வெள்ளியார் முதல் - வெள்ளைவாரணன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வெள்ளியார் வெண்ணிறமுடையவர் ; நற்குண முள்ளவர் ; சுக்கிரன் ; சிவபிரான் .
வெள்ளியுயிர் மக்கட்பிறப்பு .
வெள்ளியெழுதல் வெள்ளிமுளைத்தல் .
வெள்ளில் விளாமரம் ; விளாம்பழம் ; பாடை .
வெள்ளிலங்காடு சுடுகாடு .
வெள்ளிலை வெற்றிலை ; ஆயுதங்களின் அலகு ; வெள்ளிமடந்தைச்செடி .
வெள்ளிலைப்பற்று வெற்றிலைக் கவளி .
வெள்ளிலோத்திரம் வெண்பூவுள்ள மரவகை ; விளாமரம் ; விளாம்பட்டை .
வெள்ளிவரைகாப்போன் நந்தி .
வெள்ளிவள்ளி மகளிரணியும் வெள்ளித்தோள் வளை .
வெள்ளிவிழா இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம் .
வெள்ளிவேர் சல்லிவேர் .
வெள்ளிழுது வெண்ணெய் .
வெள்ளீயம் ஓர் ஈயவகை .
வெள்ளீரல் மணிக்குடர் .
வெள்ளுப்பு வெண்மைநிறமான உப்பு .
வெள்ளுயிர் சுத்தான்மா .
வெள்ளுவரி நல்ல நீர் .
வெள்ளுவா வெள்ளையானை .
வெள்ளுள்ளி வெள்ளைப்பூண்டு .
வெள்ளெருக்கு எருக்குவகை .
வெள்ளெலி ஒரு வெள்ளை எலிவகை .
வெள்ளெலும்பு தசை கழிந்த எலும்பு .
வெள்ளெழுத்து எழுத்துப் பார்வைக்குறை .
வெள்ளென அதிகாலையில் ; குறித்த காலத்திற்கு முன்னமே .
வெள்ளெனல் வெண்மையாதல் ; தெளிவாதல் ; பொழுதுவிடிதல் .
வெள்ளேடு வெற்றேடு .
வெள்ளை வெண்மை ; பலராமன் ; சுண்ணாம்பு ; வெள்ளிநாணயவகை ; வயிரம் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று ; சங்கு ; கள் ; வேங்கைமரம் ; வெள்ளைத்துணி ; வெளுப்பு ; வெள்ளைமாடு ; வெள்ளாடு ; கபடமற்றவர் ; கபடமற்றது ; கருத்தாழமில்லாதது ; பொருள் வெளிப்படையானது ; வெண்பா ; இசையில் உண்டாம் வெளிற்றோசை ; புல்லிது .
வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைச்சத்து .
வெள்ளைக்கவி வெண்பா ; பொருளாழமற்ற கவி ; புன்மொழிகளால் கவிபாடுவோன் ; பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன் .
வெள்ளைக்காக்கணம் கொடிவகை .
வெள்ளைக்காகிதம் வெண்மையான கடுதாசி ; எழுதாத தாள் .
வெள்ளைக்காரன் ஐரோப்பிய இனத்தவன் .
வெள்ளைக்குதிரை வெண்ணிறக் குதிரை ; கள் ; சீலைப்பேன் .
வெள்ளைக்குந்துருக்கம் நீண்ட மரவகை .
வெள்ளைக்குப்போடுதல் அழுக்காடைகளை வெளுக்கப்போடுதல் .
வெள்ளைக்குன்றி அதிமதுரக்கொடி .
வெள்ளைக்கொம்பு நரைமயிர் .
வெள்ளைக்கோட்டி பயனிலபேசும் அறிவிலார் கூட்டம் .
வெள்ளைச்சுரிதகம் வெண்டளையில் வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை .
வெள்ளைச்சேம்பு சேம்புவகை .
வெள்ளைசாத்துதல் காண்க : வெள்ளைபூணுதல் .
வெள்ளைத்தமிழ் எளிய நடையில் அமைந்த தமிழ் .
வெள்ளைத்தனம் கபடமின்மை .
வெள்ளைத்தாள் சோளப்பயிர் நோயுள் ஒன்று ; வெள்ளைக் கடுதாசி .
வெள்ளைநாகர் பலதேவர் .
வெள்ளைநாவல் ஒரு நாவல்மரவகை .
வெள்ளைநிறத்தாள் கலைமகள் .
வெள்ளைநோக்கு கள்ளமற்ற பார்வை .
வெள்ளைப்புத்தி அறியாமை ; அறிவுக்குறைவு .
வெள்ளைப்பூச்சு வெள்ளையடிக்கை ; தவறு முதலியவற்றை மழுப்பி மறைக்கை .
வெள்ளைப்பூண்டு ஒரு பூண்டுவகை .
வெள்ளைப்பேச்சு வெளிப்படையான சொல் ; கபடமில்லாத பேச்சு .
வெள்ளைபூசுதல் சுண்ணாம்படித்தல் ; தவறு முதலியவற்றை மழுப்புதல் ; வீட்டுக்கு மெருகு சுண்ணாம்பு பூசுதல் .
வெள்ளைபூணுதல் வெள்ளையுடை தரித்தல் .
வெள்ளைமகன் மூடன் .
வெள்ளைமயிர் நரைமயிர் .
வெள்ளைமழை குறைந்த மழை .
வெள்ளைமனம் கபடமற்ற தூயமனம் .
வெள்ளைமனிதன் காண்க : வெள்ளைக்காரன் ; கபடமற்றவன் .
வெள்ளைமிளகு மிளகுவகை ; மரவகை .
வெள்ளைமூர்த்தி தூயவடிவன் ; பலதேவன் .
வெள்ளைமெய்யாள் கலைமகள் .
வெள்ளைமேனியாள் கலைமகள் .
வெள்ளைமை அறிவின்மை .
வெள்ளையடித்தல் சுண்ணாம்படித்தல் ; தவறு முதலியவற்றை மழுப்புதல் .
வெள்ளையப்பன் வெள்ளிநாணயம் ; செல்வம் .
வெள்ளையன் வெண்ணிறத்தினன் ; காண்க : வெள்ளைக்காரன் ; வெள்ளையப்பன் .
வெள்ளையாடை கைம்பெண்டிர் உடுக்கும் வெள்ளைப்புடைவை ; வெண்மையான ஆடை .
வெள்ளையானை வெண்ணிறமுள்ள யானை ; கீழ்த்திசையானை ; காண்க : ஐராவதம் ; அதிகச்செலவு பிடிக்கக்கூடியது .
வெள்ளையானையூர்தி இந்திரன் ; ஐயனார் .
வெள்ளையும்சள்ளையும் வெண்மையான ஆடை .
வெள்ளையுருவாள் காண்க : வெள்ளைமேனியாள் .
வெள்ளைவாயன் இரகசியத்தை மறைக்க முடியாது வெளியிடுபவன் .
வெள்ளைவாரணன் இந்திரன் .