இத்திநடையம் முதல் - இந்திரசாலி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இந்தப்படிக்கு காண்க : இப்படிக்கு .
இந்தம் புளியமரம் ; விறகு .
இந்தம்வரம் காண்க : இந்தீவரம் .
இந்தளங்குறிஞ்சி ஒரு பண் .
இந்தளம் மருத யாழ்த்திறவகை ; தூபமுட்டி , கும்மட்டிச் சட்டி .
இந்தனம் விறகு ; புகை .
இந்தனோடை மேலாடை .
இந்தா 'இதோ' , 'இங்கே வா' என்னும் குறிப்பு மொழி இதை வாங்கிக் கொள் ' என்னும் குறிப்பு மொழி .
இந்தி பூனை ; திருமகள் ; இந்திய மொழிகளுள் ஒன்று ; இந்தியத் தேசிய மொழி .
இந்திகை அபரநாதசத்திகள் ஐந்தனுள் ஒன்று .
இந்திகோபம் ஈயம் .
இந்திடம் இவ்விடம் .
இந்தியம் காண்க : இந்திரியம் .
இந்தியன் இந்திய நாட்டைச் சேர்ந்தவன் .
இந்தியா பரதகண்டம் .
இந்திரகணம் செய்யுட் கணத்துள் ஒன்று ; முதற் செய்யுளின் முதற் சீரைத் தேமாங்காய் வாய்பாடாகப் பாடுவது .
இந்திரகம் சபாமண்டபம் .
இந்திரகாந்தச் சேலை புடைவைவகை .
இந்திரகெந்தம் காண்க : இந்திரசுகந்தம் .
இந்திரகோடணை இந்திரவிழா .
இந்திரகோபம் தம்பலப்பூச்சி .
இந்திரசாபம் இந்திரனுடைய வில் ; வானவில் .
இந்திரசாலம் மாயவித்தை ; அற்புதங்களைக் காட்டும் கண்கட்டு வித்தை ; ஏய்ப்பு .
இந்திரசாலி அழிஞ்சில் ; இந்திரசால வித்தைக்காரன் .
இத்திநடையம் நத்தை .
இத்தியாதி இவை முதலானவை .
இத்துணை இவ்வளவு .
இத்துமம் வசந்தம் ; விறகு ; ஒருவகைச் சுள்ளி ; காமம் .
இத்து காமாட்சிப்புல் .
இத்துரா காமாட்சிப்புல் .
இத்துவரம் எருது .
இத்துவரன் கயவன் , தீயோன் , வழிச்செல்வோன் ; வறியன் .
இத்தை முன்னிலை அசைச்சொல் ; இதனை .
இதக்கை பனங்காயின் தலையிலுள்ள தோடு ; செவுள் .
இதசத்துரு வெளிநட்புக் காட்டும் பகைவன் .
இதஞ்சொல்லுதல் புத்தி கூறுதல் .
இதடி பெண்ணெருமை ; நீர் .
இதண் காவற்பரண் .
இதணம் காவற்பரண் .
இதம் இன்பமானது ; நன்மை ; இதயம் ; இது ; ஞானம் .
இதமித்தல் இதஞ்செய்தல் ; பற்றுச்செய்தல் .
இதமியம் இன்பம் ; இதப்படுதல் ; இனிமை ; மனநிறைவு .
இதயகமலம் உள்ளத்தாமரை .
இதயபதுமம் உள்ளத்தாமரை .
இதயம் இருதயம் ; மனம் ; மார்பு ; நஞ்சு .
இதயவாசனை அணிவகை .
இதரம் வேறு ; பகை ; கீழ்மை .
இதரவிதரம் உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள் முதலாவதன் உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடர்ந்து வருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப்படும் ஒருவகையணி .
இதரன் அன்னியன் ; பாமரன் ; கீழ்மகன் .
இதரேதரம் காண்க : இதரவிதரம் .
இதரேதராச்சிரயம் அன்னியோன்னியாச்சிரயம் , ஒன்றனை ஒன்று பற்றிநிற்றல் என்னும் குற்றம் .
இதல் கவுதாரி ; காடை ; சிவல் .
இதலை கொப்பூழ் .
இதவிய நன்மையான .
இதவு இதம் ; நன்மை .
இதழ் பூவின் தோடு ; உதடு ; கண்ணிமை ; பனையேடு ; மாலை ; பாளை ; சாதிபத்திரி ; கதவின் இலை ; புத்தகத்தின் தாள் ; ஓரிதழ்த் தாமரை .
இதழ்குவிதல் மலர் கூம்புதல் ; இமைகூடுதல் ; மேலுதடும் கீழுதடும் குவிந்து நிற்றல் .
இதழ்விள்ளல் பேசல் ; மலர்தல் ; வாய்திறத்தல் .
இதழலர்தல் பேச வாய்திறத்தல் .
இதழி கொன்றை .
இதள் பாதரசம் .
இதளை கொப்பூழ் .
இதன் நன்மையுள்ளவன் .
இதா இங்கே பார் .
இதோ இங்கே பார் .
இதாகிதம் (இதம்-அகிதம்) நன்மை தீமை .
இதாசனி சுகாசனத்தில் இருப்பவன் .
இதி இறுதி ; பேய் ; உறுதி ; ஒளி .
இதிகாசம் பழங்காலத்துச் சரித்திரம் ; இராமாயண பாரதங்கள் போன்றவை ; ஐதிகப் பிரமாணம் ; அறிவு ; எடுத்துக்காட்டு ; மேற்கோள் .
இது அஃறிணை ஒருமை அண்மைச் சுட்டுப் பெயர் ; இந்த .
இதை கப்பற்பாய் ; காராமணி ; கலப்பை ; புதுக்கொல்லை .
இதோபதேசம் நல்லறிவூட்டல் ; ஒரு நூல் .
இதோள் இவ்விடம் .
இதோளி இவ்விடம் .
இந்த அண்மைப் பொருளைச் சுட்டுஞ் சொல் .