சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இயல்புவழக்கு | எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப் பெயராலேயே அப் பொருளைக் கூறுகை . |
| இயல்பு விளி | பெயர் ஈறு திரியாது நிற்கும் விளிவேற்றுமை . |
| இயல்புளி | முறைப்படி . |
| இயல்பூதி | வில்வம் ; நாய்வேளை . |
| இயல்வாகை | பெருங்கொன்றை . |
| இயல்வாணர் | புலவர் . |
| இயல்வு | இயல்பு ; பெறுகைக்குத் தக்க வழி . |
| இயக்கர்கோமான் | இயக்கர்களின் அரசன் , குபேரன் . |
| இயக்கர்வேந்தன் | இயக்கர்களின் அரசன் , குபேரன் . |
| இயக்கன் | இயக்க கணத்தான் ; குபேரன் ; தலைமையாக நின்று நடத்துபவன் . |
| இயக்கி | யட்சப் பெண் ; கந்தருவப் பெண் ; குபேரன் மனைவி ; தருமதேவதை . |
| இயக்கினி | கண்டங்கத்தரி . |
| இயக்குதல் | செலுத்துதல் ; தொழிற்படுத்துதல் ; பழக்குதல் ; ஒலிப்பித்தல் ; நடத்திவருதல் ; போக்குதல் . |
| இயங்காத்திணை | தானாக இடம்விட்டுப் பெயர இயலாத நிலைத்திணைப் பொருள் . |
| இயங்கியற்பொருள் | இடம்விட்டு இடம்செல்லும் உயிர்ப்பொருள் ; சரப்பொருள் . |
| இயங்கு | செல்லுகை ; முட்செடி வகை . |
| இயங்குதல் | அசைதல் ; போதல் ; உலாவுதல் ; ஒளிசெய்தல் . |
| இயங்குதிசை | மூச்சு இயங்கும் மூக்குத்துளை . |
| இயங்குதிணை | காண்க : இயங்கியற்பொருள் . |
| இயங்குநர் | வழிப்போவோர் . |
| இயங்குபடையரவம் | பகையரணை முற்றுதற்கு எழுந்த படையின் செலவால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறுத்துறை . |
| இயசுரு | யசுர்வேதம் . |
| இயத்தல் | கடத்தல் ; நிகழ்தல் . |
| இயந்தா | யானைப் பாகன் ; சாரதி . |
| இயந்திரம் | ஆலை ; தேர் ; மதிலுறுப்பு ; சக்கரம் ; பாண்டவகை ; வலை . |
| இயந்திரமயில் | மயிற்பொறி . |
| இயந்திரி | இத்திமரம் . |
| இயந்திரித்தல் | எந்திரம் அமைத்தல் ; எந்திரத்தில் ஆட்டுதல் . |
| இயந்தை | மருத யாழ்த்திறம் ; செவ்வழி யாழ்த்திறவகை . |
| இயபரம் | இம்மை மறுமை , இகபரம் . |
| இயம் | சொல் ; ஒலி ; வாத்தியம் ; மிருதாரசிங்கி எனும் மூலிகை ; ஈ . |
| இயம்பல் | சொல் ; பழமொழி . |
| இயம்புணர் தூம்பு | நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி . |
| இயம்புதல் | ஒலித்தல் ; வாச்சியம் ஒலித்தல் ; சொல்லுதல் ; துதித்தல் ; கூப்பிடுதல் . |
| இயமகணம் | யமகிங்கரர் , யமனின் தூதர் . |
| இயமகம் | யமகம் ; ஓரெழுத்து முதல் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல நான்கடியும்வரப் பாடுவது . |
| இயமகிங்கரர் | காண்க : இயமகணம் . |
