சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இரதி | இலந்தை ; காந்தன் ; விருப்பம் ; புணர்ச்சி ; மன்மதன் மனைவி ; பெண்யானை ; பித்தளை . |
| இரதிக்கிரீடை | புணர்ச்சி . |
| இரதிகன் | தேரோட்டுவோன் ; தேர்க்குரியவன் . |
| இரதிகாதலன் | மன்மதன் . |
| இரத்தபோளம் | ஒருவகை மணப்பண்டம் . |
| இரத்தம் | உதிரம் ; சிவப்பு ; ஈரல் ; பவளம் ; குங்குமம் ; கொம்பரக்கு ; தாம்பிரம் . |
| இரத்தமடக்கி | உதிரம் கட்டு மருந்து . |
| இரத்தமண்டலம் | இரத்தம் பரவியிருக்கும் பகுதி ; செந்தாமரை . |
| இரத்தமண்டலி | நச்சுப்பாம்பு வகை . |
| இரத்தமாரணம் | காவிக்கல் . |
| இரத்தமேகம் | காண்க : இரத்தவெட்டை . |
| இரத்தல் | குறையிரத்தல் ; பிச்சை கேட்டல் ; வேண்டுதல் . |
| இரத்தவடி | அம்மைநோய் . |
| இரத்தவழலை | நச்சுப்பாம்புவகை . |
| இரத்தவள்ளி | செவ்வள்ளி என்னும் வள்ளிக் கொடிவகை . |
| இரத்தவிந்து | மாணிக்க வகையாகிய குருவிந்தம் . |
| இரத்தவிரியன் | பாம்புவகை . |
| இரத்தவீசம் | மாதுளை . |
| இரத்தவுதிரி | மாட்டு நோய்வகை . |
| இரத்தவெட்டை | இரத்தம் கலந்து மூத்திரம் வெளிப்படும் நோய்வகை . |
| இரத்தவோட்டம் | இரத்தம் உடலெங்கும் செல்லுகை . |
| இரத்தாசயம் | இதயம் . |
| இரத்தாட்சி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தெட்டாம் ஆண்டு . |
| இரத்தாதிசாரம் | சீதபேதிவகை . |
| இரத்தாம்பரம் | செவ்வாடை ; மரவகை . |
| இரத்தி | இத்தி ; மரவகை ; இலந்தை . |
| இரத்திரி | இத்தி ; மரவகை ; இலந்தை . |
| இரத்தினகசிதம் | மணி இழைக்கப்பட்டது . |
| இரத்தினகம்பளம் | சித்திரக் கம்பளம் . |
| இரத்தினகம்பளி | சித்திரக் கம்பளம் . |
| இரத்தினச்சுருக்கம் | சில சொற்களால் பெரும் பொருளை விளக்குதல் :அழகுறச் சுருங்கியது . |
| இரத்தினசபை | திருவாலங்காட்டில் நடராசர் எழுந்தருளியிருக்கும் மணியம்பலம் . |
| இரத்தினசிரசு | 393 சிகரங்களையும் 50 மேல்நிலைக் கட்டுகளையுமுடைய கோயில் . |
| இரத்தினத்திரயம் | சமண சமயத்தார் போற்றும் மும்மணிகள் ; அவை : நல்லிறவு , நற்காட்சி , நல்லொழுக்கம் . |
| இரத்தினதீவம் | இலங்கை . |
| இரத்தினப்பிரத்தம் | கைலாயத்தின் தாழ்வரை . |
| இரத்தினப்பிரபை | ஏழு நரகத்துள் ஒன்று ; மகளிர் அணிவகையில் ஒன்று . |
| இரத்தினப்பரீட்சை | அறுபத்து நான்கு கலையுள் மணிகளின் இயல்பறியும் வித்தை . |
| இரத்தினம் | மணி ; அரத்தை . |
| இரத்தினமாலை | மணிவடம் . |
| இரத்தினாகரம் | மணிகளுக்கு இருப்பிடமானது ; கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடல் . |
| இரத்தினி | பிடிமுழம் ; முன்கைப் பேரெலும்பு . |
| இரத்துதல் | காண்க : இரற்றுதல் . |
| இரத்தை | சத்திமூர்த்தங்களுள் ஒன்று ; மஞ்சிட்டிவேர் . |
| இரத்தோற்பலம் | செங்குவளை ; செந்தாமரை . |
| இரதகம் | இத்திமரம் . |
| இரதகுளிகை | காண்க : இரசகுளிகை . |
| இரதசத்தமி | மாசிமாதத்து வரும் வளர்பிறை ஏழாம் நாள் . |
| இரதசப்தமி | மாசிமாதத்து வரும் வளர்பிறை ஏழாம் நாள் . |
| இரதபதம் | புறா . |
| இரதபந்தம் | சித்திரகவிவகை , தேர்போல அமையும் பாட்டு . |
| இரதபரீட்சை | தேர் செலுத்தும் கலை , அறுபத்துநான்கு கலையுள் ஒன்று . |
| இரதம் | புணர்ச்சி ; தேர் ; பல் ; சாறு ; அன்னரசம் ; சுவை ; இனிமை ; வாயூறு நீர் ; வண்டு ; பாதரசம் ; இரசலிங்கம் ; பாவனை ; அரைஞான் ; மாமரம் ; கால் ; உடல் ; வஞ்சிமரம் ; வாகனம் ; எழுதுவகை ; அனுராகம் ; நீர் ; ஏழு தாதுக்களுள் ஒன்று ; வலி ; நஞ்சு ; இத்தி . |
| இரதரேணு | பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை . |
| இரதன் | கண் ; கிளி . |
| இரதனம் | அரைஞாண் . |
| இரதனை | அரத்தை ; நா . |
| இரதாங்கம் | தேர்க்கால் ; சக்கரவாகப் புள் . |
| இரதாரூடன் | தேரூர்வோன் ; தேர் செலுத்துவோன் . |
| இரத்தநரம்பு | இரத்தக் குழல் . |
| இரத்தப்பலம் | ஆலமரம் ; ஆலம்பழம் . |
| இரத்தப்பழி | கொலை ; கொலைக்குக் கொலை . |
| இரத்தப்பிரமேகம் | காண்க : இரத்தவெட்டை . |
| இரத்தப்பிரவாகம் | உதிரப் பெருக்கு . |
| இரத்தப்பிரியன் | கொலை விருப்புடையோன் . |
| இரத்தப்புடையன் | பாம்புவகை . |
| இரத்தப்பெருக்கு | காண்க : இரத்தப்பிரவாகம் . |
| இரத்தபலி | உதிர நைவேத்தியம் ; கொலை . |
| இரத்தபலை | கோவைப்பழம் . |
| இரத்தபாரதம் | சாதிலிங்கம் . |
| இரத்தபிண்டம் | சீனமல்லிகை . |
| இரத்தபித்தம் | உதிரம் கெட்டொழுகும் ஒரு நோய் ; ஆடாதோடை . |
| இரத்தபிந்து | வயிரக் குற்றவகை ; இரத்த விந்து . |
| இரத்தபீனசம் | மூக்கிலிருந்து இரத்தம் காணும் நோய் . |
| இரத்தபூடம் | முள்ளிலவு . |
|
|
|