சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இரிபு | அச்சம் ; ஓடுதல் ; தோல்வி ; பகை ; பகைவன் ; வெறுப்பு . |
| இரிபேரம் | வெட்டிவேர் . |
| இரிமான் | எலிவகை . |
| இரியல் | அச்சத்தால் நிலைகெடுகை ; விட்டுப் போதல் ; விரைந்து செல்கை ; அழுகை . |
| இரியல்போக்குதல் | சாய்ந்துகொடுத்தல் |
| இரியல்போதல் | தோற்றோடுதல் . |
| இரீதி | பித்தளை ; இயற்கைக் குணம் ; இரும்புக்கறை ; எல்லை ; கிட்டம் ; நாட்டு வழக்கம் ; நீர் பொசிந்தொழுகல் ; பாரம்பரியமான வழக்கம் ; பித்தளைப் பஸ்பம் . |
| இரு | பெரிய ; கரிய ; இரண்டு . |
| இருக்கணை | சித்திரவேலைக்குதவும் மரவகை . |
| இருக்கம் | நட்சத்திரம் கரடி ; இராசி . |
| இருக்கமாலி | 766 முழ அகலமும் உயரமும் உள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுகள் கொண்ட கோயில் . |
| இருக்கன் | இருக்குவேதமுணர்ந்தவன் ; பிரமன் . |
| இருக்காழி | இரண்டு விதைகளையுடைய காய் . |
| இருக்கு | வேதமந்திரம் ; இருக்குவேதம் . |
| இருக்குக்குறள் | சிறிய பாவகை . |
| இருக்குகை | இருத்தல் . |
| இருக்குதல் | இருத்தல் . |
| இருக்குவேதம் | முதல் வேதம் |
| இருக்கை | உட்கார்ந்திருக்கை ; ஆசனம் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; கோள்கள் இருக்கும் இராசி ; ஊர் ; கோயில் ; அரசர் போர்புரியக்காலம் கருதியிருக்கும் இருப்பு . |
| இருகண் | ஊனக்கண் ஞானக்கண் . |
| இருகரையன் | இரண்டு நோக்குள்ளவன் . |
| இருகால் | அரை ; இருமுறை ; இரண்டு பாதம் , கவறாட்டத்தில் குறித்த ஓர் எண் . |
| இருகுரங்கின்கை | முசுமுசுக்கை . |
| இராமாலை | கருக்கல் நேரம் ; இருளடைந்த மாலை நேரம் . |
| இராமாவதாரம் | தசரத ராமனாக அவதரித்த திருமால் பிறப்பு ; கம்பராமாயணம் . |
| இராமாறு | இராத்தோறும் . |
| இராமானம் | தினந்தோறும் உள்ள இரவின் அளவு ; இரவு . |
| இராமானுசகூடம் | வைணவ வழிப்போக்கர்கள் தங்கும் சாவடி . |
| இராமானுச தரிசனம் | விசிஷ்டாத்துவைதம் , இராமானுசரால் நிறுவப்பட்ட தத்துவம் . |
| இராமானுசம் | வைணவர் பயன்படுத்தும் ஒருவகைச் செப்புப் பாத்திரம் . |
| இராமானுசீயர் | இராமனுசர் மதத்தைப் பின்பற்றுவோர் , ஸ்ரீவைணவர் . |
| இராமிலன் | கணவன் ; மன்மதன் . |
| இராமேசுரம் வேர் | சாயவேர் . |
| இராமேசுவரம் | இராமனால் நிறுவப்பட்ட ஒரு சிவத்தலம் . |
| இராமை | மன்மதநூல் கற்றவள் ; சிறுவழுதலை . |
| இராயசக்காரன் | எழுத்து வேலைக்காரன் ; எழுத்தன் . |
| இராயசம் | எழுத்து வேலை ; எழுத்து வேலைக்காரன் ; ஆணைப் பத்திரம் . |
| இராயணி | அரசி . |
| இராயர் | விசயநகர அரசர் பட்டப்பெயர் , மகாராட்டிர மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர் . |
| இராயன் | அரசன் ; பழைய நாணயவகை . |
| இராயிரம் | இராண்டாயிரம் . |
| இராவடம் | அசோகு ; அராவுந்தொழில் . |
| இராவடி | ஏலம் ; பேரேலம் . |
| இராவண சன்னியாசி | தவ வடிவிலிருந்து அவச்செயல் செய்பவன் ; மோசடிக்காரன் . |
| இராவணம் | விளக்கு ; அழுகை . |
| இராவணன் | கடவுள் ; இலங்கையை ஆண்ட மன்னன் |
| இராவணன் புல் | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணன் மீசை | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணன் மோவாய்ப்புல் | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணாகாரம் | பயங்கர வடிவம் . |
| இராவணாசுரம் | வீணைவகை . |
| இராவணாத்தம் | ஒருவகைச் சிறு வீணை . |
| இராவணி | இராவணன் மகனான இந்திரசித்து . |
| இராவதம் | சூரியன் குதிரை ; மேகலோகம் . |
| இராவதி | ஒரு கொடி ; ஓர் ஆறு ; யமபுரம் . |
| இராவிரேகு | தலையணிகளுள் ஒன்று ; அரசிலைச் சுட்டி ; அரைமூடி . |
| இராவுத்தராயன் | குதிரைச் சேவகரின் தலைவன் . |
| இராவுத்தன் | குதிரை வீரன் ; தமிழ் முகம்மதியருள் ஒரு பிரிவினரின் பட்டப்பெயர் . |
| இராவுத்தாங்கம் | ஒருவகைக் கொண்டாட்டம் . |
| இராவுதல் | அராவுதல் . |
| இராவைக்கு | காண்க : இரவைக்கு . |
| இராவோன் | சந்திரன் . |
| இரிக்கி | பெருங்கொடிவகை . |
| இரிகம் | இதயம் , மனம் . |
| இரிசல் | பிளவு ; மனமுறிவு . |
| இரிசால் | காண்க : இருசால் |
| இரிசியா | பூனைக்காலி . |
| இரிஞ்சி | மகிழ் . |
| இரிஞன் | பகைவன் . |
| இரிட்டம் | நன்மை ; வாள் ; தீமை ; பாவம் . |
| இரிணம் | உவர்நிலம் . |
| இரித்தல் | தோற்றோடச் செய்தல் ; கெடுத்தல் ; ஓட்டுதல் . |
| இரித்தை | சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி என்னும் திதிகள் ; நாழிகை . |
| இரிதல் | கெடுதல் ; ஓடுதல் ; விலகுதல் ; வடிதல் ; அஞ்சுதல் . |
| இரிப்பு | அச்சுறுத்தல் ; ஓட்டுதல் ; தோல்வியுறச்செய்தல் . |
|
|
|