இராசபதவி முதல் - இராசிப்பொருத்தம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இராசவட்டம் அரசியற் செய்தி ; இராசதோரணை .
இராசவத்தனம் வைடூரியவகை .
இராசவமிசம் அரசர் குலம் .
இராசவர்க்கம் அரச மரபு ; அரச குலத்தார் .
இராசவரிசை அரசர்க்குச் செய்யும் சிறப்பு .
இராசவல்லபன் அரசனிடத்துச் செல்வாக்குள்ளவன் .
இராசவள்ளி கொடிவகை ; வள்ளிவகை .
இராசவாகனம் அரசன் ஊர்தி ; சிவிகை ; கோவேறு கழுதை .
இராசவாய்க்கால் தலைமையான நீர்க்கால் .
இராசவாழை குலை ஒன்றுக்கு ஆயிரம் காய்கள் காய்க்கும் வாழைவகை .
இராசவிசுவாசம் அரச பக்தி .
இராசவிரணம் காண்க : இராசபிளவை .
இராசவிருட்சம் கொன்றைமரம் .
இராசவீதி அரசர் உலாவருவதற்குரிய பெருந்தெரு .
இராசவைத்தியம் பத்தியம் இல்லாத மருத்துவம் .
இராசன் அரசன் ; சந்திரன் ; தலைவன் ; இந்திரன் ; இயக்கன் .
இராசனை வெள்ளைப்பூண்டு .
இராசா அரசன் ; ஒரு தெலுங்கச் சாதி .
இராசாக்கினை அரசன் ஆணை ; அரசதண்டனை .
இராசாங்கம் அரசுக்குரிய உறுப்புகள் ; அரசாட்சி .
இராசாணி அரசி .
இராசாத்தி அரசி .
இராசாதனம் முருக்கு ; முரள் ; அரியணை ; கிங்கிணிப்பாலை .
இராசாதிகாரம் அரசனுக்குரிய அதிகாரம் .
இராசாமந்திரி ஒரு விளையாட்டு .
இராசாவர்த்தம் காண்க : இராசவத்தனம் .
இராசாளி பறவைவகை ; வல்லூறு ; பைரி ; பறவைமாநாகம் .
இராசாளியார் கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று .
இராசான்னம் ஒருவகை உயர்ந்த நெல்
இராசி வரிசை ; கூட்டம் ; குவியல் ; இனம் ; மொத்தம் ; அதிட்டம் ; மேட முதலிய இராசி ; சுபாவம் ; பொருத்தம் ; இராசிக் கணக்கு ; சமாதானம் ; இராசி 12 ; மேடம் , இடபம் , மிதுனம் , கற்கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் .
இராசிக்கணக்கு அசல்தொகை , காலம் ஆகியவற்றை இராசிமுறையில் பெருக்கியும் வகுத்தும் கணக்கிடும் கணக்குவகை .
இராசிக்காரன் அதிட்டமுள்ளவன் , நற்பேறு உடையான் .
இராசிகட்டுதல் தவச விளைவு முன்மதிப் பளவுக்கு வருதல் .
இராசிகம் இயற்கணிதம் ; அமிசம் ; அரசனால் வருவது ; ஓர் இராசி ; குவியல் ; நரம்பு ; வரி .
இராசிகாணுதல் கண்டுமுதற்கணக்குக் கட்டுதல் ; காண்க : இராசிகட்டுதல் .
இராசிகூடுதல் காண்க : இராசிகாணுதல் .
இராசிகை வயல் ; இரேகை ; ஒழுங்கு ; கேழ்வரகு .
இராசிசக்கரம் இராசி மண்டலம் ; இராசிகளை எழுதியடைத்த சக்கரம் .
இராசிநாமா உடன்படிக்கைப் பத்திரம் ; உத்தியோகத்தினின்று விலகிக் கொள்வதற்காக எழுதும் பத்திரம் .
இராசிப்படுதல் மனம்பொருந்துதல் .
இராசிப்பணம் தனித்தனி எண்ணாமல் மொத்த அளவில் எண்ணும் பணம் .
இராசிப்பிரிவு கோள்கள் இராசியைக் கடக்கை .
இராசிப்பொருத்தம் திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .
இராசபதவி அரசனிலை .
இராசபாட்டை போக்குவரத்துக்குரிய பெருவழி .
இராசபாதை போக்குவரத்துக்குரிய பெருவழி .
இராசபாவம் அரசத் தன்மை .
இராசபிளவை முதுகிலுண்டாகும் பெரும் புண் .
இராசபுத்தி கூர்த்த அறிவு ; தனிச் சிறப்பான அறிவு .
இராசபுத்திரன் அரசன் மகன் , கோமகன் .
இராசபோகம் அரசன் நுகர்தற்குரிய இன்பம் ; அரசர்க்குரிய பாதுகாவல் வரி .
இராசமகிஷி அரசன் மனைவி .
இராசமண்டலம் அரசர் கூட்டம் .
இராசமணி நெல்வகை .
இராசமாநகரம் அரசன் வாழும் பேரூர் ; தலைநகரம் .
இராசமாநாகம் கருவழலைப் பாம்பு .
இராசமாமந்தம் ஒருவகைப் பாம்பு .
இராசமார்க்கம் காண்க : இராசபாட்டை .
இராசமாளிகை அரசன் அரண்மனை .
இராசமானியம் அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம் .
இராசமுடி அரசன் முடி ; தெய்வச்சிலைகளுக்குச்சாத்தும் சாயக்கொண்டை .
இராசமுத்திரை அரசன் இலச்சினை , அரசனின் அடையாளக்குறி .
இராசமோடி அரச மிடுக்கு .
இராசயுகம் பாலை .
இராசயோகம் அரசனாவதற்குரிய கோள்நிலை ; அரசனுக்குரிய இன்ப வாழ்வு ; யோகநிலை வகையுள் ஒன்று .
இராசராசன் மன்னர்மன்னன் , பேரரசன் , சக்கரவர்த்தி ; குபேரன் ; இராசராசசோழன் .
இராசராசேச்சரம் இராசராசன் கட்டிய சிவன்கோயில் , தஞ்சாவூர்ப் பெரியகோயில் .
இராசராசசேச்சுவரி உமை வடிவங்களுள் ஒன்று .
இராசரிகம் அரசாட்சி .
இராசரிஷி அரசனாயிருந்து முனிவனானவன் .
இராசருகம் அகில் ; வெள்ளைத் தும்பை .
இராசலட்சணம் அரசனுக்குரிய உடற்குறி .
இராசலட்சுமி எட்டு லட்சுமிகளுள் ஒருத்தி , அரசுரிமையாகிய செல்வம் ; அரசருடைய ஆளுகையைத் துலங்கச் செய்பவள் .
இராசவசித்துவம் அரசனை வசமாக்கல் .
இராசவசியம் அரசனை வசமாக்கல் .