சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வெட்கப்படுத்துதல் | மானமிழக்கச்செய்தல் . |
வெட்கப்படுதல் | நாணமடைதல் ; கூச்சப்படுதல் . |
வெட்கம் | நாணம் ; அவமானம் ; கூச்சம் . |
வெட்குதல் | கூச்சப்படுதல் ; அஞ்சுதல் . |
வெட்சி | வெட்சிச்செடி ; பகைவர் ஆனிரையைக் கவர்தலைக் கூறும் புறத்துறை . |
வெட்சிக்கரந்தை | பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை . |
வெட்சிமறவர் | பகைவரின் ஆனிரையைக் கவரச்செல்லும் மறவர் . |
வெட்சியரவம் | பகைமுனையிடத்து நிரை கவரப்போக்குங்கால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை . |
வெட்ட | அதிகமான ; தெளிவான . |
வெட்டல் | காண்க : வெட்டுதல் . |
வெட்டவழி | பலர் செல்லும் நெறி . |
வெட்டவிடி | அதிகாலை . |
வெட்டவெடித்தல் | அதிகச் சினங்கொள்ளுதல் . |
வெட்டவெளி | திறந்தவெளியிடம் ; சூனியமான இடம் . |
வெட்டவெளிச்சம் | பேரொளி ; வெளிப்படையானது . |
வெட்டறாமூளி | காண்க : நத்தைச்சூரி . |
வெட்டனவு | கடுமை ; கெட்டியாயிருக்கை ; வலாற்காரம் ; வெடுக்குத்தனம் . |
வெட்டாட்டம் | தாய ஆட்டவகை . |
வெட்டாந்தரை | காய்ந்திறுகிய நிலம் . |
வெட்டி | மண்வெட்டி ; புல்வகை ; வழி ; பயனின்மை ; ஊர்ப்பணியாளன் ; பிணஞ்சுடுவான் . |
வெட்டிச்சாய்த்தல் | மரம் முதலியன முறித்து வீழ்த்துதல் ; கொல்லுதல் ; பெருங்காரியங்களைச் செய்தல் ; தாராளமாகக் கொடுத்தல் ; உதவுதல் . |
வெட்டிச்சோறு | தண்டச்சோறு ; பழைய வரி வகை . |
வெட்டிது | கடுமையானது . |
வெட்டிநிலம் | தரிசுநிலம் . |
வெட்டிப்பயல் | பயனற்றவன் . |
வெட்டிப்பேச்சு | வீண்பேச்சு . |
வெட்டிப்பேசுதல் | கண்டித்துப் பேசுதல் ; எதிர்த்துப் பேசுதல் ; கடுமையாகப் பேசுதல் . |
வெட்டிமை | கடுமை ; சினம் ; வெட்டியான் தொழில் ; கடுஞ்சொல் . |
வெட்டியான் | பிணஞ்சுடுவோன் ; ஊர் ஊழியக்காரன் ; பூச்சிவகை . |
வெட்டிரும்பு | இரும்பை வெட்டும் உளி . |
வெட்டிவேர் | இலாமிச்ச வேர் ; புல்வகை . |
வெட்டிவேலை | பயனற்ற வேலை . |
வெட்டு | வெட்டுதலால் உண்டாகும் புண் முதலியன ; எழுத்து முதலியன பொறிக்கை ; மயிர்வெட்டுகை ; தையல்துணி வெட்டுகை ; துண்டிப்பு ; பகட்டு ; வஞ்சனை . |
வெட்டுக்காயம் | வெட்டினால் உண்டாம் புண் . |
வெட்டுக்கிளி | பூச்சிவகை . |
வெட்டுக்குத்து | கத்தி முதலிய கூரான ஆயுதங்களைக் கொண்டு செய்யுஞ் சண்டை . |
வெட்டுக்குளம்பு | கால்நடையின் பிளந்துள்ள பாதம் . |
வெட்டுச்சட்டை | பெண்கள் அணியும் ஓர் அங்கிவகை . |
வெட்டுண்ணுதல் | முறிபடுதல் . |
வெட்டுணி | கீழ்ப்படியாத பிள்ளை ; முரடன் . |
வெட்டுத்தட்டு | பறையின் வாய்வார் . |
வெட்டுத்தாக்கு | மண்ணெடுத்த குழி . |
