இருகுறள் நேரிசைவெண்பா முதல் - இருதுமதி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இருத்தல் உளதாதல் ; நிலைபெறுதல் ; உட்காருதல் ; உள்ளிறங்குதல் ; உயிர் வாழ்தல் ; அணியமாயிருத்தல் ; உத்தேசித்தல் ; ஒரு துணைவினை ; முல்லை உரிப்பொருள் .
இருத்தி சித்தி ; வட்டி .
இருத்திப்பேசுதல் அழுத்திச் சொல்லுதல் .
இருத்திப்போடுதல் நிலைக்கச்செய்தல் ; அசையாமல் செய்தல் .
இருத்தினன் இருத்துவிக்கு ; யாக புரோகிதன் , வேள்வி செய்து வைப்பவன் .
இருத்து வயிரக்குற்றங்களுள் ஒன்று ; நிலையான பொருள் ; அமுக்குகை .
இருத்துதல் உட்காரச் செய்தல் ; தாமதிக்கச்செய்தல் ; அழுத்துதல் ; அடித்து உட்செலுத்துதல் ; நிலைபெறச் செய்தல் ; கீழிறக்குதல் .
இருத்துவிக்கு காண்க : இருத்தினன் .
இருத்தை சேங்கொட்டை ; சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி எனப்படும் நான்கு , ஒன்பது , பதினான்காம் பக்கங்கள் ; இருபத்து நான்கு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை ; நாழிகை வட்டில் .
இருதம் காண்க : உஞ்சவிருத்தி ; நீர் ; மெய்ம்மை .
இருதயகமலம் உள்ளத்தாமரை .
இருதயத்துடிப்பு மார்பு படபடவென்று அடித்துக்கொள்ளுகை .
இருதயம் இதயம் ; மனம் ; நேசத்துக்கு உறைவிடமான இடம் ; கருத்து ; நடு .
இருதலை இருமுனை .
இருதலைக்கபடம் விலாங்குமீன் .
இருதலைக்கொள்ளி இரு முனையிலும் தீயுள்ளகட்டை ; எப்பக்கத்தும் துன்பஞ் செய்வது .
இருதலை ஞாங்கர் இருதலையும் கூருள்ள முருகன் வேல் .
இருதலைநோய் எழுஞாயிறு என்னும் நோய் .
இருதலைப் பகரங்கள் எழுத்துகளை உள்ளடக்கி நிற்கும்[ ] என்னும் குறியீடுகள் .
இருதலைப்பாம்பு இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு .
இருதலைப்புடையன் இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு .
இருதலைப்புள் இரண்டு தலைகளுள்ள பறவை .
இருதலைமணியம் நண்பன்போல் நடித்து இருவரிடையே கலகம் விளைவிக்கும் தொழில்
இருதலைமணியன் பாம்பில் ஒருவகை ; கோள்சொல்லுவோன் .
இருதலை மாணிக்கம் ஒரு மந்திரம் ; முத்தி பஞ்சாட்சரம் .
இருதலைமூரி காண்க : இருதலைப்பாம்பு .
இருதலைவிரியன் பாம்புவகை .
இருதாரைக் கத்தி இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி .
இருதிணை உயர்திணை அஃறிணை ; இயங்குதிணை நிலைத்திணை .
இருது ருது ; இரண்டு மாத பருவம் ; மகளிர் பூப்பு ; முதற் பூப்பு ; தக்க காலம் ; கடவுளின் முத்தொழில் ; பிரபை .
இருதுகாலம் மாதவிடாய்க் காலம் ; கரித்தரிக்கும் காலம் .
இருதுசங்கமணம் பூப்புற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யுஞ் சடங்கு .
இருதுசந்தி இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம் .
இருதுசாந்தி பூப்புற்ற பெண்ணுக்குத் தீங்கு நேரிடாதபடி செய்யும் சடங்கு ; சோபனகலியாணம் ; சாந்திக் கலியாணம் .
இருதுநுகர்பு பருவங்கட்குரிய அனுபவம் .
இருதுமதி பூப்படைந்த பெண் , கருத்தரித்தற்குரிய நிலையிலிருப்பவள் .
இருகுறள் நேரிசைவெண்பா இரண்டு குறட்பாக்களைக் கொண்ட நேரிசைவெண்பாவகை .
இருகை இரண்டு கைகள் ; இருபக்கம் .
இருகோட்டறுவை முன்னும் பின்னும் தொங்கலாக விடும் துகில் .
இருங்கரம் பதக்கு .
இருசகம் மாதுளை .
இருசாதி கலப்புச் சாதி .
இருசால் தண்டற்பணம் செலுத்துகை ; கருவூலத்துக்கு அனுப்பும் பணம் .
இருசி பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; ஒரு பெண்பிசாசு .
இருசீர்ப்பாணி இரட்டைத் தாளம் .
இருசு நேர்மை ; வண்டியச்சு ; மூங்கில் .
இருசுகந்தபூண்டு மருக்கொழுந்து .
இருசுடர் சந்திரசூரியர் .
இருசுழி இரட்டைச்சுழி .
இருஞ்சிறை காவல் ; மதில் ; நரகம் .
இருட்கண்டம் கழுத்தணிவகை .
இருட்கண்டர் சிவபெருமான் .
இருட்சரன் இருட்டில் திரிவோன் ; இராக்கதன் .
இருட்சி இருள் ; இருட்டு ; மயக்கம் .
இருட்டு இருள் ; அறியாமை .
இருட்டுதல் இருளடைதல் ; மந்தாரமிடுதல் .
இருட்பகை சூரியன் .
இருட்பகைவன் சூரியன் .
இருட்படலம் இருளின் தொகுதி .
இருட்பிழம்பு இருளின் தொகுதி .
இருட்பூ ஒருவகை மரம் .
இருடி ஆந்தை ; முனிவன் வேதம் .
இருடிகம் இந்திரியம் .
இருடீகம் இந்திரியம் .
இருடிகேசன் திருமால் .
இருடீகேசன் திருமால் .
இருண்டி சண்பகம் .
இருண்மதி தேய்பிறைச் சந்திரன் ; அமாவாசை .
இருண்மலம் ஆணவமலம்
இருண்மை இருளுடைமை ; இருண்டிருக்கும் தன்மை .
இருணபாதகன் கடன் தீர்க்காமல் மோசம் செய்பவன் .
இருணம் உவர்நிலம் ; கடன் ; கழிக்கப்படும் எண் ; கோட்டை ; நிலம் ; நீர் .
இருணாள் இருள் நாள் ; தேய்பிறைப் பக்கத்து நாள் .
இருணி பன்றி .
இருணிலம் நரகம் .