சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இராசசிங்கம் | அரசரேறு . |
| இராசசின்னம் | அரசர் சின்னம் ; அரசனுக்குரிய முடி , குடை , முரசு , கொடி முதலிய உறுப்புகள் . |
| இராசசூயம் | வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி ; தாமரை . |
| இராசசேகரன் | அரசர் தலைவன் . |
| இராசசேவை | அரசனுக்குச் செய்யும் பணி ; அரசனை நேரிற்காணல் . |
| இராசத்துவம் | அரசன் தன்மை . |
| இராசத்துவாரம் | அரண்மனை வாயில் ; அரசவை . |
| இராசதண்டம் | அரசனால் விதிக்கப்படும் தண்டனை . |
| இராசதண்டனை | அரசனால் விதிக்கப்படும் தண்டனை . |
| இராசதந்தம் | முன்வாய்ப் பல் |
| இராசதந்திரம் | அரசியல் ; அரசியல் நூல் . |
| இராசதபுராணம் | பிரமனைத் துதிக்கும் புராணத்தொகுதி ; அவையாவன ; பிரமம் , பிரமாண்டம் , பிரம வைவர்த்தம் , மார்க்கண்டேயம் , பவிடியம் , வாமனம் . |
| இராசதம் | காண்க : இரசோகுணம் ; அரச பதவி . |
| இராசதாலம் | கமுகு . |
| இராசதானம் | தலைநகர் ; |
| இராசதானி | தலைநகர் ; மாநிலம் . |
| இராசதுரோகம் | அரசர்க்கு எதிராகச் செய்யும் செயல் . |
| இராசநாகம் | நாகப்பாம்புவகை . |
| இராசநீதி | அரசன் அறநெறி . |
| இராசநோக்கம் | அரசன் மனப்போக்கு ; அரசன்கருணை . |
| இராசநோக்காடு | கடைசியான மகப்பேற்று வலி . |
| இராசப்பிரதிநிதி | அரசனுக்குப் பதிலாள் . |
| இராசபக்தி | அரசரிடம் வைக்கும் உண்மை அன்பு . |
| இராசபஞ்சகம் | இராச பயம் . |
| இராசபட்டம் | இராசாதிகாரம் ; ஒருவகைத் தலைப்பாகை ; முடிசூட்டு . |
| இராசபத்திரம் | அரசனுடைய ஆணை . |
| இராசபத்தினி | அரசி , அரசன் மனைவி . |
| இராக்கிடைப்பெண்டிர் | காண்க : இராக்கடைப்பெண்டிர் . |
| இராக்கினி | அரசன் மனைவி ; அரசி . |
| இராக்குருடு | மாலைக்கண் . |
| இராகங்கலத்தல் | ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல் . |
| இராகதத்துவம் | அராக தத்துவம் ; சுத்தாசுத்த தத்துவங்களுள் ஒன்று . |
| இராகப்புள் | கின்னரப் பறவை . |
| இராகம் | பண் ; ஆசை ; இராக தத்துவம் ; நிறம் ; சிவப்பு ; கீதம் . |
| இராகம்விராகம் | விருப்பு வெறுப்பு , வேண்டுதல் வேண்டாமை . |
| இராகமாலிகை | ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்துவரப் பாடும் பண்தொகுதி . |
| இராகமெடுத்தல் | ஆலாபனஞ் செய்தல் . |
| இராகவம் | திமிங்கிலத்தை விழுங்கவல்ல பெரிய மீன் . |
| இராகவர்த்தனி | முப்பத்திரண்டாவது மேளகர்த்தா . |
| இராகவன் | இரகு வம்சத்தில் தோன்றியவனான இராமன் . |
| இராகவி | ஆனைநெருஞ்சி . |
| இராகவிண்ணாடகம் | சரக்கொன்றை . |
| இராகவிராகம் | வேண்டுதல் வேண்டாமை . |
| இராகவேகம் | ஆசை மிகுகை . |
| இராகாதனம் | யோகாசனவகை . |
| இராகி | பற்றாசு ; கேழ்வரகு . |
| இராகினி | வெற்றிலை |
| இராகு | ஒன்பது கோள்களுள் ஒன்று ; கரும்பாம்பு ; கோமேதகம் . |
| இராகுகாலம் | இராகுவுக்குரிய வேளை ; ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகையளவு கொண்டுவரும் தீய நேரம் . |
| இராகுமண்டலம் | பூமியின் சாயை . |
| இராகூச்சிட்டம் | வெண்காயவகை . |
| இராச்சியபரிபாலனம் | நாட்டை ஆளுகை ; அரசாட்சி . |
| இராச்சியபாரம் | அரசாளும் பொறுப்பு . |
| இராச்சியம் | அரசாளும் நாடு ; உலகு ; ஆளுகை . |
| இராச்சியலட்சுமி | அரசச் செல்வம் . |
| இராச்சொல்லாதது | ஊசி ; வசம்பு ; பாம்பு . |
| இராச்சொல்லாதவன் | அம்பட்டன் . |
| இராசக்கிருகம் | அரண்மனை . |
| இராசகரம் | அரண்மனை ; அரசாங்கம் |
| இராசகற்பனை | அரசனின் ஆணை . |
| இராசகன்னி | அரசிளம்பெண் ,இளவரசி . |
| இராசகனி | எலுமிச்சம்பழம் |
| இராசகாரியம் | அரசியல் ; அரசர்க்குச் செய்யும் ஊழியம் ; மேலான செயல் . |
| இராசகீயம் | அரசனுக்குரியது ; அரசாங்கத்தொடர்புடையது . |
| இராசகீரி | வெண்கீரி . |
| இராசகுஞ்சரம் | அரசுவா ; அரசர் தலைவன் . |
| இராசகுமாரன் | அரசன் புதல்வன் ; இளவரசன் . |
| இராசகுலம் | அரச குடும்பம் . |
| இராசகேசரி | சோழ மன்னர்களுள் சிலர் கொண்டிருந்த பட்டப் பெயர் ; சோழர்காலத்து அளவு கருவி . |
| இராசகோலம் | அரசன் திருவோலக்க உடை . |
| இராசகோழை | காசநோய்வகை . |
| இராசசக்கரம் | அரசாணை . |
| இராசசபை | அரசவை . |
| இராசசம் | காண்க : இரசோகுணம் . |
| இராசசாரசம் | மயில் . |
|
|
|