சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வெடுக்கு | கடுமைக்குறிப்பு ; காண்க : வெட்டெனவு . |
வெடுக்கெனல் | கடுமைக்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; ஒடிதலின் ஓசைக்குறிப்பு ; பேச்சில் கடுகடுப்பாயிருத்தற் குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; குத்துநோவுக் குறிப்பு . |
வெடுவெடுத்தல் | கடுமையாகப் பேசுதல் ; சினத்தாற் படபடத்தல் . |
வெடுவெடுப்பு | கடுகடுப்பு . |
வெடுவெடெனல் | சினக்குறிப்பு ; நடுக்கக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; ஒல்லியாயிருத்தற் குறிப்பு ; பெருஞ்சிரிப்பின் ஒலிக்குறிப்பு . |
வெண்கடல் | காண்க : பாற்கடல் . |
வெண்கடுகு | கடுகுவகை . |
வெண்கதிர் | காண்க : வெண்கதிரோன் ; கருக்கல் . |
வெண்கதிரோன் | திங்கள் . |
வெண்கமலம் | வெண்டாமரைவகை ; நரகவகை . |
வெண்கமலை | கலைமகள் . |
வெண்கரு | முட்டையின் வெள்ளைச்சத்து . |
வெண்கலம் | செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கியுண்டாக்கும் கலப்பு உலோகம் ; நாள் . |
வெண்கலி | வெண்டளை பெற்றுவரும் கலிப்பாவகை . |
வெண்கலிப்பா | வெண்டளை பெற்றுவரும் கலிப்பாவகை . |
வெண்கவி | பொருளாழம் இல்லாத பாட்டு ; காண்க : வெண்பா . |
வெண்களமர் | மருதநில மக்கள் ; வேளாளர் . |
வெண்களிற்றரசு | ஐராவத யானை . |
வெண்கன்னான் | வெண்கலவேலை செய்யும் கன்னான் . |
வெண்காசம் | கண்ணோயுள் ஒன்று . |
வெண்காந்தள் | கோடல் , ஒரு செடிவகை . |
வெண்காயம் | உள்ளி ; பூண்டுவகை . |
வெண்காரம் | மருந்துச்சரக்கு . |
வெண்காரை | அரைத்த சுண்ணாம்பு . |
வெண்கால் | யானைத் தந்தத்தாற் செய்த கட்டில் முதலியவற்றின் கால் . |
வெண்காவல் | காண்க : வெறுங்காவல் . |
வெண்காழ் | மரத்தின் உள்ளீடு ; முயலெறியுந் தடிவகை . |
வெண்கிடை | நெட்டிவகை . |
வெண்கிழமை | வெள்ளிக்கிழமை . |
வெண்கிளுவை | முள்ளில்லாத கிளுவை மரவகை . |
வெண்குட்டம் | உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய் . |
வெண்குடை | அரசனது வெற்றிகுறிக்கும் வெண்ணிறக்குடை . |
வெண்குமுதம் | ஆம்பல்வகை . |
வெண்குன்று | சுவாமிமலை . |
வெண்கூதாளம் | தாளிவகை . |
வெண்கை | தொழில் செய்து பழகாத கை ; சங்குவளை அணிந்த கை ; அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை ; வெள்ளிய கைப்பிடி . |
வெண்கொடி | வெற்றிக்கொடி ; கலைமகள் . |
வெண்கொல் | வெள்ளி . |
வெண்கொற்றக்குடை | வெற்றிக்கு அடையாளமான வெண்ணிறக்குடை . |
வெண்கோட்டம் | ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்றான நறும்பண்டம் ; செடிவகை . |
வெண்கோடல் | காண்க : வெண்காந்தள் . |
வெண்சாரணை | ஒரு மருந்துப் பூடுவகை . |
வெண்சலசமுற்றாள் | கலைமகள் . |
வெண்சாமரம் | கவரிமானின் மயிர்க்கற்றையாகிய அரச சின்னம் . |
வெண்சாமரை | கவரிமானின் மயிர்க்கற்றையாகிய அரச சின்னம் . |
வெண்சீர்வெண்டளை | வெண்பாவுரிச்சீர்முன் நேர்வந்து ஒன்றுந் தளைவகை . |
வெண்சுடர் | காண்க : வெண்கதிரோன் . |
வெண்சுதைக்குன்று | செய்குன்றுவகை . |
வெண்செந்துறை | இரண்டடிகள் தம்முள் அளவொத்துவருஞ் செய்யுள்வகை . |
வெண்சோறு | வெள்ளரிசியாற் சமைத்த வெறும் அன்னம் . |
வெண்டயம் | காண்க : வெண்டையம் . |
வெண்டலை | தசை நீங்கி எலும்பு மட்டுமான தலை ; தலையோடு ; காண்க : வெண்ணிலை . |
வெண்டளை | வெண்பாவிற்குரிய தளையான இயற்சீர்வெண்டளை வெண்சீர்வெண்டளை . |
வெண்டாது | வெள்ளி ; திருநீறு . |
வெண்டாமரை | வெள்ளை நிறமுடைய தாமரைப்பூ . |
வெண்டாமரைமகள் | நாமகள் . |
வெண்டாமரையாள் | நாமகள் . |
வெண்டாவி | பட்டினிகிடந்து பின் உண்கையால் உண்டாகும் அன்னக்களை . |
வெண்டிரை | கடல் . |
வெண்டு | உட்டுளை ; மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை ; கரும்பு ; கடுக்கன்புரி ; கிடேச்சு . |
வெண்டுகில் | வெள்ளைத்துணி . |
வெண்டுத்தம் | காண்க : மயிற்றுத்தம் . |
வெண்டுறை | மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப் பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின்வகை ; ஆடற்குரிய பாட்டு . |
வெண்டேர் | கானல்நீர் . |
வெண்டை | செடிவகை . |
வெண்டையம் | வீரர் காலணி ; குதிரை முதலியவற்றின் காற்சலங்கை ; கட்டைவிரல் மோதிரம் . |
வெண்டொழுநோய் | காண்க : வெண்குட்டம் . |
வெண்டோடு | பனந்தோடு . |
வெண்டோன்றி | ஒரு செடிவகை . |
வெண்ணகை | வெள்ளிய பல் ; புன்னகை . |
வெண்ணஞ்சு | நிணம் ; ஊன் விசேடம் . |
வெண்ணரி | நரிவகை . |
வெண்ணாங்கு | மரவகை . |
வெண்ணாயுருவி | ஒரு செடிவகை . |
வெண்ணாரை | ஒரு கொக்குவகை . |
![]() |
![]() |
![]() |