இந்திரசித்து முதல் - இந்துலேகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இந்திரன்மைந்தன் சயந்தன் ; அருச்சுனன் ; வாலி .
இந்திரன்திசை கீழ்த்திசை .
இந்திரன் நாள் கேட்டை .
இந்திரனூர் பொன்னாங்காணி .
இந்திரா திருமகள் .
இந்திராக்கம் குதிரைச் செவியின் அடியில் காணப்படும் சுழிவகை .
இந்திராணம் நொச்சி .
இந்திராணி இந்திரன் மனைவி ; ஏழு மாதருள் ஒருத்தி ; நொச்சி ; சுரதவகை .
இந்திராணிகாணி பொன்னாங்காணி .
இந்திராபதி திருமால் .
இந்திரி கிழக்கு ; செடிவகை ; நன்னாரி .
இந்திரியக் காட்சி ஆன்மா , பொறி பூதங்களுடனே கூடி வேறுபாடின்றித் தெளிவாய் அறியும் அறிவு .
இந்திரியக்கொடி சுண்டி .
இந்திரியகிராமம் ஐம்பொறிக் கூட்டம் .
இந்திரியகோசரம் புலனுக் கெட்டியது .
இந்திரியஞானம் காண்க : இந்திரியக் காட்சி .
இந்திரியநிக்கிரகம் பொறியடக்கம் .
இந்திரியநுகர்ச்சி ஐம்புல நுகர்ச்சி .
இந்திரியம் பொறி ; சுக்கிலம் .
இந்திரியவம் வெட்பாலையரிசி .
இந்திரியவொழுக்கு சுக்கிலம் தானே வெளிப்படும் நோய் .
இந்திரேபம் வெட்பாலை என்னும் மரவகை .
இந்திரேயம் பாவட்டைச் செடி .
இந்திரை திருமகள் ; கடாரை ; நாரத்தை ; அரிதாரம் .
இந்திரைக்கு மூத்தாள் இலக்குமியின் தமக்கை , மூதேவி .
இந்தீவரம் கருங்குவளை ; கருநெய்தல் .
இந்து சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான் ; கௌரி பாடாணம் ; எட்டி ; கரடி ; கரி .
இந்துகமலம் வெண்டாமரைப்பூ .
இந்துகாந்தம் காண்க : சந்திரகாந்தக்கல் .
இந்துகை காண்க : இந்திகை .
இந்துசிகாமணி பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன் , சிவன் .
இந்துசேகரன் பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன் , சிவன் .
இந்துதேசம் இந்திய நாடு , பரத கண்டம் .
இந்துப்பு மருந்து உப்புவகை .
இந்துமதி பூரணை ; ' அசன் ' என்னும் அரசனுடைய மனைவி ; விதர்ப்பராசன் சகோதரி ; சந்திரமதி .
இந்துமராம் கடம்பு .
இந்துரத்தினம் முத்து .
இந்துரம் எலி .
இந்துரவிகூட்டம் சந்திர சூரியர் ஒருங்கிணையும் நாள் , அமாவாசை .
இந்துரேகை சந்திரகலை .
இந்துலேகை சந்திரகலை .
இந்திரசித்து இந்திரனை வென்றவன் ; இராவணனுடைய மூத்த மகன் ; கருடன் ; கிருட்டிணன் .
இந்திரசிறப்பு வைசுவதேவம் , மதிய உணவிற்கு முன் இந்திரன் முதலிய தேவர்களுக்குப் பார்ப்பனர் செய்யும் நற்செயல் .
இந்திரசுகந்தம் நன்னாரி .
இந்திரஞாலம் காண்க : இந்திரசாலம் ; வஞ்சகச் சொல் ; சூரபதுமன் தேர் .
இந்திரதந்திரம் காண்க : இந்திரசாலம் .
இந்திரதரு மருது .
இந்திரதனு காண்க : இந்திரவில் .
இந்திரதிசை கிழக்கு .
இந்திரதிருவன் இந்திரனைப்போல் செல்வம் உடையவன் .
இந்திரநகரி திருத்தணிகை ; தேவலோகம் .
இந்திரநாள் கேட்டை நாள் .
இந்திரநீலம் சிறந்த நீலமணி .
இந்திரப்பிரியம் பொதியமலைச் சந்தனம் .
இந்திரபதம் (வி) துறக்கம் ; இந்திரனாயிருக்கும் நிலை .
இந்திரபம் வெட்பாலை .
இந்திரபுட்பம் வெண்தோன்றி .
இந்திரபுட்பி வெண்தோன்றி .
இந்திரபுரி இந்திரன் தலைநகராகிய அமராவதி .
இந்திரபுரோகிதன் தேவகுருவாகிய வியாழன் .
இந்திரம் மேன்மையானது ; இந்திரியம் ; இந்திர பதவி .
இந்திரர் தேவர் .
இந்திரலோகம் துறக்கம் ; பரமபதம் .
இந்திரவணி சங்கநிதி , பதுமநிதி .
இந்திரவம் காண்க : இந்தீவரம் .
இந்திரவர்ணப்பட்டு பட்டுப்புடைவைவகை .
இந்திரவல்லி பிரண்டை ; முடக்கொற்றான் ; கொற்றான் .
இந்திரவாசம் நெய்தல் .
இந்திரவாமம் நெய்தல் .
இந்திரவாருணி பேய்க்கொம்மட்டி .
இந்திரவிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளி .
இந்திரவில் வானவில் .
இந்திரவிழவு இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா .
இந்திரவிழா இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா .
இந்திரன் தேவேந்திரன் ; தலைவன் ; கேட்டை ; மிருகசீரிடம் ; அந்தரான்மா ; சூரியன் .