வெவ்விடாய் முதல் - வெள்ளியம்பலம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வெவ்விடாய் கடுந்தாகம் .
வெவ்விது சூடானது ; கொடியது .
வெவ்வினை போர் ; கொடிய வினை .
வெவ்வுயிர்த்தல் வெப்பமாக மூச்சுவிடுதல் .
வெவ்வுரை கடுஞ்சொல் .
வெவ்வுழவு மேலுழவு .
வெவ்வெஞ்செல்வன் வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு .
வெவ்வேகம் கொடிய நஞ்சு .
வெவ்வேறு வேறுவேறு ; தனித்தனி .
வெள் வெண்மையான ; உள்ளீடற்ற ; கலப்பில்லாத ; ஒளிபொருந்திய ; கூர்மை .
வெள்குதல் வெட்குதல் ; அஞ்சுதல் ; கூச்சப்படுதல் ; மனங்குலைதல் .
வெள்யாடு காண்க : வெள்ளாடு .
வெள்வரகு வரகுவகை .
வெள்வரி பலகறை ; கண்ணோய்வகை ; காண்க : வெள்ளரி .
வெள்வரைத்தல் கிழக்கு வெளுத்தல் .
வெள்வரைப்பு கிழக்கு வெளுத்தல் .
வெள்வளையார் மகளிர் .
வெள்வாடை இளந்தென்றல் .
வெள்வாள் ஒளியுள்ள வாள் .
வெள்விழி வெள்ளை விழி .
வெள்விளர்த்தல் மிக வெண்மையாதல் .
வெள்வீச்சு வெற்றுப்பேச்சு .
வெள்வெங்காயம் காண்க : வெங்காயம் ; வெள்ளைப்பூண்டு .
வெள்வெடி வெற்றுத்தோட்டா ; காண்க : வெள்வீச்சு ; வெருட்டு .
வெள்வேல் வேலமரவகை .
வெள்ளக்காடு பெருவெள்ளம் ; நீரால் நிலப்பரப்பு நிறைகை .
வெள்ளக்கால் வெள்ளநீர் .
வெள்ளக்கேடு வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு .
வெள்ளச்சாவி வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு .
வெள்ளடி வெளிப்படை ; உள்ளீடின்மை ; பொது ; பொதுவானது ; வெறுங்கால் ; வெண்பாவுக்குரிய அடி ; வெருட்டு .
வெள்ளடிச்சேவல் காலின் முள் செதுக்கப்படாத சண்டைச்சேவல் .
வெள்ளடை வெற்றிலை ; பரமாகாசம் ; ஒரு சிவதலம் .
வெள்ளணி பிறந்தநாள் ஒப்பனை ; வெள்ளிய ஆடை ; அரசன் பிறந்தநாள் விழா .
வெள்ளப்பாடு வெள்ளமிகுதியால் வருமழிவு ; பள்ளமான வயல்நிலம் .
வெள்ளப்பாழ் காண்க : வெள்ளக்கேடு .
வெள்ளம் நீர்ப்பெருக்கு ; பெருக்கம் ; கடல் ; கடலலை ; நீர் ; ஈரம் ; மிகுதி ; ஒரு பேரெண் ; உண்மை .
வெள்ளர் வெண்ணிறமுடையார் ; கபடமற்றவர் .
வெள்ளரணை காண்க : சீலைப்பேன் .
வெள்ளரி ஒரு கொடிவகை .
வெள்ளலரி ஒரு பூச்செடிவகை .
வெள்ளவிளர்த்தல் மிக வெண்மையாதல் .
வெள்ளவெளி பரமன் உறையும் ஞானாகாசம் .
வெள்ளறிவு அறிவுக்குறைவு .
வெள்ளறுகு அறுகம்புல்வகை ; புல்வகை .
வெள்ளறுவை வெள்ளை ஆடை .
வெள்ளாட்டி பணிப்பெண் ; வைப்பாட்டி .
வெள்ளாடு ஓர் ஆட்டுவகை .
வெள்ளாண்மை பயிர்த்தொழில் ; வேளாண்மை .
வெள்ளாம்பல் ஆம்பல்வகை .
வெள்ளாமை கடலாமைவகை ; காண்க : வேளாண்மை ; பறையாமை .
வெள்ளாவி ஆடை வெளுக்க உதவும் நீராவி .
வெள்ளாவிகட்டுதல் வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல் ; நன்றாக அடித்தல் .
வெள்ளாவிவைத்தல் வெளுத்தற்குரிய ஆடைகளை நீராவியிலிடுதல் ; நன்றாக அடித்தல் .
வெள்ளாழன் வேளாள மரபினன் .
வெள்ளாளன் வேளாள மரபினன் .
வெள்ளாறு சோழ பாண்டிய நாட்டு எல்லையாக உள்ள ஓர் ஆறு .
வெள்ளானை இந்திரனது ஐராவதம் , வெள்ளையானை , வாலைரசம் .
வெள்ளானையுள்ளோன் ஐயனார் .
வெள்ளானையூர்ந்தோன் இந்திரன் .
வெள்ளி வெண்மை ; வெண்ணிறமுள்ள உலோகவகை ; நாணயவகை ; சுக்கிரன் ; வெள்ளிக்கிழமை ; விண்மீன் ; அறிவுக்குறைவு ; விந்து ; ஒரு புலவர் ; அசுர குருவாகிய சுக்கிரன் .
வெள்ளிக்கிழமை வாரத்தில் ஆறாம் நாள் .
வெள்ளிக்கோல் துலாக்கோல்வகை .
வெள்ளிச்சரிகை வெள்ளியால் இழைத்த சரிகை .
வெள்ளிடம் இடைவெளி .
வெள்ளிடி கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி ; எதிர்பாராது திடீரென வரும் இடுக்கண் .
வெள்ளிடை வெளியிடம் ; வானம் ; இடைவெளி ; தெளிவு .
வெள்ளிடைமலை யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது .
வெள்ளிது வெளிப்படையானது .
வெள்ளிநிலை துயர்தீரச் சுக்கிரன் மழைபெய்வித்தலைக் கூறும் புறத்துறை .
வெள்ளிமலை கயிலைமலை ; ஒரு மலை .
வெள்ளிமன்றம் காண்க : வெள்ளியம்பலம் .
வெள்ளிமாடம் அரண்மனைவகை .
வெள்ளிமீன் சுக்கிரன் .
வெள்ளிமுலாம் வெள்ளிப்பூச்சு .
வெள்ளியம்பலம் மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் .