இராசிப்பொன் முதல் - இராமாயணம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இராமராச்சியம் இராமனுடைய அரசாங்கம் போன்ற சிறந்த அரசாங்கம் ; நல்லரசாட்சி .
இராமலிங்கம் இராமனால் வழிபடப்பட்ட இராமேச்சரத்துச் சிவபிரான் ; ஆறு படி கொண்ட மரக்கால் .
இராமவாசகம் தவறாத வாக்கு .
இராமன் சநதிரன் ; பரசுராமன் ; தசரதராமன் ; பலராமன் .
இராமன்சம்பா சம்பாவகை .
இராமாயணம் இதிகாசங்களுள் ஒன்று ; திருமால் அவதாரமான இராமனது வரலாற்றைக் கூறும் நூல் .
இராசியெழுத்து குறியீட்டெழுத்துவகை .
இராசிலம் சாரைப்பாம்பு .
இராசிவட்டம் காண்க : இராசிமண்டலம்
இராசீகம் அரசனால் வருவது .
இராசீவம் தாமரை ; வரைக்கெண்டை ; மான்வகை .
இராசை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார்கோயில் என்னும் தலம் .
இராசோத்துங்கன் அரசருள் சிறந்தவன் .
இராட்சச அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தொன்பதாம் ஆண்டு .
இராட்சசம் காண்க : இராக்கதம்
இராட்சசன் அரக்கன்
இராட்டிரம் நாடு ; நகரிலுள்ள மக்கள் ; உற்பாதம் .
இராட்டினஞ்சுற்றுதல் நூல் நூற்றல் ; சுழல் தேரைச் சுற்றுதல் .
இராட்டினத்தொட்டி இராட்டினம்போலச் சுழலும் தொட்டி .
இராட்டினம் நூற்கும் பொறி ; நீரிறைக்கும் கருவி ; நூல் சுற்றும் கருவி ; பஞ்சரைக்கும் கருவி ; ஏறி விளையாடும் சுழல்தேர் .
இராட்டினவாழை வாழைவகை .
இராட்டினவூஞ்சல் சுழலும் ஊசல் .
இராட்டு இராட்டினம் ; தேன்கூடு .
இராடம் வெண்காயம் ; கழுதை ; இலாடம் ; பெருங்காயம் .
இராணம் இலை ; மயிலின் தோகை .
இராணி அரசி
இராணிவாசம் அரசியின் அந்தப்புரம் .
இராணுவம் படை .
இராணுவமோடி அணிவகுப்பு .
இராத்திரி இரவு ; மஞ்சள் .
இராத்திரிகாசம் வெள்ளாம்பல் .
இராத்திரிவேதம் சேவல் .
இராதம் கடைக்கொள்ளி .
இராதாரி சங்கத்தின் அனுமதிச் சீட்டு .
இராதினி சல்லகிமரம் ; ஓர் ஆறு ; வச்சிரப்படை ; மின்னல் ; இடி .
இராதை கண்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி ; விசாகம் ; விஷ்ணுகிராந்தி ; நெல்லி ; மின்னல் ; கன்னனின் செவிலித்தாய் .
இராந்து இடுப்பு
இராந்துண்டு இலந்தை .
இராப்பண் இராக்காலத்தில் பாடுதற்குரிய பண்கள் .
இராப்பத்து திருமால் கோயில்களில் ஏகாதசியை ஒட்டி இரவில் நடைபெறும் சாற்றுமுறை விழா .
இராப்பாடி விடியுமுன் இரவில் வீட்டுக்கு வீடுவந்து பாடுபவன் .
இராப்பாடிக்குருவி இரவில் பாடும் குருவிவகை .
இராப்பாலை மரவகை .
இராப்பிச்சை சந்திப்பிச்சை ; முன்னிரவில் வரும் பிச்சைக்காரன்
இராப்பிரமாணம் கோளின் மறைவிலிருந்து உதயம் வரையுள்ள பொழுதின் அளவு .
இராப்பூ இரவில் மலரும் மலர்கள் ; ஆம்பல் முதலியன .
இராப்போசனம் இராச் சாப்பாடு ; கிறித்தவசபைச் சடங்குகளுள் ஒன்று .
இராமக்கன் சிச்சிலுப்பை வகை .
இராமகன் சிச்சிலுப்பை வகை .
இராமக்கிரி குறிஞ்சிப் பண்வகை .
இராமக்கோவை கற்கோவை என்னும் கொடிவகை .
இராமக்கோழி நீர்க்கோழி .
இராமகவி ஒரு பண் .
இராமசீத்தா மரவகை .
இராமசேது இராமர் அணை .
இராமடங்கா ஒருவகைப் பொன் நாணயம்
இராமடம் பெருங்காயம் .
இராமதுளசி துளசிவகை .
இராமதூதன் அனுமன் .
இராமநவமி சித்திரை மாதத்து வளர்பிறையில் வரும் நவமி திதி ; இராமன் பிறந்த நாள் .
இராமநாதன் இராமமேச்சரத்தில் இராமனால் வழிபடப்பட்ட லிங்கம் .
இராமநாதன்சம்பா சம்பா நெல்வகை .
இராமப்பிரியா ஒரு பண் .
இராமபாணம் இராமர் அம்பு ; ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி ; பாச்சைவகை ; மல்லிகைவகை ; ஒருவகை மருந்து .
இராமம் அழகு ; விரும்பத்தக்கது ; வெண்மான் ; வெண்மை ; கருமை .
இராமமுழியன் கடல்மீன்வகை .
இராசிப்பொன் கலப்பற்ற பொன் .
இராசிபண்ணுதல் சமாதானம் செய்தல் .
இராசிபுடம் இராசிகளில் கோள் நிற்கும் நிலையைச் சரிவரப் பார்க்கை .
இராசிமண்டலம் கோள்கள் செல்லும் வீதி .
இராசியடி பொலியடித் தவசம் ; அளந்த பின் கிடக்கும் களநெல்
இராசியத்தானம் மறைவிடம் .
இராசியதிபதிப்பொருத்தம் திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .
இராசியம் மறைவு ; பெண்குறி ; தாமரை .
இராசியளத்தல் குவித்த தவசத்தை அளத்தல்