சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| அட்சம் | உருத்திராக்கம் ; கண் ; பூகோள இடக்கணக்கு . |
| அட்சய | அறுபதாண்டுக் கணக்கில் இறுதி ஆண்டு . |
| அட்சயதூணி | அம்பு குறைவின்றி இருக்கும் உறை ; அருச்சுனன் அம்புக் கூடு . |
| அட்சயபாத்திரம் | இரக்கும் கலன் ; அள்ள அள்ளக் குறையாத உணவுக்கலம் . |
| அட்சயம் | கேடின்மை , அழியாத் தன்மை . |
| அட்சயன் | அழிவற்றவன் , அமரன் , கடவுள் . |
| அட்சரகணிதம் | இயற்கணிதம் ; எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை . |
| அட்சரசுத்தி | எழுத்துத் திருத்தம் ; ஒலிப்புத் திருத்தம் . |
| அட்சரதேவி | கலைமகள் . |
| அட்சரம் | காண்க : அக்கரம் . |
| அட்சரன் | காண்க : அக்கரன் . |
| அட்சராப்பியாசம் | எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் . |
| அட்சராரம்பம் | எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் . |
| அட்சாம்சம் | பூகோள இடக்கணக்கைப் பற்றிய பகுதி . |
| அட்சி | கண் ; கண்ணுடையாள் . |
| அட்டக்கரி | மிகவும் கறுப்பு . |
| அட்டக்கறுப்பு | மிகவும் கறுப்பு . |
| அட்டகம் | எட்டன் கூட்டம் , எட்டன் தொகுதி கொண்டது ; சிற்றிலக்கியங்களுள் ஒன்று . |
| அட்டகருமக்கரு | மாயவித்தைக் கூட்டுச்சரக்குகள் . |
| அட்டகாசம் | பெருஞ்சிரிப்பு ; ஆரவாரம் ; ஆர்ப்பாட்டம் . |
| அட்டகிரி | எட்டுமலைகள் ; அவை : இமயம் , மந்தரம் கயிலை , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலம் , கந்தமாதனம் . |
| அஞ்சலினவர் | பாஞ்சராத்திர மதத்தவர் . |
| அஞ்சளித்தல் | ஆதரவு தருதல் , அடைக்கலங் கொடுத்தல் . |
| அஞ்சற்குளச்சி | நச்சுப்பொருள்வகையுள் ஒன்று ; குங்கம பாடாணம் . |
| அஞ்சறைப்பெட்டி | ஐந்து அறைகளை உடைய பெட்டி ; கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி . |
| அஞ்சன் | மன்மதன் ; திருமால் ; உயர்ந்தோன் ; பரமான்மா . |
| அஞ்சனக்கலிக்கம் | மறைபொருளைக் காட்டும் மந்திர மை . |
| அஞ்சனக்காரன் | மந்திரக்காரன் ; மந்திர மையிடுவோன் . |
| அஞ்சனத்திரயம் | மறைபொருளைக் காட்டும் ஆற்றல் வாய்ந்த பூதாஞ்சனம் , சோராஞ்சனம் , பாதாளஞ்சனம் என்னும் மூவகை மைகள் . |
| அஞ்சனதார் | காண்க : அஞ்சனாதார் . |
| அஞ்சனம் | மை ; கண்ணுக்கிடும் மை ; கறுப்பு ; இருள் ; ஆணவமலம் ; திசையானை எட்டனுள் மேற்றிசையானை . |
| அஞ்சனவண்ணன் | கருநிறத்தன் ; திருமால் . |
| அஞ்சனவித்தை | மறைந்த பொருளை மையிட்டுக் காண்பிப்பது . |
| அஞ்சனவெற்பு | திருவேங்கடமலை . |
| அஞ்சனா | விளைச்சல் மதிப்பீடு . |
| அஞ்சனாதார் | விளைச்சலை மதிப்பிடுபவர் . |
| அஞ்சனாவதி | வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை . |
| அஞ்சனி | காயாமரம் ; நாணற்புல் . |
| அஞ்சனை | அனுமன் தாய் ; வடதிசை யானைக்குப் பெண்யானை . |
| அஞ்சாமை | பயப்படாமை , திண்மை . |
| அஞ்சாரப்பெட்டி | காண்க : அஞ்சறைப்பெட்டி . |
| அஞ்சி | தபால் ; அதியமான் நெடுமான் அஞ்சி ; தலைவன் . |
| அஞ்சிக்கை | அச்சம் . |
| அஞ்சிகம் | கண் , விழி , நாணயம் . |
| அஞ்சித்தல் | பூசை புரிதல் ; அடைதல் . |
| அஞ்சிதம் | உண்டாதல் ; தலை சாய்த்தல் ; நல்லறிவு ; பூசித்தல் ; பொருந்தல் ; வணக்கம் . |
| அஞ்சிதமுகம் | வருத்தம் பொறாது இருதோள் மீது தலை சாய்த்தல் . |
| அஞ்சில் | அழகிய தகட்டு வடிவான பொன் அணிகலன் . |
| அஞ்சிலோதி | அழகிய சிலவாகிய கூந்தல் . |
| அஞ்சு | ஐந்து ; அச்சம் ; ஒளி . |
| அஞ்சுகம் | கிளி . |
| அஞ்சுதகுதல் | அச்சமுண்டாதல் . |
| அஞ்சுதல் | பயப்படுதல் . |
| அஞ்சுபதம் | காண்க : அஞ்செழுத்து . |
| அஞ்சுபயம் | குடிகளுக்கு அரசனாலும் , அவன் உறவினராலும் பகைவராலும் திருடராலும் , விலங்கு முதலிய உயிர்களாலும் உண்டாகும் ஐவகை அச்சம் , |
| அஞ்சுமாலி | சூரியன் . |
| அஞ்சுமான் | சூரியன் . |
| அஞ்சுருவாணி | காண்க : அச்சாணி . |
| அஞ்சுவர்ணத்தோன் | துத்தநாகம் ; ஐந்துவகையான நிறங்கொண்டவன் . |
| அஞ்செவி | அகஞ்செவி , உட்செவி ; அழகியகாது . |
| அஞ்செழுத்து | பஞ்சாக்கரம் , ' நமசிவாய ' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் . |
| அஞ்ஞதை | அறியாமை . |
| அஞ்ஞன் | அறிவில்லாதவன் . |
| அஞ்ஞாதசுகிருதம் | தன்னை அறியாமல் வந்த புணணியம் . |
| அஞ்ஞாதம் | பிறர் அறியாமை , மறைவு , அறியப்படாதது . |
| அஞ்ஞாதவாசம் | பிறிர் அறியாமல் மறைந்து வாழ்தல் . |
| அஞ்ஞானம் | அறிவின்மை ; ஆணவமலம் . |
| அஞ்ஞானி | அறிவிலி . |
| அஞ்ஞை | அன்னை , தாய் , அறிவில்லான் . |
| அஞர் | துன்பம் ; நோய் ; சோம்பல் ; வழுக்கு நிலம் ; அறிவிலார் . |
| அஞல் | கொசு ; மின்மினி ; நுளம்பு . |
| அஞலம் | கொசு ; மின்மினி ; நுளம்பு . |
| அஞன் | காண்க : அஞ்ஞன் . |
| அட்கெனல் | கடிய ஓசைக் குறிப்பு . |
| அட்சதை | அக்கதை ; மங்கலவரிசி , அறுகரிசி ; வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி . |
|
|
|