மறக் கற்புடையாள் ; வீரனின் மனைவி . |
| வீரபானம் | வீரர் அருந்தும் மது . |
| வீரம் | பேராண்மை ; பெருஞ்செயல் ; பெருமிதச்சுவை ; வலிமை ; மேன்மை ; வரிக்கூத்துவகை ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; காண்க : வீராசனம் ; மிளகு ; கஞ்சி ; அத்திவகை ; முதுகு ; மலை ; சவ்வீரம் ; மருந்துவகை ; இஞ்சி . |
| வீரம்பேசுதல் | தன் வல்லமையைத் தானே புகழ்தல் ; ஆண்மைத்திறங் கூறுதல் . |
| வீரமகரம் | கடல் கடந்து பகைவர் ஊரைக் கைப்பற்றிய தேர்வேந்தர் முன்பாகப் பிடிக்கும் விருது ; கோயில்மூர்த்தியின்முன் எடுக்கும் விருதுவகை . |
| வீரமகள் | காண்க : வீரலட்சுமி . |
| வீரமங்கை | காண்க : வீரலட்சுமி . |
| வீரமந்திரம் | வேண்டும்போது நிற்கவும் பறந்து செல்லவும் குதிரையின் காதில் ஓதும் மந்திரம் . |
| வீரமாகாளன் | ஐயனாரின் படைத்தலைவரான ஊர்த்தேவதை . |
| வீரமாகாளி | துர்க்காதேவி . |
| வீரமார்த்தாண்டன் | பெருவீரன் ; ஒன்பான் வீரருள் ஒருவன் . |
| வீரமாலை | வீரனைப் பாடும் பாடல்வகை ; வெற்றிமாலை . |
| வீரமுடி | வீரர் அணியும் அணிவகை . |
| வீரமுந்திரிகை | காலின் நடுவிரலணி . |
| வீரமுரசு | மும்முரசுகளுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசு . |
| வீரமுழவு | முரசு , நிசானம் , துடுமை , திமிலை என நால்வகையான போர்ப்பறை . |
| வீரமொழி | வீரர் உரத்துக் கூறும் ஆண்மைப் பேச்சு . |
| வீரரசம் | வீரத்தை விளக்கும் சுவை . |
| வீரலட்சுமி | வெற்றிக்குரிய தெய்வம் ; வீரத்திற்குரிய தெய்வம் ; வீரமாகிய செல்வம் . |
| வீரவளை | வீரர் அணியும் கடகம் . |
| வீரவாதம் | காண்க : வீரமொழி . |
| வீரவாரம் | வீரர் அணியும் வெட்சிமாலை ; பேராரவாரம் . |
| வீரவிரதம் | வீரன் பயிலுங் கொடிய நோன்பு . |
| வீரவிருட்சம் | ஒரு மரவகை . |
| வீரவெண்டயம் | காண்க : வீரக்கழல் ; திருவாரூர்த் தியாகராசரது பட்டாக்கத்தி . |
| வீரவெறி | வீரத்தாலான மதர்ப்பு . |
| வீரன் | விரமுள்ளவன் ; திண்ணியன் ; காண்க : வீரபத்திரன் ; அருகன் ; படைத்தலைவன் ; வீடுமன் ; தீ ; ஓர் ஊர்த்தேவதை ; ஓமாக்கினி ; கூத்தாடி . |
| வீராகரன் | வீரமிக்கோன் . |
| வீராங்கனை | மறத்தி ; வீரப்பெண் . |
| வீராசனம் | யோகாசனவகை ; போர்க்களம் . |
| வீராணம் | ஒரு பெரும்பறைவகை . |
| வீராதனம் | காண்க : வீராசனம் . |
| வீராதிவீரன் | வீரருள் சிறந்த வீரன் . |
| வீராப்பு | காண்க : வீறாப்பு . |
| வீராவளி | காண்க : வீரவெறி . |
| வீராவேசம் | காண்க : வீரவெறி . |
| வீரி | வீரமுடையவள் ; காளி ; துர்க்கை ; ஓர் ஊர்த்தேவதை ; காண்க : அரிவாள்முனைப் பூண்டு . |
| வீரிடுதல் | திடீரெனக் கத்துதல் . |
| வீரியம் | வலிமை ; வீரம் ; பெருமை ; சுக்கிலம் ; மருந்தின் சத்தி ; ஒளி ; தற்பெருமை ; பறை . |
| வீரியவான் | வீரியமுடையோன் . |
| வீரியவொழிவு | சுக்கிலம் வீணாதல் ; சுக்கிலம் வீணாகும் நோய்வகை . |
| வீரியாந்தராயம் | உடல்வலி மனவலிகளைப் பயன்படாமல் தடைசெய்யும் ஊழ்வினை . |
| வீருதம் | மிடைதூறு . |
| வீரெனல் | திடீரெனக் கத்தும் ஒலிக்குறிப்பு . |
| வீரை | கடல் ; துன்பம் ; ஒரு மரவகை ; நெல்லிமரம் ; திராட்சை ; வாழை ; காண்க : வட்டத்திருப்பி ; மயிர்மாணிக்கம் ; மனைவி ; தாய் . |
| வீரோத்துங்கன் | வீரத்தாற் சிறந்தவன் . |
| வீவு | அழிவு ; சாவு ; கெடுதி ; முடிவு ; குற்றம் ; இடையீடு . |
| வீழ் | மரவிழுது ; தாலிநாண் ; காண்க : வீழ . |
| வீழ்க்காடு | வீழ்ச்சி ; வீதம் . |
| வீழ்க்கை | சுவாதிநாள் . |
| வீழ்கதி | நரகம் . |
| வீழ்ச்சி | காண்க : வீழ்வு . |
| வீழ்த்தல் | வீழச்செய்தல் ; வீணாகக் கழித்தல் ; தாழவிருத்தல் . |
| வீழ்தல் | ஆசை ; ஆசைப்பெருக்கம் ; மேவல் ; வீழுதல் ; காண்க : விழுதல் ; நீங்குதல் . |
| வீழ்ந்தாடல் | துடி , கடையம் , பேடு , மரக்கால் , பாவை என ஐவகைப்பட்ட கூத்துவகை . |
| வீழ்நாள் | பயனற்ற நாள் . |
| வீழ்பிடி | குறைவு ; வெறுப்பு . |
| வீழ்பு | சுள்ளி . |
| வீழ்மீன் | விண்வீழ்கொள்ளி . |
| வீழ்வு | விழுதல் ; பாய்ச்சல் ; விருப்பம் . |
| வீழ | ஓர் உவமவுருபு . |
|
|
|