சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இபுதார் | நோன்புக்குப் பின் செய்யும் பாரணை . |
| இபுனு | வழித்தோன்றல் . |
| இம்பர் | இவ்விடம் இவ்வுலகம் ; பின் . |
| இம்பரர் | இவ்வுலகத்தவர் . |
| இம்பரார் | இவ்வுலகத்தவர் . |
| இம்பரும்பர் | இவ்வுலகில் தேவராக மதிக்கப் படுபவர் , பூசுரர் . |
| இம்பல் | பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி . |
| இம்பி | கருந்தினை . |
| இம்பில் | பண்டைக் காலத்து விளையாட்டு வகை . |
| இம்புறாவேர் | சாயவேர் . |
| இம்பூறல் | சாயவேர் . |
| இம்மட்டும் | இதுவரையும் . |
| இம்மடி | யானை . |
| இம்மி | மத்தங்காய்ப் புல்லரிசி ; அணு ; ஒரு சிற்றெண் ; ஒரு சிறு நிறை ; பொய்ம்மை ; புலன் . |
| இம்மிக்கணக்கு | கீழ்வாயிலக்கக் கணக்கு . |
| இம்மியளவு | தேர்த்துகள் எட்டு மடங்கு கொண்ட ஓர் அளவு . |
| இம்மெனல் | விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; ' இம் ' என்னும் ஒலிக்குறிப்பு . |
| இம்மை | இப்பிறப்பு ; இவ்வுலக வாழ்வு . |
| இமகரன் | குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் . |
| இமகிரணன் | குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் . |
| இமகிரி | இமயமலை . |
| இமசலம் | பனிநீர் . |
| இமசானு | இமயமலை , இமயமலையின் மேற்பரப்பு . |
| இமப்பிரபை | மிகக் குளிர்ச்சியாயுள்ள ஒரு நரகம் . |
| இமம் | பனி ; சந்தனம் ; சீதளம் . |
| இமயம் | இமயமலை ; மந்தரமலை ; மேருமலை ; பொன் . |
| இமயவதி | இமவான் மகள் , பார்வதி . |
| இமயவரம்பன் | இமயமலை எல்லைவரை வெற்றி கொண்டு அரசாண்டவன் ; ஒரு சேரமன்னன் . |
| இமயவல்லி | காண்க : இமயவதி . |
| இமயவில் | மேருமலையாகிய வில் . |
| இமயவில்லி | மேருமலையை வில்லாகவுடையவன் , சிவன் . |
| இமலம் | மரமஞ்சள் . |
| இமவந்தம் | இமயமலை . |
| இமவாலுகை | பச்சைக் கருப்பூரம் . |
| இமவான் | இமயமலை ; இமயமலையரசன் . |
| இமழி | யானை . |
| இமாசலம் | காண்க : இமவந்தம் . |
| இமாசலை | பார்வதி . |
| இமாம் | பள்ளிவாசலில் தொழுகையை நடத்துபவர் . |
| இமாலயம் | பனிக்கு இருப்பிடமான இமயமலை . |
| இமிர்தல் | ஒலித்தல் ; ஊதுதல் ; மொய்த்தல் . |
| இமில் | எருத்தின் திமில் ; கொண்டை . |
| இமிலை | ஓர் இசைக்கருவி . |
| இமிழ் | ஒலி ; பந்தம் ; கயிறு ; இனிமை ; இசை . |
| இமிழ்த்தல் | ஒலித்தல் ; கட்டுதல் ; சிமிட்டுதல் . |
| இமிழ்தல் | ஒலித்தல் ; யாழொலித்தல் ; தழைத்தல் ; கட்டுதல் ; மிகுதல் . |
| இமிழி | இசை . |
| இந்துலோகம் | வெள்ளி . |
| இந்துவி | இந்திமொழி . |
| இந்துவோடிரவிகூட்டம் | காண்க : இந்துரவி கூட்டம் . |
| இந்துள் | நெல்லிமரம் . |
| இந்துளி | நெல்லிமரம் . |
| இந்துளம் | கடப்பமரம் ; நெல்லிமரம் . |
| இந்துறு | இலந்தை . |
| இந்துஸ்தானம் | நருமதை நதிக்கு வடபாலுள்ள இந்தியப் பகுதி , வட இந்தியா . |
| இந்தோ | இதோ . |
| இந்தோளம் | மாலைப் பண்வகை ; ஊசல் . |
| இப்படி | இவ்விதம் ; தண்டத் தீர்வை . |
| இப்படிக்கு | இங்ஙனம் . |
| இப்பந்தி | கலப்புச் சாதி ; சங்கடம் ; பேடி ; மூடன் . |
| இப்பர் | வணிகசாதி வகையார் ; கோவைசியர் . |
| இப்பாடு | இவ்விடம் . |
| இப்பால் | இவ்விடம் ; பின்பு . |
| இப்பி | சிப்பி ; கிளிஞ்சல் ; சங்கு . |
| இப்பியை | வெள்ளைக் குங்கிலியம் ; பெண்யானை . |
| இப்பிவெள்ளி | கிளிஞ்சிலை வெள்ளி என்றெண்ணும் மயக்கவுணர்ச்சி . |
| இப்புறம் | இவ்விடம் . |
| இப்பேர்ப்பட்ட | இத்தன்மையதான . |
| இப்பை | காண்க : இருப்பை . |
| இப்பொழுது | இந்நேரம் . |
| இப்போது | இந்நேரம் . |
| இப்போதே | இந்த நொடியிலே . |
| இபங்கம் | புளிமா . |
| இபம் | மரக்கொம்பு ; யானை . |
| இபாரி | சிங்கம் . |
|
|
|