சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இரசக்களிம்பு | புண் ஆற்றும் மருந்துவகை . |
| இரசக்கிணறு | காண்க : இரசக்குழி . |
| இரசக்குடுக்கை | பாதரசம் அடைக்கும் குப்பி . |
| இரசக்குழி | பாதரசம் எடுக்கும் சுரங்கம் . |
| இரசகந்தாயம் | வரி ; நிலக்கொழுமை . |
| இரசகம் | பீர்க்கு . |
| இரசகருப்பூரம் | ஒருவகை மருந்துச் சரக்கு . |
| இரசகன் | வண்ணான் . |
| இரசகி | வண்ணாத்தி . |
| இரசகுண்டு | அலங்காரமாகத் தொங்கவிடும் இரசம் பூசிய கண்ணாடி உருண்டை . |
| இரசகுளிகை | இரசத்தினால் செய்த மாத்திரை ; சித்தர் குளிகை . |
| இரசச்சுண்ணம் | பூச்சுமருந்துவகை . |
| இரசசுத்தி | ஈயம் . |
| இரசதகிரி | வெள்ளிமலையாகத் தோற்றம் பெறும் கைலாயமலை . |
| இரசதசபை | வெள்ளியம்பலம் , மதுரையிலுள்ள நடராச சபை . |
| இரசதம் | வெள்ளி ; இராசதம் ; அரைப்பட்டிகை ; பாதரசம் ; நட்சத்திரம் ; யானைத் தந்தம் ; வெள்ளை ; முத்துமாலை ; வெண்மலை ; பொன் ; அரத்தம் . |
| இரசதமணல் | வெள்ளி கலந்த மணல் . |
| இரசதாது | பாதரசம் . |
| இரசதாரை | அன்னரசம் செல்லும் குழாய் . |
| இரசதாளி | ரஸ்தாளி , ஒருவகை வாழை . |
| இரசநாதன் | காண்க : இரசதாது . |
| இரசப்பிடிப்பு | முடக்குவாதம் . |
| இரசப்புகை | பாதரசத்தின் ஆவி . |
| இரசபலம் | இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது ; தென்னை . |
| இரசபுட்பம் | காண்க : இரசகருப்பூரம் . |
| இரசம் | சுவை ; செய்யுட்சுவை ; சாறு ; பாதரசம் ; மிளகு நீர் ; இன்பம் ; வாயூறு நீர் ; வாழைவகை ; மாமரம் . |
| இரசமணி | நோய் முதலியவை நீங்கக் காப்பாக அணியப்படும் பாதரசங் கட்டிய மணி . |
| இரசமுறித்தல் | பாதரசம் செய்தல் ; உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல் . |
| இரசலிங்கம் | சாதிலிங்கம் ; சிவலிங்கவகை . |
| இரசவாதம் | தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை . |
| இரசவாதி | உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன் . |
| இரசவாழை | பேயன்வாழை . |
| இரசவைப்பு | இரசத்தால் ஆகிய மருந்து முதலியன . |
| இரசனம் | பொன் ; வெள்ளி ; நஞ்சு ; பிசின் ; பழம் ; கழாயம் ; இலைச் சாறு ; ஒலி ; உணவு ; நேயம் ; பல் . |
| இரசனா | அரத்தைவகை . |
| இரசனி | இரவு ; மஞ்சள் ; அவுரி ; செம்பஞ்சு . |
| இரசனிமுகம் | மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம் ; சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை . |
| இரசனை | சுவை ; மலர் முதலியவற்றைத் தொடுக்கை ; படையின் அணிவகை ; பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி . |
| இரசாதலம் | கீழேழ் உலகத்துள் ஒன்று . |
| இரசாதிபதி | இரசப் பொருள்களுக்கு அதிகாரியான கோள் . |
| இரசாபாசம் | சுவைக்கேடு ; சீர்கேடு . |
| இரசாயனநூல் | வேதியியல் நூல் , இயைபியல் நூல் . |
| இரசாயனம் | இரசவாதம் ; வேதியியல் , இயைபியல் ; காயசித்தி மருந்து ; நஞ்சு . |
| இரசாலம் | மாமரம் ; கரும்பு ; பலா ; கோதுமை ; குந்துருப் பிசின் ; போளம் . |
| இரசாலை | அறுகு ; சம்பாரத் தயிர் ; நா ; வெள்ளீறில் என்னும் மரவகை . |
| இரசிகம் | குதிரை ; கயமைத் தன்மை ; யானை . |
| இரசிகன் | சுவைஞன் ; காமுகன் . |
| இரசிகை | காமுகி ; நா ; மாதர் இடையணி . |
| இரசித்தல் | சுவைத்தல் ; இனித்தல் ; விரும்புதல் . |
| இரசிதநாள் | வெள்ளிக்கிழமை . |
| இரசிதம் | வெள்ளி ; பொன்னின் பூச்சு ; ஒலி ; முழக்கம் . |
| இரசுவம் | குறுகிய அளவு ; குற்றெழுத்து . |
| இரசேந்திரியம் | சுவையுணர் உறுப்பு , நாக்கு . |
| இரசை | பங்கம்பாளை ; பூமி ; ஆனைவணங்கி ; தினை ; நா . |
| இரக்கம் | அருள் ; மனவுருக்கம் ; மனவருத்தம் ; ஒலி ; ஈடுபாடு . |
| இரக்கித்தல் | காண்க : இரட்சித்தல் . |
| இரக்கை | காண்க : இரட்சை . |
| இரகசியம் | கமுக்கம் , மறைபொருள் , அந்தரங்கம் . |
| இரகிதம் | இட்டம் ; விடப்பட்டது ; நீக்கப் பட்டது . |
| இரகுநாதன் | இரகு குலத்தில் சிறந்த இராமன் . |
| இரகுவமிசம் | இரகுவின் வழிவந்தவர் ; ஒரு தமிழ் நூல் . |
| இரங்கல் | அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை . |
| இரங்கற்பா | ஒருவரின் மறைவு குறித்து வருந்திப் பாடும் பாட்டு , கையறுநிலை . |
| இரங்குகெளிறு | கெளிற்று மீன்வகை . |
| இரங்குசொல் | இழுமென இசைக்கும் சொல் . |
| இரங்குதல் | வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் . |
| இரங்கூன்மல்லி | ஒருவகைப் பூங்கொடி . |
| இரங்கொலி | முறையீடு . |
| இரங்கேசன் | அரங்கநாதன் ; திருவரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் கடவுள் . |
| இரச்சு | கயிறு . |
| இரச்சுப்பொருத்தம் | பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று . |
| இரச்சுலம் | கவண் . |
| இரச்சுவம் | குற்றெழுத்து . |
| இரச்சை | மலை மரவகை ; காப்புநாண் . |
| இரசக்கட்டு | இறுகச் செய்த பாதரசம் . |
|
|
|