| இயமங்கியர் | பரசுராமர் . |
| இயமதூதி | பாம்பினது நச்சுப்பற்களுள் ஒன்றாகிய யமதூதன் . |
| இயமபடர் | யமதூதர் . |
| இயமம் | யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று ; கொலை , களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் ; தடை . |
| இயமரம் | பறைவகை . |
| இயமன் | யமன் , கூற்றுவன் . |
| இயமனூர்தி | எருமைக்கடா . |
| இயமான் | காண்க : இயமானன் . |
| இயமானகணம் | இந்திரகணம் ; மூன்று நேரசையால் வரும் சீர் . |
| இயமானன் | வேள்வித் தலைவன் ; குடும்பத் தலைவன் ; இந்திரன் ; ஆன்மா ; உயிர் . |
| இயர் | வியங்கோள் விகுதி . |
| இயல் | தன்மை ; தகுதி ; சுகுமாரதை ; ஒழுக்கம் ; உழுவலன்பு ; செலவு ; ஒப்பு ; இயற்றமிழ் ; இலக்கணம் ; நூல் ; நூலின் பகுதி ; திவ்வியப் பிரபந்தத்தைக் குழுவாக நின்று ஓதுகை ; மாறுபாடு ; சாயல் ; பெருமை . |
| இயல்பளவை | சொல்லின் , பொருளைச் சந்தர்ப்பத்தினால் துணிந்து உணர்கை . |
| இயல்பாயிருத்தல் | இயற்கையாய் உள்ளபடி அமைந்திருத்தல் ; செல்வாக்கோடு இருத்தல் . |
| இயல்பு | தன்மை ; இலக்கணம் ; ஒழுக்கம் ; நற்குணம் ; நேர்மை ; முறை ; வரலாறு ; பிரமாணம் பத்தனுள் ஒன்று . |
| இயல்புகணம் | உயிர்க்கணம் மென்கணம் இடைக்கணங்கள் . |
| இயல்புநயம் | ஒற்றுமை முதலிய நயங்கள் நான்கனுள் ஒன்று . |
| இயல்புபுணர்ச்சி | மாறுபாடின்றிச் சொற்கள் ஒன்றோடொன்று இயைந்து நிற்றல் . |
| இமிழிசை | இயமரம் ; ஒருவகைப் பறை . |
| இமை | கண்ணிமை ; கண்ணிமைக்கை ; கண்ணிமைப் பொழுது ; கரடி ; மயில் . |
| இமைக்குரு | இமையில் உண்டாகும் சிறுகட்டி . |
| இமைகொட்டுதல் | இமைத்தல் , கண்ணிதழ் சேர்தல் . |
| இமைத்தல் | இமைகொட்டுதல் ; ஒளிவிடுதல் ; சுருங்குதல் ; தூங்குதல் . |
| இமைப்பளவு | கண்ணிமைப்பொழுது . |
| இமைப்பிலர் | காண்க : இமையவர் . |
| இமைப்பு | இமைப்பளவு ; விளக்கம் . |
| இமைப்பொழுது | கண் இமைக்கும் நேரம் , கணப்பொழுது . |
| இமைபிறத்தல் | இமைத்தல் . |
| இமைபொருந்துதல் | உறங்குதல் . |
| இமையம் | காண்க : இமயம் . |
| இமையவர் | தேவர் . |
| இமையாடுதல் | கண்கொட்டுதல் . |
| இமையார் | காண்க : இமையவர் . |
| இமையோர் | காண்க : இமையவர் . |
| இமையிலி | கருடன் . |
| இயக்கசத்துவம் | பத்துச் சத்துவங்களுள் இயக்கசாதிப் பெண்ணின் சத்துவம் . |
| இயக்கம் | இயங்குகை ; குறிப்பு ; வழி ; இசைப் பாட்டுவகை ; சுருதி ; பெருமை ; மலசலங்கள் ; வடதிசை ; கிளர்ச்சி ; பரப்புகை . |
| இயக்கர் | கந்தருவர் , பதினெண் கணத்துள் ஒரு கணத்தார் . |
|
|
|