இரண்டு முதல் - இரத்தந்ததும்புதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இரணவஞ்சம் போகபூமியுள் ஒன்று .
இரணவாதம் நோய்வகை .
இரணவீரன் போர்வீரன் ; அங்காளம்மை கோயிலின் பரிவார தெய்வம் .
இரணவைத்தியம் அறுவை மருத்துவம்
இரணவைத்தியன் அறுவை மருத்துவன் .
இரணிய கர்ப்பதானம் பொற்பசுவின் வயிற்றினுள் புகுந்து வெளிவந்து அப் பசுவையே கொடையாக அளித்தல் .
இரணியகர்ப்பம் ஒரு வேள்வி ; பொன்னால் செய்த பசு வயிற்றினூடாகப் புகுந்து வெளிவரும் சடங்கு .
இரணியகர்ப்பமதம் பிரமாவே முதற்கடவுள் என்னும் சமயம் .
இரணியகர்ப்பர் பிராணனே ஆத்துமா என்னும் சார்வாகருள் ஒருசாரார் .
இரணியகர்ப்பன் பொன்முட்டையிலிருந்து பிறந்தவன் , பிரமன் .
இரணியகன் பொன்னுடையவன் .
இரணியசிராத்தம் பொன் கொடுத்துச் செய்யும் சிராத்தம் .
இரணியதானம் பொன்னைக் கொடையாகக் கொடுக்கை .
இரணியநேரம் அந்திநேரம் .
இரணியம் பொன் ; பணம் .
இரணியமரம் மரவகை .
இரணியவேளை காண்க : இரணியநேரம் .
இரத்தக்கட்டி புண்கட்டிவகை .
இரத்தக்கட்டு உதிரம் சுரக்கை .
இரத்தக் கண்ணன் கோபக் கண்ணுடையவன் .
இரத்தக்கலப்பு நெருங்கிய உறவு .
இரத்தக்கவிச்சு உதிர நாற்றம் .
இரத்தக்கழிச்சல் பேதிவகை .
இரத்தக்கனப்பு இரத்தக் கொழுப்பு .
இரத்தக்காணிக்கை போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம் .
இரத்தக்கிராணி காண்க : இரத்தக்கழிச்சல் .
இரத்தக்கொதி துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு ; காமக் கிளர்ச்சி .
இரத்தக்கொழுப்பு இரத்த நிறைவு ; மதம் ; செருக்கு .
இரத்தக்கோமாரி மாட்டுக்கு வரும் இரத்தக்கழிச்சல் நோய் .
இரத்தகம் குசும்பாப்பூ ; சிவப்புச் சீலை .
இரத்தகமலம் செந்தாமரை .
இரத்தகுமுதம் செவ்வாம்பல் ; செந்தாமரை .
இரத்தகைரவம் செவ்வாம்பல் .
இரத்தச்சிலந்தி புண்கட்டிவகை .
இரத்தச்சுரப்பு இரத்த மிகுதி ; இரத்தவூறல் ; செருக்கு .
இரத்தைச்சுருட்டை சுருட்டைப் பாம்புவகை .
இரத்தசந்தனம் செஞ்சந்தனம் .
இரத்தசந்தியகம் செந்தாமரை .
இரத்தசம்பந்தம் காண்க : இரத்தக்கலப்பு .
இரத்தசாகம் செங்கீரை .
இரத்தசாட்சி சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை ; சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுபவன் .
இரத்தசாரம் கருங்காலி .
இரத்தசூறை மீன்வகை .
இரத்ததிருட்டி சன்னிவகை .
இரத்தந்ததும்புதல் முகம் சிவந்து காட்டுதல் ; கோபத்தால் முகம் சிவத்தல் .
இரண்டு ' இரண்டு ' என்னும் எண் ; சில ; உகர எழுத்து ; மலசலம் .
இரண்டுக்குப் போதல் மலங்கழித்தல் .
இரண்டுக்குற்றது இதுவோ , அதுவோ என்னும் நிலை .
இரண்டுங்கெட்டநேரம் அந்திப்பொழுது .
இரண்டுடை இருவேறு வகையான ஆடை ; மாற்று உடை ; ' கருவேல் வெள்வேல் ' என்னும் உடைமரங்கள் .
இரண்டுபடுதல் வேறுபடுதல் ; ஒற்றுமையின்மை ; ஐயுறுதல் .
இரண்டுவவு மதி மறைவும் மதி நிறைவும் .
இரண்டெட்டில் விரைவில் .
இரண்டை கைம்பெண் .
இரண்டொன்று சில .
இரணகள்ளி கள்ளிவகை .
இரணகளம் போர்க்களம் ; பெருங்குழப்பம் .
இரணகாளம் போரை நிறுத்த ஊதும் எக்காளம் .
இரணகெம்பீரம் போரில் ஆரவாரித்தல் .
இரணங்கொடுத்தல் அடித்தல் .
இரணங்கொல்லி ஆடுதின்னாப்பாளை ; தும்பை .
இரணசங்கம் போர் வென்று ஊதும் சங்கு ; வெற்றுச் சங்கு .
இரணசன்னி புண்களால் உண்டாகும் சன்னி .
இரணசிகிச்சை காண்க : இரணவைத்தியம் .
இரணசுக்கிரன் கண்ணோய்வகை .
இரணசூரன் போர்வீரன் .
இரணத்தொடை காண்க : முரண்தொடை .
இரணதூரியம் காண்க : இரணபேரி .
இரணபத்திரகாளி துர்க்கை , போரில் வெற்றி தரும் கொற்றவை .
இரணபாதகம் கொலை ; நம்பிக்கைத் துரோகம் .
இரணபாதகன் கொலைத்தொழிற் கொடியோன் .
இரணபேரி போர்ப்பறை .
இரணபேரிகை போர்ப்பறை .
இரணம் கடன் ; போர் ; புண் ; பொன் ; மாணிக்கம் ; சுக்கிலம் ; பலகறை .
இரணரங்கம் போர்க்களம் .