இரசோகுணம் முதல் - இரண்டிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இரட்டை நாடி மிகப் பருத்த உடம்பு .
இரட்டைப் படை இரட்டிப்பு ; இரட்டைப்பட்ட எண் .
இரட்டைப் பாக்கு இரு கண்ணுள்ள பாக்கு .
இரட்டைப் பிள்ளை ஒரே கருப்பத்தினின்றும் தனித்தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர் ; இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு .
இரட்டைப் பூட்டு இருமுறை பூட்டும் பூட்டு ; பாதுகாப்புக்காக இடும் இருவேறு பூட்டு .
இரட்டைப் பூரான் சதங்கைப் பூரான் .
இரட்டை மணி அணிவகை .
இரட்டைமணிமாலை பிரபந்தவகை ; வெண்பா , கலித்துறை இரண்டும் மாறிமாறி இருபது பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறுநூல்வகை .
இரட்டையர் இரட்டைப் பிள்ளைகள் ; நகுல சகதேவர் ; இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர் .
இரட்டையாட்சி இருதிறத்தார் பகுத்துக் கொண்டு செய்யும் அரசாட்சி .
இரட்டையேணி கவை ஏணி ; ஒன்றன்மேல் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி .
இரட்டைவரி ஒரே நிலத்துக்காக அரசினருக்கும் ஊராட்சி நிறுவனங்களுக்கும் செலுத்தும் வரி .
இரட்டை விருத்தம் பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் .
இரண்டகம் இருமனம் , துரோகம் .
இரண்டறக்கலத்தல் இருபொருன் பேதமின்றி ஒன்றாதல் ; ஆன்மா இறைவனுடன் ஐக்கியமாதல் ; முத்தியடைதல் .
இரண்டாகுதல் இரு துண்டாதல் .
இரண்டாங்கட்டு வீட்டின் இரண்டாம் பகுதி .
இரண்டாங்காலம் கோயிலில் அந்திக்காப்புக்கும் அர்த்தசாமத்திற்கும் நடுவில் நடக்கும் பூசை .
இரண்டாட்டுதல் இருநெறிப்படுதல் .
இரண்டாந்தரம் முக்கியம் அல்லாதது ; நடுத்தரம் ; இடைவேளை உணவு .
இரண்டாநிலம் மேன்மாடம் .
இரண்டாம் பாட்டன் பாட்டனின் தந்தை .
இரண்டாம்போகம் இரண்டாம் முறைப் பயிர் விளைவு .
இரண்டிகை காண்க : இண்டை .
இரசோகுணம் இராசதகுணம் , முக்குணத்துள் ஒன்று ; மத்திமமான அறிவு .
இரசோபலம் இருள் ; முத்து .
இரசோனகம் வெள்ளுள்ளி .
இரஞ்சகம் துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து ; துப்பாக்கிக் காது ; மகிழ்ச்சி தருவது .
இரஞ்சகன் இயக்குகிறவன் ; சாயமூட்டுகிறவன் ; விருப்பம்வரச் செய்கிறவன் .
இரஞ்சனம் மகிழ்ச்சி தருவது ; செஞ்சாந்து .
இரஞ்சனி மஞ்சிட்டை ; கவுள் ; அவுரி ; கம்பில்லம் .
இரஞ்சிதம் இன்பமானது ; சித்திரிக்கப்பட்டது .
இரட்சகம் இரட்சிப்பு ; மீட்பு ; காத்தல் .
இரட்சகன் காப்பாற்றுபவன் ; உய்விப்பவன் .
இரட்சணம் காண்க : இரட்சகம் .
இரட்சணியசேனை கிறித்தவ சபையில் ஒரு பிரிவு .
இரட்சணியம் காப்பு ; மீட்பு .
இரட்சனை காண்க : இரட்சகம் .
இரட்சாபந்தனம் காப்புக்கட்டல் ; மந்திராட்சரயந்திரக் காப்பு .
இரட்சாபோகம் பாதுகாவல் வரி .
இரட்சாமூர்த்தி காப்புக் கடவுள் , திருமால் .
இரட்சித்தல் காத்தல் ; மீட்குதல் .
இரட்சிப்பு காப்பாற்றுகை ; உய்வு ; மீட்பு .
இரட்சை காப்பு ; காப்பாக இடுவது ; திருநீறு .
இரட்டகத்துத்தி கத்தூரிவெண்டை .
இரட்டர் இராட்டிரகூட அரசர் .
இரட்டல் இரண்டாதல் ; அசைத்தல் ; மாறி மாறி ஒலித்தல் ; யாழ் நரம்போசை .
இரட்டாங்காலி இரட்டையாகக் கிளைக்கும் மரம் .
இரட்டி இருமடங்கு ; இணைக்கை .
இரட்டித்தல் இருமடங்காக்குதல் ; திரும்பச் செய்தல் ; ஒன்று இரண்டாதல் ; மீளவருதல் ; மாறுபடுதல் ; இகழ்தல் .
இரட்டித்துச் சொல்லுதல் மீட்டுங் கூறுதல் ; இரு பொருள்படச் சொல்லுதல் .
இரட்டிப்பு இருமடங்கு .
இரட்டு இரட்டையாயிருக்கை ; ஒருவகை முருட்டுத்துணி ; ஒலி .
இரட்டுதல் இரட்டித்தல் ; மாறியொலித்தல் ; ஒலித்தல் ; அசைதல் ; வீசுதல் ; கொட்டுதல் ; தெளித்தல் .
இரட்டுமி பறைவகை .
இரட்டுறக்காண்டல் ஐயக் காட்சி ; ஒன்றை இருவேறு பொருளாகப் பார்க்கும் பார்வை .
இரட்டுறமொழிதல் ஓர் உத்தி ; இருபொருள் படச் சொல்லல் .
இரட்டுறல் சிலேடை ; இருபொருள்படுகை .
இரட்டுறுதல் இருபொருள்படுதல் ; ஐயுறுதல் ; மாறுபடுதல் .
இரட்டை இணை ; கணவன் மனைவியர் ; இரட்டைப் பிள்ளைகள் ; இரண்டு ஒன்றானது ; இரட்டை எண் ; அரையாடை மேலாடைகள் ; துப்பட்டி ; மிதுனராசி ; ஆனி மாதம் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; முத்துவகை .
இரட்டைக்கத்தி இரண்டு அலகுள்ள கத்தி .
இரட்டைக்கதவு இரண்டு பிரிவாயுள்ள கதவு .
இரட்டைக்கிளவி ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி ; இரட்டையாக நின்றே பொருள் உணர்த்துஞ் சொல் , விறுவிறுப்பு என்றாற்போல் வருவது .
இரட்டைக்குச்சி சிலம்ப வித்தைவகை .
இரட்டைக் குண்டட்டிகை கழுத்தணிவகை .
இரட்டைக் குறுக்கு மாட்டுக் குற்றவகை .
இரட்டைக்கை காண்க : இணைக்கை .
இரட்டைச்சிரட்டை இரட்டைக் கொட்டாங்கச்சி .
இரட்டைச் சின்னம் இரட்டையான ஊதுகுழல் வகை .
இரட்டைச் சுழி இரு சுழி ; ஐகாரவொலியைக்குறிக்கும் ' ¬ ' என்னும் சுழி .
இரட்டைச்சொல் இரட்டையாக வரும் குறிப்புச் சொல் .
இரட்டைத் தவிசு இருவர் இருத்தற்குரிய இருக்கை .
இரட்டைத் தாளம் தாளவகை .
இரட்டைத்தொடை ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது .
இரட்டை நாகபந்தம் சித்திரகவிவகை .