சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இணையணை | பலவான அணை . |
| இணையல் | இணைதல் , சேர்தல் . |
| இணையளபெடை | முதலிரு சீரினும் அளபெடை இயைந்து வரும் தொடை . |
| இணையாவினைக்கை | ஒரு கையால் புரியும் அபிநயம் . |
| இணையியைபு | ஓரடியின் ஈற்றுச் சீர் இரண்டும் இணைந்து வரும் தொடை . |
| இணையீரோதி | கடையொத்த நெய்ப்பினையுடைய கூந்தல் . |
| இணையெதுகை | ஓரடியின் முதலிரு சீரினும் எதுகை இயைந்து வரும் தொடை . |
| இணையெழுத்து | போலியெழுத்து . |
| இணைவன் | இணைந்திருப்பவன் . |
| இணைவிழைச்சி | புணர்ச்சி . |
| இணைவிழைச்சு | புணர்ச்சி . |
| இணைவு | ஒன்றிப்பு ; கலப்பு ; புணர்ச்சி . |
| இத்தனை | இவ்வளவு ; சில . |
| இத்தால் | இதனால் . |
| இத்தி | கல்லால மரம் ; கல்லித்தி மரம் ; பூனை . |
| இண்டிகன் | சிறைச்சாலையின் வெளிப்புறம் காப்போன் ; சோதிடன் . |
| இண்டிடுக்கு | சந்துபொந்து . |
| இண்டிறுக்கெனல் | குறட்டைவிடுங் குறிப்பு . |
| இண்டு | கொடிவகை ; தொட்டாற்சுருங்கி ; செடிவகை ; புலித்தொடக்கி . |
| இண்டை | தாமரை ; மாலை வகை ; கொடி வகை ; புலிதொடக்கி ; தொட்டாற்சுருங்கி ; ஆதொண்டை . |
| இண்டைச்சுருக்கு | மாலைவகை . |
| இணக்கம் | இசைப்பு ; பொருத்தம் ; நட்பு ; சம்மதம் ; திருத்தம் . |
| இணக்கு | இசைவு ; உடன்பாடு . |
| இணக்குதல் | உடன்படுத்தல் . |
| இணக்குப்பார்வை | பார்வை விலங்கு . |
| இணக்கோலை | உடன்படிக்கைப் பத்திரம் . |
| இணகு | உவமை . |
| இணங்கர் | ஒப்பு . |
| இணங்கல் | உடன்படுதல் ; பொருந்தல் ; செட்டிமார் வழக்கில் 'எட்டு' என்னும் எண் . |
| இணங்கலர் | பகைவர் . |
| இணங்கன் | நண்பன் ; வெடியுப்பு . |
| இணங்கார் | காண்க : இணங்கலர் . |
| இணங்கி | தோழி . |
| இணங்கு | இணக்கம் ; ஒப்பு ; பேய் ; நண்பினன்(ள்) . |
| இணங்குதல் | உடன்படுதல் ; மனம் பொருந்துதல் . |
| இணர் | பூங்கொத்து ; பூ ; பூவிதழ் ; பூந்தாது ; சுடர் ; குலை ; ஒழுங்கு ; தொடர்ச்சி ; கிச்சிலி மரம் ; மாமரம் . |
| இணர்தல் | நெருங்குதல் ; விரிதல் . |
| இணரோங்குதல் | வழிவழியாக உயர்தல் . |
| இணாட்டு | மீன் செதிள் ; ஓலைத்துண்டு . |
| இணாப்புதல் | ஏய்த்தல் , ஏமாற்றுதல் . |
| இணி | எல்லை ; ஏணி ; கண்ணாறு . |
| இணுக்கு | கைப்பிடியளவு ; வளார் ; கிளை முதலியவற்றின் இடைச்சந்து ; அழுக்கு . |
| இணக்குதல் | இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் . |
| இணங்குதல் | இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் . |
| இணை | இசைவு ; ஒப்பு ; இரட்டை ; உதவி ; கூந்தல் ; எல்லை ; இணைத் தொடை . |
| இணை | (வி) சேர் ; கூட்டு . |
| இணைக்கயல் | இரண்டு கொண்டைமீன்களின் வடிவாக உள்ளது ; எட்டு மங்கலங்களுள் ஒன்று ; மச்சரேகை . |
| இணைக்கல்லை | இரண்டு இலைகளால் தைக்கப்பட்ட உண்கலம் . |
| இணைக்குறள் ஆசிரியப்பா | ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவற்பாட்டு . |
| இணைக்கை | இரண்டு கைகளால் புரியும் அபிநயம் . |
| இணைக்கொடைப் பொருள் | திருமணக் காலத்தில் மணமக்களுக்கு உற்றார் , நண்பர் முதலியோர் கொடுக்கும் பொருள் . |
| இணைக்கோணத்தடை | மூக்கிரட்டை இலை' எனப் பொருள்படும் ஒரு குறிப்புமொழி . |
| இணைக்கோணம் | மூக்கிரட்டை . |
| இணைத்தகோதை | இதழ்பறித்துக் கட்டின மாலை . |
| இணைத்தல் | சேர்த்தல் ; கட்டுதல் ; தொடுத்தல் . |
| இணைத்தொடை | அளவடியுள் முதலிரு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
| இணைத | சேர்தல் ; ஒத்தல் ; இசைதல் . |
| இணைப்படம் | இரண்டுபுறமும் ஒத்த படம் . |
| இணைப்பு | இசைப்பு ; சேர்ப்பு ; ஒப்பு . |
| இணைபிரியாமை | விட்டுப்பிரியாதிருக்கை . |
| இணைமட்டப்பலகை | இரட்டைக்கோடு காட்டும் கருவி . |
| இணைமணிமாலை | பிரபந்த வகை ; வெண்பா அகவல் இணைந்தோ , வெண்பா கட்டளைக் கலித்துறை இணைந்தோ நூறு பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறு நூல்வகை . |
| இணைமுரண் | ஓரடியின் முதலிரு சீரும் முரண்பட இணைந்து வரும் தொடை . |
| இணைமோனை | ஓரடியின் முதலிரு சீரினும் மோனை இயைந்து வரும் தொடை . |
| இணையசை | நிரையசை . |
| இணையடிகால் | முட்டுக்கால் , மாட்டுக் குற்றவகை . |
| இணையடித்தல் | முட்டுக்கால் தட்டுதல் . |
| இடைவெட்டு | இடையிலே பெற்ற பொருள் ; நடுவிலே வந்த பொருள் . |
| இடைவெட்டுப் பணம் | மாற்று முத்திரை விழுந்த பணம் ; வேறு வழியாகக் கிடைத்த இலாபம் . |
| இடைவெட்டுப் பேச்சு | நிந்தனை ; பரிகாச வார்த்தை . |
| இடைவெளி | நடுவெளி ; வெளிப்பரப்பு ; பிளப்பு . |
| இண்டஞ்செடி | செடிவகை . |
| இண்டம்பொடி | சவ்வரிசி நொய் . |
| இண்டர் | இடையர் ; சுற்றம் ; சண்டாளர் . |
| இண்டனம் | விளையாட்டு ; புணர்ச்சி ; ஊர்தி . |
|
|
|