வெட்டுதல் | வாள் முதலியவற்றால் பிளவுபட எறிதல் ; எழுத்து முதலியன பொறித்தல் ; தானிய அளவில் தலை வழித்தல் ; தோண்டுதல் ; தலைமயிரைக் கழித்தல் ; துணி முதலியன துண்டித்தல் ; ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல் ; அழித்தல் ; கடிந்து பேசுதல் ; கடுமையாதல் ; பளிச்சென மின்னுதல் ; உண்டியல் கிழித்தல் . |
வெட்டுப்படுதல் | முறிபடுதல் . |
வெட்டுப்படை | வாட்படை . |
வெட்டுப்பழி | தீராப்பகை . |
வெட்டுமருந்து | வெட்டுக்காயங்களுக்குப் பயன்படுத்தும் மருந்து . |
வெட்டுரைப்பணம் | கள்ள நாணயம் . |
வெட்டுவாய் | அறுபட்ட புண்வாய் ; பொருத்து . |
வெட்டுவாள் | வெட்டுக்கத்திவகை . |
வெட்டெனல் | கடுமைக்குறிப்பு ; மௌனமாய் இசைதற்குறிப்பு . |
வெட்டெனவு | கடுமை ; வன்மை ; வன்மையானது . |
வெட்டை | வெப்பம் ; சூடு ; நிலக்கொதி ; காமஇச்சை ; நோய்வகை ; வெறுமை ; பயனின்மை ; கேடு ; கடினத்தன்மை ; வெளி காய்ந்து இறுகிய நிலம் . |
வெட்பாடம் | வாய்ப்பாடம் . |
வெட்பாலை | ஒரு மரவகை . |
வெட்புகார் | மழைநீரற்ற மேகம் . |
வெட்புலம் | வெற்றிடம் . |
வெடி | வேட்டு ; ஓசை ; இடி ; துப்பாக்கி ; வெடியுப்பு ; வாணம் ; சிற்றேலம் ; பிளவு ; பகை : கேடு ; அச்சம் ; நிமிர்ந்தெழுகை ; தாவுகை ; நறும்புகை : நறுமணம் ; தீநாற்றம் ; கள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பொய் ; விடிவெள்ளி ; வெளி . |
வெடிகுரல் | இயல்பு மாறிய குரல் ; இசைக்கு மாறுபட்ட ஓசை . |
வெடிகொள்ளுதல் | மேலேழுதல் ; வெடித்தல் ; துப்பாக்கியாற் சுடப்படுதல் . |
வெடிச்சிரிப்பு | பெருஞ்சிரிப்பு . |
வெடித்தகுரல் | இயல்பு மாறிய குரல் ; உரத்தகுரல் . |
வெடித்தசொல் | வெடுவெடுப்பான பேச்சு . |
வெடித்தல் | பிளவுபடுதல் ; ஓசையெழப் பிளத்தல் ; வெளிக்கிளம்புதல் ; வெடியோசை உண்டாதல் ; மலர்தல் ; விறைத்து மேலே கிளம்புதல் ; பொறாமையால் துடித்தல் ; எறிதல் . |
வெடிநாற்றம் | தீநாற்றம் ; வெடிமருந்து சுட்டமணம் . |
வெடிப்பு | ஓசையோடு வெடித்து எழுகை ; பிளப்பு ; அழிவு ; தீநாற்றம் ; வெறுப்பு ; குற்றமான சொல் ; கண்டிப்பு ; சிறப்பு . |
வெடிபடுதல் | அஞ்சுதல் ; பேரோசையுண்டாதல் ; சிதறுதல் . |
வெடிபோடுதல் | குண்டுபோடுதல் . |
வெடிமருந்து | வெடிப்பதாற் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து . |
வெடியல் | விடியற்காலம் ; ஓசை . |
வெடியுப்பு | வெடிமருந்துக்குதவும் உப்புவகை . |
வெடில் | தீநாற்றம் ; ஓசை . |
வெடிவு | விடிகை ; நற்காலம் வருகை ; விடியற்காலம் . |
வெடிவைத்தல் | துப்பாக்கியாற் சுடுதல் ; கெடுக்கப் பார்த்தல் ; திகைக்கும்படி பொய்ச்சொல் சொல்லுதல் ; சண்டைமூட்டுதல் . |
வெடுக்கன் | கோபி ; கடுகடுப்புள்ளவன் . |
![]() |
![]() |
![]() |