சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இரவுத்திரம் | காண்க : இரௌத்திரம் . |
| இரவுத்திரியம் | சிவதீக்கை . |
| இரவுபகல் | இராக்காலமும் பகற்காலமும் |
| இரவுரவம் | காண்க : இரௌரவம் |
| இரவெரி | சோதி விருட்சம் , இரவில் ஒளிமயமாக விளங்குகின்ற ஒரு மரவகை . |
| இரவேசு | தளிர் வெற்றிலை . |
| இரவை | நுட்பமான பொருள் ; கோதுமைக் குறுநொய் ; வயிரம் ; துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு . |
| இரவைக்கு | இராப்பொழுதுக்கு . |
| இரவைசல்லா | மெல்லிய துணி . |
| இரவோன் | இரவலன் ; சந்திரன் . |
| இரளி | கொன்றை . |
| இரற்றுதல் | அரற்றுதல் ; பேசலால் எழும் ஒலி ; ஒலித்தல் ; சத்தமிடுதல் . |
| இரா | இரவு |
| இராக்கடைப்பெண்டிர் | பொதுமகளிர் |
| இராக்கதம் | எண்வகை மணங்களுள் ஒன்று , தலைமகளை வலிதிற் கொள்ளும் மணம் . |
| இராக்கதன் | அரக்கன் |
| இராக்கதி | அரக்கி ; சன்னக் கச்சோலம் |
| இராக்கதிர் | சந்திரன் . |
| இரதித்தல் | காண்க : இரசித்தல் . |
| இரதிபதி | காண்க : இரதிகாதலன் . |
| இரதோற்சவம் | தேர்த்திருவிழா . |
| இரந்திரம் | துளை ; வெளி ; ஜன்மலக்கினம் ; இரகசியம் ; சுருங்கை . |
| இரந்துண்ணி | பிச்சைக்காரன் . |
| இரந்தை | காண்க : இலந்தை . |
| இரப்பாளன் | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
| இரப்பாளி | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
| இரப்பான் | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
| இரப்பு | வறுமை ; பிச்சை ; யாசிக்கை . |
| இரப்புணி | காண்க : இரந்துண்ணி . |
| இரம்பக்கல் | குருந்தக்கல் . |
| இரம்பம் | கத்தூரி விலங்கு ; மரமறுக்கும் வாள் . |
| இரம்பிகம் | மிளகு . |
| இரம்பிலம் | மிளகு . |
| இரம்பை | இரம்பம் ; கத்தூரி விலங்கு ; தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி . |
| இரம்மியம் | மகிழ்ச்சி தருவது ; விரும்பத்தக்கது ; அழகிது . |
| இரமடம் | பெருங்காயம் . |
| இரமணம் | இன்புறச் செய்கை ; இன்பம் விளைப்பது ; கழுதை ; காமசேட்டை ; சுரதவிளையாட்டு . |
| இரமணன் | கணவன் ; தலைவன் ; மன்மதன் . |
| இரமணியம் | இன்பஞ்செய்வது ; சரச விளையாட்டு . |
| இரமணீயம் | இன்பஞ்செய்வது ; அழகுள்ளது . |
| இரமதி | காகம் ; காமி ; காலம் ; மன்மதன் . |
| இரமா | திருமகள் ; இன்பந்தருபவள் . |
| இரமாப்பிரியம் | தாமரை . |
| இரமாபதி | திருமால் . |
| இரமித்தல் | மகிழ்தல் ; புணர்தல் . |
| இரமியம் | மனநிறைவு ; அழகு . |
| இரமியவருடம் | உலகின் பகுதிகளுள் ஒன்று , ஒன்பான் கண்டத்துள் ஒன்று . |
| இரமை | திருமகள் ; செல்வம் ; மனைவி . |
| இரலை | கலைமான் ; புல்வாய் ; துத்தரி என்னும் ஊதுகொம்பு ; அசுவினி நாள் . |
| இரவச்சம் | மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை . |
| இரவணம் | ஒட்டகம் ; குயில் ; வண்டு ; கழுதைகத்துகை ; வெண்கலம் ; பரிகாசம் பண்ணுதல் ; வெப்பம் . |
| இரவதம் | குயில் . |
| இரவம் | ஒலி ; இருள்மரம் . |
| இரவரசு | சந்திரன் . |
| இரவல் | யாசகம் ; திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள் . |
| இரவலன் | பரிசில் விரும்புவோன் ; யாசகன் . |
| இரவாளன் | பரிசில் விரும்புவோன் ; யாசகன் . |
| இரவற்குடி | குடிக் கூலியின்றிக் குடியிருக்கும் குடும்பம் ; அடுத்து வாழுங் குடும்பம் . |
| இரவற்சோறு | பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு ; ஒட்டுண்ணிப் பிழைப்பு . |
| இரவறிவான் | சேவற்கோழி . |
| இரவன் | சந்திரன் . |
| இரவி | சூரியன் ; மூக்கின் வலத்தொளை ; மலை ; எருக்கு ; வாணிகத் தொழில் . |
| இரவிக்கை | முலைக்கச்சு ; மாதர் உடைவகை . |
| இரவிகன்னம் | பூமிக்கும் சூரியனுக்குமுள்ள தொலைவு . |
| இரவிகாந்தம் | சூரியகாந்தக்கல் ; தாமரை . |
| இரவிகுலம் | சூரியமரபு . |
| இரவிகேந்திரம் | அணித்தான பாதையில் வரும் சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தொலைவு . |
| இரவிநாள் | இரேவதி நாள் . |
| இரவிமது | வெள்ளி . |
| இரவிமைந்தர் | அசுவினிதேவர் . |
| இரவில்திரிவோன் | அரக்கன் . |
| இரவிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
| இரவிவிக்கேபம் | கிரகணத்தில் சூரியன் சாய்வு வழியில் இருத்தல் . |
| இரவு | இராத்திரி ; மஞ்சள் ; இருள்மரம் ; இரத்தல் ; இரக்கம் ; பன்றிவாகை . |
| இரவுக்குறி | இரவிலே தலைவனும் தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம் . |
|
|
|