சொல்
|
அருஞ்சொற்பொருள் |
அக்குரு | விரல் ; கைந்நுனி . |
அக்குரோணி | பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு . |
அக்குல்லி | காண்க : அஃகுல்லி . |
அக்குவடம் | சங்குமணிமாலை . |
அக்குள் | கக்கம் , கமுக்கட்டு , தோளின் பொருத்து உள்ளிடம் . |
அக்குளு | அக்குள் ; கூச்சம் . |
அக்குளுத்தல் | கூச்சமுண்டாக்குதல் . |
அக்கை | காண்க : அக்கா ( ள் ) . |
அக்கோ | வியப்பு இரக்கச் சொல் . |
அக்கோடம் | கடுக்காய் . |
அக்கோலம் | தேற்றாங்கொட்டை . |
அகக்கண் | உள்ளறிவு ; ஞானம் . |
அகக்கரணம் | உள்ளம் , மனம் . |
அகக்களி | மனமகிழ்ச்சி . |
அகக்காழ் | மரத்தின் உள்வயிரம் ; ஆண்மரம் . |
அகக்கூத்து | முக்குணம் சார்ந்த நடிப்பு . |
அகங்கரித்தல் | செருக்குக்கொள்ளுதல் . |
அகங்கரிப்பு | செருக்கு , அகங்காரம் . |
அங்காரக்கிரந்தி | ஆணவமறைப்பு ; தத்துவங்களைத் தான் எனக் கொள்ளும் உயிரின் தொடர்பு . |
அகங்காரம் | ' நான் ' என்னும் செருக்கு , ஆணவம் ; உட்கரணம் நான்கனுள் ஒன்று . |
அகங்காரி | செருக்குள்ளவன் ( ள்) . |
அகங்காழ் | காண்க : அகக்காழ் . |
அகங்கை | ( அகம் - கை ) உள்ளங்கை . |
அகச்சமயம் | சைவசமயத்தின் உட்பிரிவுகள் ; அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் . |
அகச்சுட்டு | சொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு . |
அகச்சுவை | அகப்பொருள் நெறிக்குரிய சுவை ; சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு . |
அகசன் | கேது என்னும் கோள் . |
அகசியம் | ஏளனச்சிரிப்பு ; வேடிக்கை ; பகடி . |
அகசு | பொழுது ; பகல் ; இராப்பகல் கொண்டநாள் . |
அகசை | மலையில் பிறந்தவள் , பார்வதி . |
அகடச்சக்கரம் | வயிற்றைச் சுற்றிக் கட்டும் உதரபந்தனம் என்னும் அணி , இடுப்பணி , அரைப்பட்டிகை ; கொடுங்கோல் மன்னன் . |
அகடம் | பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
அகடியம் | பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
அகடவிகடம் | சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் . |
அகடிதகடனாசாமர்த்தியம் | செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை . |
அகடிதம் | நிறைவேற்றற்கரியது . |
அகடு | உள் ; வயிறு ; நடு ; மேடு ; நடுவுநிலை ; பொல்லாங்கு . |
அகடூரி | வயிற்றால் ஊர்ந்து செல்வது , பாம்பு . |
அகண் | அண்மை , பக்கம் . |
அகண்டபரிபூரணம் | எங்கும் நிறைந்திருக்கை ; வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள் . |
அகண்டம் | துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் . |
அகண்டிதம் | துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் . |
அகண்டதீபம் | எப்பொழுதும் எரியும் விளக்கு , நந்தாவிளக்கு . |
அகண்டாகண்டன் | பரம்பொருள் ; எதற்கும் அஞ்சாதவன் . |
அக்கிலிப்பிக்கிலி | குழப்பம் . |
அக்கினி | தீ ; தீக்கடவுள் ; செங்கொடிவேலி ; நவச்சாரம் ; மூத்திரம் ; வெடியுப்பு . |
அக்கினிக்கட்டு | நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை . |
அக்கினிக்கருப்பன் | நெருப்பிலிருந்து தோன்றியவன் , முருகன் . |
அக்கினிகாரியம் | ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு . |
அக்கினிகோணம் | தென்கிழக்கு மூலை . |
அக்கினிகோத்திரம் | நாள்தோறும் செய்யும் தீவேள்வி . |
அக்கினிசகன் | அக்கினி நண்பன் , காற்று . |
அக்கினிசகாயன் | அக்கினி நண்பன் , காற்று . |
அக்கினிசாந்தி | வேள்வி , ஓமம் . |
அக்கினிட்டி | நெருப்பிடு கலம் . |
அக்கினிட்டோமம் | சோமவேள்வி ; தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை . |
அக்கினித்தம்பனம் | நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை . |
அக்கினித்திராவகம் | தீப் போலப் பட்ட இடத்தை வேகச் செய்யும் ஒருவகை நீர்மப் பொருள் , நைட்ரிக் அமிலம் . |
அக்கினிதிசை | தென்கிழக்கு . |
அக்கினிதேவன் | தீக் கடவுள் . |
அக்கினிநட்சத்திரம் | கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
அக்கினிநாள் | கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
அக்கினிப்பிரவேசம் | தீப் பாய்தல் ; உடன்கட்டையேறுதல் . |
அக்கினிப்பிழம்பு | நெருப்புச்சுடர் , தீக்கொழுந்து , தீத்திரள் . |
அக்கினிபாதை | தீயால் விளையும் கேடு . |
அக்கினிமணி | காண்க : சூரியகாந்தக்கல் . |
அக்கினிமரம் | காட்டுப்பலா . |
அக்கினிமாந்தம் | ஒருவகை நோய் . |
அக்கினிமுகம் | சேங்கொட்டை . |
அக்கினிமூலை | காண்க : அக்கினிதிசை . |
அக்கீம் | முகம்மதிய மருத்துவன் . |
அக்கு | எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் . |
அக்குசை | சமணக் கைம்பெண் துறவி . |
அக்குத்தொக்கு | ஒட்டுப்பற்று , தொடர்பு . |
அக்குதார் | உரிமையாளன் . |
![]() |
![]() |
![]() |